Followers

Sunday, 22 July 2012

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சின்ன சின்ன உணவு மருத்துவம்--உணவே மருந்து





நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இத ைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சோரியாசிஸ் குணமாகும்!

சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாத ி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் � �தினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்.
நெஞ்சு வலியா?

அடிக்கடி நெஞ்சு வலியா? ஆனால் பரிசோதனையில் இதயம் நன்றாக இருக்கிறதா? இந்த நிலையில் மாதுளம்பழம், திராட்சைப்பழம் முதலியவற்றை வீட்டிலேயே சாறாக்கி அருந்தி வரவும். கொலாஸ� �ட்ராலை மாதுளம் பழமும், நெஞ்சு வலியை திராட்சை சாறும் நீக்கிவிடும். 35 வயதுக்கு மேல் ஃபாஸ்ட் புட் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் இதயநோய் அதிகரித்து வருவதற்கு துரித உணவு வகைகளும் காரணமாக இருக்கினறனவாம்.
பெண்களுக்கு வாழைப் பூ!

மாதவிலக்குக் கோளாறுகள் உள்ளவர்கள் அவிக்கப்பட்ட வாழைப் பூவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்த ால் இரத்தப் போக்குக் கட்டுப்படும். ஒழுங்கற்ற மாதவிலக்கை அறுபது கிராம் பீட்ரூட் குணமாக்கும். அறுபது கிராம் பீட்ரூட்டைச் சாறாக்கித் தினமும் அருந்தவும். மாதவிலக்கு நேரத்தில் இதைப் போல் மூன்று முறை தினமும் அருந்தவும். இல்லையெனில் சுக்குக்காபி அருந்திவரவும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கப் பசும்பால் அருந்துவதும் நல்லது.
எலுமிச்சம் பழச்சாறும் அதில் சே� �்க்கப்படும் ஒரு தேக்கரண்டித் தேனும் உடல் பருமனை மிக வேகமாகக் குறைக்கவல்லவை. இதனால் உடலுக்கும் சக்தி கிடைக்கும். ஆனால், இதனுடன் பசிக்கிறதே என்ற கண்டதையும் தின்றால் பலன் ஏதும் இராது.
தயிரைக் குறைக்கலாமா?

உடலில் விஷத்தன்மை ஏறாமல் இருக்க தயிர் உதவுகிறது. தினமும் தயிர் சேர்த்து வந்தால் குடல் பாதை ஆரோக்கியமாக இருக்கும். இது மற்ற உணவு வகைகளிலி ருந்து உடலில் சேரும் தாது உப்புக்களை உடல் நன்று உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. மேலும் எல்லா உறுப்புகளும் தயிர் மூலம் விஷத்தன்மை சேராமல் தடுக்கப்படுவதால் இளமையும் தொடர்கிறது. இதனால் வயோதிகத்தையும் தள்ளிப்போடலாம். இந்த உண்மைகளை நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி மெச்சினி கோஃப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேகவேகமாக எப்போதும் நடக்க ப் பழகி கொண்டால் மூட்டுவலி, தசைவலி குறையும். எலும்பு மெலியும் ஆஸ்டியோ போரோசிஸ் நோயும் முன் கூட்டியே இதனால் தடுக்கப்படும்.
வள்ளிக்கிழங்கு நல்லதா?

தினமும் நமக்குத் தேவையான அதிமுக்கியமான வைட்டமின், அஸ்கார்பிக் அமிலம் எனற் வைட்டமின்தான். இதை எல்லோரும் ஆரஞ்சு, நெல்லிக்காய் மூலம் பெறலாம். ஆனால் இவ்விரண்டையும் எப்போதாவது சாப்பிடுகிறவர்கள் எ� �்ன செய்வது? சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறிதளவு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்வதுதான் நல்லது. இரண்டிலிருந்தும் ஒரு நாளுக்குத் தேவையான அளவான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. வள்ளிக்கிழங்கில், ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் உள்ளது. வள்ளிக்கிழங்கு சாப்பிடாத நாளில் உருளைக்கிழங்கு சாப்பிடவும். வெளியில் சுற்றுபவர்களுக்கு சிகரெட் புகை, பெட்ரோல் கார்களின் புகை, கதிர்� �ீச்சுகள் முதலியவற்றால் புற்றுநோய் முதல் கண்நோய் வரை வர வாய்ப்புள்ளது. எனவே, வைட்டமின் சி-யை எல்லா வயதுக்காரர்களும் பெற இந்த இரு கிழங்குகளையும் அடிக்கடி சாப்பிடவும்.
மூளை வளர்ச்சிக்கு அரிய கீரை!

நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, மூளை வளர்ச்சி, சொறிசிரங்கு, வயிற்றுப்புண், வறட்டு இருமல் முதலியவற்றை வல்லாரைக்கீரை விரைந்து குணமாக்கும். வாரம் ஒரே ஒ� ��ு நாள் மட்டும் பருப்புடன் சேர்த்த இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அடிக்கடி இக்கீரையைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படலாம். உடலில் வலி வரும். பள்ளிக்குழந்தைகள், இரத்த சோகை நோயாளிகள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், ஆஸ்டியே, போரொசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயால் அவதிப்படும் பெண்கள், கொலாஸ்டிரல் பிரச்சனை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையை� �் சாப்பிட்டால் (கொஞ்சம் கசக்கும்) வளமுடன் வாழ நல்ல உடல் நலம் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.





No comments:

Post a Comment

Popular Posts