Followers

Saturday 21 July 2012

இன்றைய சிந்தனை





பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் எ� �்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பற� �யனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?
ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்க� ��, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங� �கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண ்டா?-----"விடுதலை" 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973





No comments:

Post a Comment

Popular Posts