Followers

Tuesday, 24 July 2012

எளிய வைத்திய முறைகள்--இய‌ற்கை வைத்தியம்





என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
ஒருமுறை என் தாயாருக்கு தென்னைமரத்துத் தேள் கொட்டிவிட்டது. நட்டுவாக்களிஎன்று சொல்வார்கள், அது கொட்டினால் பிழைப்பதறிது. வயது அவருக்கு 60 க்குமேல், மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு சென்று, ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்தும் கடைசியில் மருத்துவர் சொன்னார், "உறுதியாக எதுவும் சொல்ல முடியாது, உடல் முழுவதும் விஷம் பரவி இருக்கிறது, பிழைத்தால் அதிசயம்" என்று.
கவலையோடு உட்கார்ந்திருந்தோம் செய்வதறியாமல். வாசலில் ஒருவர் வந்து, "பசிக்கிறது ஏதாவது இருந்தால் உண்ணக் கொடுங்கள்" என்றார். நானோ கவலையில் இருந்ததால், "போய் பிறகு வாருங்கள்" என்றேன். உடனே என் தாயார் அப்போதிருந்த நிலையிலும் "அப்படிச் சொல்லாதே, உள்ளே சென்று அவருக்கு ஏதேனும் உண்ணக் கொடு" என்றார்கள். நான் வேண� �டா வெறுப்பாக ஒரு இலையில் அவருக்கு என் வீட்டில் இருந்ததை அளித்தேன். அவரும் உண்டார், கை கழிவிவிட்டு என்னிடம், "இந்த அமாவுக்கு என்ன?" என்று கேட்டார். நடந்ததை சொன்னேன், அவர், "தம்பீ, ஏழை சொல் அம்பலம் ஏறாது" நான் சொல்வதைக் கேட்கிறாயா என்றார்.
நானும் சரி என்றேன். அவர், "உடனே ஓடிப்போய் படிகாரம் பெரிய கட்டியாய் வாங்� �ி வா" என்றார், வாங்கி வந்தேன். பத்து பெரிய பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார், அதையும் கொண்டு வந்தேன். என் தாயாரின் கையில் தேள் கொட்டிய இடத்தில் படிகாரத்தை வைத்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கச் சொன்னார். அரைமணி நேரத்தில் என் தாயாரின் உடலில் நீலம் குறையத் துடங்கியது, என் தாயார் பிழைத்தார்- மருத்துவரால் கைவிடப்பட்ட என் தாயார் பிழைத்தார்.
இப்போது சொல்லுங்கள், நம் முன்னோர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்தவராக இருந்தனர், அவர்கள் செய்த ஒரே தவறு நுணுக்கத்தை அடுத்த தலைமுறைக்குச் சொல்லாமல் சென்றதுதான். நாமும் நம் பெரியோர்கள் சொன்ன எளிய வைத்திய முறைகளை ஆராய்ந்து பரிசோதனைக்குட்படுத்தி, பிறகு நிறைய மருந்துகள் இயற்கையாகவே பக்க விளைவில்லாத மருந்துகள் செய்யலாம் எ� ��்பதே என் கருத்து.





No comments:

Post a Comment

Popular Posts