Followers

Wednesday, 25 July 2012

இதய நோய்க்கு வழிவகுக்கும் நீரிழிவு நோய்








தற்போதுள்ள உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.மேலும் இதய நோயானது மற்றவர்களுக்கு வருவதை விட இருமடங்கு அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் வருகிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் நீரிழிவு இருந்தால் இதயத்தில் இருக்கும் தமனிகள் மிகவும் வேகமாக கடினமடையும். இதனால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமடையும்.
மேலும் ந� ��து உடலில் இரு வகையான கொலஸ்ட்ரால்கள் இருக்கின்றன. அது எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல் இவை இரண்டும் லிப்போ புரோட்டீன்கள். இவைகள் கொலஸ்ட்ராலை உடலின் சுழற்சிக்கு சுமந்து செல்பவை
.
இவற்றில் எச்.டி.எல் உடலில் இருந்து கொலஸ்ட்ராலை நீக்கவும், எல்.டி.எல் கொலஸ்ட்ராலை இரத்த நாளங்களில் சேமிக்கவும் செய்கின்றன.
அந்த சுழற்சி யின் போது உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால்கள் இருந்தால், எல்.டி.எல் இரத்த நாளங்களில் அளவுக்கு அதிகமாக சேமிக்கத் தொடங்கும்.
அவ்வாறு இருந்தால் எச்.டி.எல் அந்த கொலஸ்ட்ராலை முழுவதையும் நீக்க முடியாமல், அவை இரத்த நாளங்களில் அப்படியே தங்கி, நாளங்களின் இடைவெளியானது குறைந்து, இரத்த ஓட்டமானது தடைபடும். இதனால் இரத்தக்கட்டிகள், மாரடைப்பு மற்றும் பக்க� �ாதம் போன்றவை ஏற்படக்கூடும்.
மேலும் நீரிழிவு இருப்பவர்கள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் உடனே அதற்கேற்ற மருந்தையும் மருத்துவரிடம் சென்று கேட்டு வாங்கி போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும் அவர்கள் சில ஆரோக்கியமா� �� வழிகளையும் கூறுகின்றனர்.
உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க சில டிப்ஸ்:
1. கொழுப்பு அதிகம் அடங்கியுள்ள எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில்களை தவிர்க்க வேண்டும். மேலும் எந்த ஒரு கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
2. அதிகமான அளவு தானிய வகைகளை உண்ண வேண்டும். கொழுப்புகள் குறைவாக இர ுக்கும் பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
3. குறைந்த அளவு ஆட்டுக்கறியையும், அதிக அளவு மீன்களையும் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதிக அளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளான காய்கறிகள் உண்ண வேண்டும். பழங்களையும் அதிக அளவு உட்கொள்ளலாம்.
4. தினமும் 30 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5. புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மருத்துவரிடம் தவறாமல் செல்ல வேண்டும்.
நீரிழிவு உள்ளவருக்கு இதய நோய் இருப்பதற்கான அறிகுறிகள்:
மனஅழுத்தம் அதிகமாதல், நெஞ்சில் அடிக்கடி வலி மற்றும் கைகள், கால்கள், வயிறு போன்றவற்றில் ஏதேனும் கோளாறு, மூச்சு விடுவதில் கஷ்டம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.





No comments:

Post a Comment

Popular Posts