Followers

Sunday, 15 July 2012

நீரிழிவுக்காரர்களுக்கு ஆலோசனை





சர்க்கரை நோய் இன்று உலகை ஆட்டிபடைத்து கொண்டு மக்களின் இன்பத்தை குலைத்து வருகிறது.. வராமல் தடுப்பது எப்படி? மேலும் வந்தபின் நம்மை எப்படி கட்டுபாட்டுடன் வைத்துக்கொள்வது எப்படி?

சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு, கொழுப்� ��ு, சத்துள்ள பண்டங்களை எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது உடனே ஆறாது. அதனால் கை மற்றும் கால்களை காயம் படாமல் மேலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நார்சத்து மிகுதியான உணவுகளில் ஒன்று அரிசி உணவுகள், அதனால் அரிசி வகை உணவை குறைத்து கோதுமை, ராகி போன்ற நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும்.

சர்க்கரை நோய் அதிகமான ால் முதலில் பாதிக்கபடுவது கண்கள் அதை தொடர்ந்து கிட்னி, இதயம், பலவீனப்படும். இதை அடுத்து கை கால்கள் தோல்

போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவு கொழுப்பு இனிப்பு எண்ணெயில் செய்த பலகாரங்கள் மற்றும் அதிகமாக சர்க்கரை சேர்த்து கொள்வ-து மேலும் உடற்பயிற்சி செய்யாமல் எடை கூடுவது இவையெல்லாம் சர்க்கரை வியாதிக்கு முக்கிய கா� ��ணங்கள்.

நீரிழிவு என்பது ஒரு குறைபாடுதான். அது ஒரு பெரிய நோய் அல்ல ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் உணவுகட்டுபாடு மூலம் குணப்படுத்தலாம். பரிசோதனைகள் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளலாம். முக்கிய டாக்டர்களின் ஆலோசனை பெயரில் மருந்துகள் அல்லது இன்சூலின் தேவைபட்டால் தினசரி 2 தடவை ஊசி போட்டு கொள்ள வேண்டும்.

தினசரி காலை உடற்பயிற்சி செய்வது அவசி யம். நாம் சாப்பிடும் உணவை 5 அல்லது 6 பிரிவுகளாக்கி சாப்பிடலாம். தாகம் அதிகமாகும் போது நீர் மோர் மிகவும் நல்லது. பழங்களில் மாம்பழம், திராட்சை சப்போட்டா அன்னாசி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மலைப்பழம் எப்போதாவது 1 அல்லது 2 சாப்பிடலாம். பருப்பு வகைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். காப்பி, டீ போன்ற பானங்களை சர்க்கரை போடாமல் சாப்பிட பழகி கொள்ள வேண்டும். தர்பூசணி பழம் மிகவும் � ��ல்லது.

காய்கறிகளில் பாகற்காய் கோவைக்காய் வாழைத்தண்டு சிறந்தது. கிழங்கு வகைகளை திரும்பிக்கூப் பார்க்காதீர்கள். அவை வாய்க்குத்தான் ருசி நோயை கட்டுக்குள் வைக்காது. இயற்கை வைத்தியத்தில் வேப்பங்கொழுந்து கறிவேப்பிலை நாவற்பழகொட்டையின் பொடி இவை சர்க்கரை அளவை கட்டுபடுத்தும். அந்த காலத்தில் இன்சூலின் பற்றி தெரிந்திராதக் கிராம மக்களின் மருந்து வேப்பங்கொழுந்து த ான். தினசரி காலை ஒரு நெல்லிகாய் அளவு வேப்பங்கொழுந்தை அரைத்து வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தனர். இது நிச்சயம் பலன் தரும் இயற்கை வைத்தியம்.

நீரிழிவு நோய் இப்போ எல்லா வயதினரையும் தாக்கி வருவதை பார்க்கிறோம். சர்க்கரை நோயை இன்சூலின் மற்றும் மாத்திரைக் மூலம் கட்டுபடுத்தலாம் என்றாலும் முக்கியமானது சுயக்கட்டுபாடுதான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் கட்டுபாடுடன் இ ருப்போம்.வருமுன் பாதுகாப்பாக இருப்போம்.     





No comments:

Post a Comment

Popular Posts