Followers

Monday 9 July 2012

மூச்சுப் பயிற்சி--உடற்பயிற்சி


உடற்பயிற்சிகளைச் செய்யும் போதே மூச்சுப் பயிற்சியும் கிடைத்து விடுகிறது. எடுத்துக் காட்டாக ஓடும் போது இதயத் துடிப்பு அதிகரித்து நிமிடத்த� �ற்கு 72 துடிப்பு என்பது 150 துடிப்புகள் வரை செல்கிறது. இதனால் இதயம் மற்றும் நுரையீரல் வேகமாகச் செயலாற்றுகின்றன. இதுவும் ஒரு வகையான மூச்சுப்பயிற்சிதான்.
 
மூச்சுப்பயிற்சி மூலம் இரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் மிக வேகமாக நடைபெறுகிறது. உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் தனியாக தினமும் மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. யோகாவில் 'பிரா ணயாமம்' என்ற தனி மூச்சுப் பயிற்சி உண்டு. சிலவற்றை இங்கு விளக்குகின்றேன்.
 
1. ஒரு நாசியை மூடுங்கள். இன்னொரு நாசி வழியாக முழுமையாக மூச்சை இழுத்து நான்கு வினாடிகள் வைத்திருங்கள். பிறகு அதே நாசி வழியே வெளியே மெதுவாக விட்டுவிடுங்கள். அடுத்த நாசியில் இதே பயிற்சி.
 
2. ஒரு நாசியை அடையுங்கள். � ��ன்னொரு நாசி வழியாக முழுமையாக மூச்சை இழுங்கள், நான்கு வினாடிகள் அப்படியே வைத்திருங்கள். பிறகு மூச்சை இன்னொரு நாசி துவாரத்தின் வழியாக மெதுவாக வெளியிடுங்கள்.
 
3. இரண்டு நாசிகள் வழியாவும் மெதுவாக மூச்சை முழுமையாக உள்ளே இழுங்கள், நான்கு வினாடிகள் மூச்சை நுரையீரலில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு நாசிகள் வழியாகவும் மூச்ச ை மெதுவாக வெளியில் விடுங்கள்.

4. தொடர்ந்து மூச்சை வேகமாக வெளியேற்றுங்கள். அப்படி 10 முறைதொடர்ந்து வெளியேற்றிய பின் இயல்பாக சுவாசியுங்கள். மேற்சொன்ன பயிற்சிகளை 10 நிமிடம் செய்யுங்கள். உடலில் புத்துணர்வு பாய்வதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

Popular Posts