என் ஆண் உறுப்பு செக்ஸ்இல் இருக்கும்போது கூட தோல் உரியாமல் அப்படியே இருக்கிறது அதேபோல நான் என் உறுப்பு மொட்டையும் (penis glans) கூட பார்த்ததில்லை, மேல் தோல் ரொம்ப டைட் ஆக இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு? என உங்களுக்குள்ளேயே யாருக்கும் சொல்லிக் கொள்ள முடியாத பிரச்சினைக்கு தீர்வைத் தேடித் திரிபவர்களா நீங்கள் இதே உங்கள் பிரச்சினைக்கான தீர்வு.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமாசிஸ் ( Phimosis) என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும்.
தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு சாதாரணமான ஆண்குறி விரைப்படைந்தால், தோல் அதுவாகவே பின்னோக்கி நகர்ந்து மொட்டு வெளியே தலை காட்ட வழி வகுக்கும். அல்லது, நீங்கள் தோலை பின்னால் இழுத்து விட்டால், மொட்டு வெளியே முழுமையாக தெரிந்து விடும்.
ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போது, இயற்கையிலேயே தோல் ஆண்குறி மொட்டை மூடியபடி தான் இருக்கும். அந்தப் பையன் டீன் ஏஜ் பருவத்தை அடையும்போது, அவனுடைய தோல் பின்னோக்கி தளர்ந்து விடும். அதிக பட்சமாக பதினெட்டு வயதுக்குள் தோல் (Foreskin) தளர்ந்து, ஆண் குறியின் மொட்டை முழுமையாக வெளியே தெரியுமாறு செய்யும்.
பிரச்சனையின் காரணங்கள்:
1. வித்தியாசமான சுய இன்ப நிலை: உதாரணமாக, தலைக் குப்புறப் படுத்து, தலையணையில் ஆண் குறியைத் தேய்த்தல்.
2. பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனை ( Congenital Phimosis).
3. ஆண் குறித் தோலை கையால், வேகமாக இழுத்ததால் ஏற்படும் காயம்.
4. ஆண் குறி மொட்டு வீங்கி இருத்தல் ( balanitis).
5. நீரிழிவு நோயால் ஏற்படும் நோய்.
6. சுகாதாரமின்மை.
இந்தப் பிரச்சனைக்கு முடிவு:
இது ஒரு சாதாரணமான பிரச்சனைதான், எளிதாக தீர்த்து விடலாம்.
No comments:
Post a Comment