Followers

Tuesday, 7 February 2012

பர்வத யோகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ? ஜோதிடர் ஆர் ராவணன்



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு பகவான் மேஷம், ரிஷபம், கடகம். கன்னி, மகரம், ஆகிய ராசிகளில் இருந்து ராகுவிற்கு ஒன்று, நான்கு, ஏழு, பத்து, ஆகிய இடங்களில் இடைவிடாது எந்த கோள் ஆவது இருப்பின் அது பர்வத யோகமாகும். இதன் பலன் என்னவென்றால் அந்த ஜாதகன் செல்வ சீமானாய் அனைத்து வசதிகளையும் பெற்று வாழ்வான். 
பொதுவாகவே ராகு கிரகத்தை அதிர்ஷ்டத்தை தரக்கூடிய யோகக்காரன் என்று கொள்ள முடியும். ஆனால் இது தானாக யோகத்தை கொடுக்காது. தான் இருக்கும் வீட்டு அதிபதி , தன்னுடன் இருக்கும் கோள்கள் , தன்னை பார்த்த கோள்கள் போன்றவை தர வேண்டிய பலன்களை இது பெற்று தரும்.  
ராகுவை போல் கொடுப்பவனும் இல்லை. 
கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை. 
என்ற பழமொழி ராகு யோகத்தை கொடுப்பவன் என்பதை காட்டுகிறது. 
இது கொடுக்ககூடிய கோலே ஆனாலும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய ஐந்து ராசிகளில் இருந்தால்தான் சுயமாக யோகத்தை கொடுக்கும்.  
ராகு கேதுக்கள் கேந்திர ஸ்தானமான ஒன்று , நான்கு , ஏழு, பத்து, போன்ற இடங்களில் இருந்து , திரிகோண அதிபதிகள் என்று சொல்லக்கூடிய   ஐந்து  ஒன்பது போன்ற வீட்டுக்கு அதிபதியான கிரகங்களுடன் சேர்ந்தும்  திரி கோணங்கள் என்று சொல்லக்கூடிய ஐந்து ஒன்பது போன்ற இடங்களில் இருந்து கேந்திர ஸ்தான அதிபதிகள் என்று சொல்லக்கூடிய  ஒன்று  நான்கு ஏழு பத்து ஆகிய வீட்டு அதிபதிகளுடனும், சேர்க்கை, அல்லது பார்வை, பெற்றிருப்பின் அது  ராஜ யோகத்தை உண்டாக்கும்.   
சந்திரனுக்கு ஐந்து ஒன்பது  பத்து பதினொன்று போன்ற இடங்களில் ராகு இருந்தால் இளமை காலம் முதலே ராஜ யோக   வாழ்வும்  வயதான காலத்தில் மிகப் பெருஞ் செல்வத்துடன் கூடிய வாழ்வும் உண்டாகும்.
மேலும் சந்திரனுக்கோ , லக்கினத்திற்க்கோ மூன்று, ஆறு, பதினொன்று, இந்த இடங்களில்  ராகு இருந்தால் நிறைந்த ஆயுளும் செல்வமும் பெறுவான்.  

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328 .  இந்தியா. தமிழ் நாடு 

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328 
                                                 இந்தியா. தமிழ் நாடு


http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com


  • No comments:

    Post a Comment

    Popular Posts