Followers

Wednesday 25 July 2012

பிரண்டையின் மருத்துவ குணங்கள்.2--மருத்துவ டிப்ஸ்





ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரண்டையின் மருத்துவ குணங்கள்!

பிரண்டை என்ற மூலிகையைப் பற்றியும் அதன் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றியும், பிரண்டை உப்பு என்ற அதன் ஆண் - Bi - product பற்றியும் அதை எப்படித் தயாரிப்பது, சாப்பிட வேண்டிய அளவு ஆகியவற்றைக் கூறவும். நீரிழிவு, உடல் வலி,   H-Pylori போன்றவை பிரண்டையின் உபயோகத்தால் சரியாகிவிடும் என்று பலரும் சொல்கிறார்கள். இது சரியா?  

.< /b>கொடி இனத்தைச் சேர்ந்தது பிரண்டை. இதில் கணு நிறைய இருக்கும். சுவையில் இனிப்பும் கார்ப்புமுள்ளது. வீரியத்தில் சூடானது. ஜீரணத்தின் இறுதியில் புளிப்பாக மாறக் கூடியது. கப - வாத தோஷங்களைக் குறைக்கக் கூடியது. பித்த தோஷத்தைத் தூண்டிவிடும்.  பசியை நன்றாகத் தூண்டிவிடும். அப்பளத் தயாரிப்பாளர்கள், அப்பளத்தால் பசி மந்தம் ஏற்படக்கூடாது என்றெண்ணி அப்பளத் தயாரிப்� �ில் பிரண்டையைச் சேர்ப்பார்கள். 


வயிற்றில் கீரிப் பூச்சி, ஆசனவாய் அரிப்பு, மூல உபாதையில் இரத்தப் போக்கு உள்ளவர், மூல முளைகள், ரத்தபேதி, பசியின்மை, வயிற்றுவலி போன்ற உபாதைகளுக்கு பிரண்டையை நெய்விட்டு வதக்கி தனித் துவையலாக்கிச் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இவற்றை உடனே குறைக்கும்.  பிரண்டையை இடித்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை கோபி சந்தனம் அல்லது பூங்காவியுடன் சாப்பிட, மேற்குறிப்பிட்ட உபாதைகள் குணமாகும். மூக்கில் நிறைய ரத்தம்வரும்போது 2 -3 சொட்டு இதன் சாற்றை விட உடனே ரத்தம் நிற்கும்.  கணுவும் தோலும் நீக்கிய பிரண்டையை உளுந்துடன் ஊற வைத்து, வடை போல் தயார் செய்து சாப்பிட, வயிற்றில் அடிக்கடி வாயு நிறைந்து அடைத்து, மூச்சுவிடத் திணறலும் வலியும் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும்.  


மேலும் குடல் வாயு, கிருமி, வறண்ட மூலம் ஆகியவற்றிலும் நல்லது.  எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டால் இதன் சாற்றையோ, இதனைக் கணு நீக்கி வதக்கியோ சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் சாற்றைத் தடவுவது, சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துத் துணியை நனைத்து, எலும்பு முறிவின் மீது பட்டி கட்டி விடுவது போன்றவை, அங்கு ஏற்பட்ட வ� �ியைக் குறைக்கும். சவரத்தின்போது ஏற்படும் வெட்டுக்காயம், கத்தி வெட்டு முதலியவற்றில் ரத்தக் கசிவை நிறுத்த இதன் சாற்றைத் தடவலாம். 

காதுகளில் சீழ் வரும்போது காதைத் துடைத்துப் பின் இதன் சாற்றைவிடலாம்.  


கணுவையும் பட்டை ஓரத்தையும் கத்தியால் சீவி அகற்றி அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன ் உப்பு சேர்த்துச் சாப்பிட, கடுமையான வயிற்றுவலி நீங்கும். இளம் தண்டுகளை பாத்திரத்தினுள் மூடிக் கரியாக்கி 1 -3 சிட்டிகை தண்ணீரில் கரைத்துச் சாப்பிடுவதும் நல்லதே. இதுவே பிரண்டை உப்பு என்று அழைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. சித்த மருத்துவர்கள் பலரும் பிரண்டை உப்பு பற்றிய விளக்கங்களைத் தரக்கூடும்.  



நீரிழிவில் இதன் பயன் பாடு பற்றி ஆயுர்வேதம் எதுவும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்தாலும் கப - வாத தோஷங்களால் ஏற்படக்கூடிய நீரிழிவு உபாதைக்கு பிரண்டையைப் பயன்படுத்தலாம். வயிற்றிலுள்ள வலியைப் போக்குவதால், உடல் வலியையும் குறைக்கக் கூடும். குடல் கிருமிகள் பலதும் அழிவதால் H - Pylori யின் தாக்கம் குறையவும் பிரண்டையைப் பயன்படுத்தலாம்.  கசப்பான பிரண்டைத் துண்டு, நல்ல ஒரு மலமிளக்கியாகும். உ� ��ுந்துடன் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், ஆண்களுக்கு சம்போக சக்தி வளரும். கண்புரை நோய் மாற, பிரண்டையைத் துவையலாக்கிச் சாப்பிடலாம்.

 உடல் வலுவின்மை, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, மூட்டுகளில் ஏற்படும் வலி, பால்வினை நோய் போன்றவற்றுக்குப் பிரண்டையை உள்ளுக்கு உணவாகச் சாப்பிட்டுப் பய� �் பெறலாம். நெய்யில் பிரண்டையை வதக்கி, கோலரக்கு, கோதுமை மாவு, மருதம் பட்டை பொடி சேர்த்துப் பாலுடன் கலந்து பருக, முட்டியில் ஏற்படும் வலி குறையும். 

எலும்பு முறிவு விரைவில் கூடிவிடும் என்று சக்ரதத்தர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். பிரண்டையை இடித்துப் பிழிந்த சாறுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து, பிரண்டையின் தண்டை அரைத்து கல்கமாகச் சேர்த� �து எடுத்து இளந்தீயில் காய்ச்சி, மாதவிடாய் முடிந்த மறுநாள் முதல் பெண்கள் சாப்பிட, குழந்தைப் பேறு உண்டாகும் என்று வைத்ய மனோரமாவில் குறிப்பு காணப்படுகிறது.





No comments:

Post a Comment

Popular Posts