Followers

Thursday 16 February 2012

இயற்கை தரும் இளமை வரம்! ரோஜா தைலம்!

 
 


இயற்கை தரும் இளமை வரம்!

ராஜகளை தரும் ரோஜா தைலம்!

ரோஜாப் பூவில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்-படும் தைலம் சருமத்துக்கு மிருதுத் தன்மை-யையும் பளபளப்பையும் கொடுப்ப-துடன் நல்ல நிறத்தையும் தருகிறது. இந்த ரோஜாத் தைலத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.

ரோஜாப் பூக்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதின் அளவில் சம பங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து, மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். தண்ணீர் வற்றி சத்தம் அடங்கியதும் நல்ல வாசனையுடன் தைலம் தனியாகப் பிரியும். இப்போது இறக்கி, ஆற வையுங்கள். இதுதான் ரோஜா தைலம். இதை சென்ட் பாட்டிலில் அடைத்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இந்த ரோஜா தைலத்தால் என்னவெல்லாம் உபயோகம்? பார்ப்போமா?

இரண்டு துளி ரோஜா தைலத்துடன் ஒரு துளி தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் பளபளக்கும். கருத்த உதடுகள் நிறத்துடன் ஜொலிக்கும்.

கண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது ரோஜாத் தைலம். 2 துளி ரோஜாத் தைலத்-துடன், 2 துளி தேன், அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடரை கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, கழுவுங்கள். கருவளையம், வறட்சி நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.

5 துளி ரோஜா தைலத்துடன் கடுகு எண்ணெய் 5 துளி, கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, பாதங்களில் பூசி தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் வெடிப்புகள் மறைந்து பாதம் பஞ்சு போல் மிருதுவாகி விடும்.

முழங்கை, முழங்கால், கணுக்கால், மூட்டு பகுதிகளில் தோன்றும் கருமையை மறைய வைக்கும் சக்தியும் இந்தத் தைலத்துக்கு உண்டு. 5 துளி தேனுடன், 3 துளி ரோஜா தைலம், கால் டீஸ்பூன் வெண்ணெயை குழைத்துத் தடவுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் கருமை மறைந்து மிருதுவாகும் அந்தப் பகுதிகள்.

பருக்களால் முகத்தில் தழும்பு ஏற்பட்டிருக்கிறதா? தழும்பின் மீது தினமும் ஒரு சில துளிகள் ரோஜா தைலத்தைத் தடவி வந்தால், முகம் மெழுகு போல் மின்னும்.

6 முதல் 8 துளி ரோஜா தைலத்துடன், சிவப்பு சந்தனத் தூள் அரை டீஸ்பூன் கலந்து முகத்தில் 'பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 6 மணி நேரம் ஆனாலும் அன்று மலர்ந்த தாமரைபோல் முகம் ஃப்ரெஷ் ஆகவே இருக்கும்.

உடலைக் குளிர்ச்சியாக்கி, வறண்ட கூந்தலை மிருதுவாக்கு-வதிலும் ரோஜாவுக்கு நிகர் வேறில்லை. 10 கிராம் ரோஜா மொட்டு-டன், 10 கிராம் செம்பருத்திப் பூ, 4 செம்பருத்தி இலையை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வாரம் இருமுறை இதைத் தலைக்குத் தேய்த்து அலசுங்கள். ரோஜாவில் எண்ணெய்ப் பசை இருப்ப-தால் பளபளப்பைக் கொடுக்கும். செம்பருத்தி, கூந்தலை சுத்தப்படுத்தி, மிருதுவாக்கும்.

கருகரு கூந்தலுக்குக் கை கொடுக்கிறது ரோஜா. ஒரு கப் சிவப்பு ரோஜாப் பூ இதழுடன், ஒரு கப் செம்பருத்தி இதழ், தோல் நீக்கிய புங்கங்காய் 3.. இவற்றை எடுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சக்கையை எடுத்து விடுங்கள். இந்தத் தண்ணீரில் சீயக்காய் (அ) பயத்த மாவைக் கலந்து தலைக்குக் குளித்து வர, கூந்தல் மிருதுவாகும். கருகருவென்று அடர்த்தியாகவும் வளரும்.

சீராகுமே சுவாசம்!


வெற்றிலை, பாக்கு போடும்போது ரோஜா இதழ்களை சிறிது சேர்த்துக் கொண்-டால்.. அஜீரணக் கோளாறு நீங்கும்.

காதில் திருகு வலி ஏற்பட்டால், 2 சொட்டு ரோஜா தைலத்தைக் காதுக்குள் விட்டால் வலி, குத்தல் மறைந்து விடும்.

ஒரு கப் ரோஜா இதழுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியாகும்.

ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதனுடன் பால், வெல்லம் சேர்த்துக் குடித்தால்.. வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஓடிப் போய், வாய் மணக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் 5, 6 ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால்.. சிறுநீர் நன்றாகப் போகும்.

சளித் தொல்லையால் அவதிப்-படுபவர்கள்.. ரோஜாவை முகர்ந்தாலே போதும். சளி, மூக்கடைப்பு நீங்கி, நன்றாக சுவாசிக்க முடியும்.

ஜோரா முகம் ஜொலிக்க ரோஜா
'ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக் கிளியே அழகிய ராணி..'







'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்..'

'ரோஜா.. ரோஜா..'

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சினிமா பாடல்கள் உலகில் ராஜாங்கம் நடத்தும் ரோஜாப் பூக்களின் அழகை!

பார்க்க மட்டுமா அழகு ரோஜா? அழகு பலன்களை அள்ளித் தருவதிலும் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை:

ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர், ஒரு அபாரமான அழகுக் கலை நிபுணர். இதை வீட்டிலேயே தயாரிக்கும் விதத்தைப் பார்க்கலாம்.

இதற்கு பிங்க் நிற ரோஜாக்களைத்தான் பயன்படுத்தவேண்டும். வருடங்கள் கடந்தாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் இந்த பன்னீர்.

50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதுதான் பன்னீர். தேவைப்படும்போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம்.

இந்த பன்னீர் எதற்கெல்லாம் உபயோகமாகிறது என்று பார்க்கலாம்..

கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகளை போக்குவதுடன், வராமல் தடுக்கவும் உதவுகிறது ரோஜா பன்னீர்.

அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர், கால் டீஸ்பூன் பால், இவை கலக்கும் அளவுக்கு ரோஜா பன்னீரை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு வயிற்றுப் பகுதியில் 5 நிமிடம் தடவி குளியுங்கள். இதனால் வயிற்றுப் பகுதி வரிகள் மறைந்து விடும். டெலிவரி ஆவதற்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த பேஸ்ட்டைத் தடவி வரலாம். இப்படிச் செய்தால் வரிகள் விழாது.

பிறந்த குழந்தைகள் சில நேரம் இரவில் தூங்கவே தூங்காது. இதற்கு, அரை டீஸ்பூன் கடலை மாவுடன், பயத்தமாவு, பூலாங்கிழங்கு பவுடர் தலா அரை டீஸ்பூன் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரைச் சேருங்கள். இந்த பேஸ்ட்டை குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். இந்த வாசனைக்கே குழந்தை நிம்மதியாக உறங்கும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பன்னீர்க் கூட்டணி.

மேக்கப் போட்ட பிறகும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டேயிருக்கும். டல்லடிக்கும் முகத்தையும் 'டால்' போல மாற்றும் சக்தி பன்னீருக்கு உண்டு. அரை டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடருடன் அரை டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு முகத்தில் பூசி கழுவுங்கள். பிறகு 'மேக்கப்' போடுங்கள். முகத்துக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் இந்த பேக். அதோடு, நீங்கள் வீட்டுக்கு 'பேக்கப்' ஆகும்வரை உங்கள் 'மேக்கப்' கலையாமலும் இருக்கும்.

ஃபேஷியல் செய்ததுபோல உங்கள் முகம் ஜொலிஜொலிக்க வேண்டுமா?

அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், ஜாதிக்காய் பவுடர், சர்க்கரை, வெண்ணெய்.. இவை தலா கால் டீஸ்பூன் எடுத்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை வாரம் ஒருமுறை முகத்தில் மேலும் கீழுமாகப் பூசி வந்தால் 'பளீரென' முகம் பிரகாசிக்கும். பருக்களும் மறைந்து விடும்.

சூடு தணிக்குது ரோஜா!

ரோஜா மலரை 'அத்தர்' என்றும் குறிப்பிடுவதுண்டு. காட்டு ரோஜா பார்க்க அழகாக இருந்தாலும் நாட்டு ரோஜாதான் வாசனையாக இருக்கும். இதில்தான் மருத்துவ குணங்கள் உண்டு.

ரோஜா பன்னீர் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

உணவுப் பொருட்களுடன் ரோஜா பன்னீரை சேர்த்துச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு நீங்கும். உடல் சூடு தணியும்.

மனக் கலக்கத்தை மாற்றி மனதை அமைதியாக்கும் சக்தி ரோஜாவுக்கு உண்டு. தலையில் தினமுமே ரோஜாவை சூடிக் கொள்வது நல்லது.

காய்ந்த ரோஜா இதழ்களை வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சுங்கள். இதுதான் ரோஸ் வாட்டர். இதைத் தினமும் ஒரு டீஸ்பூன் 45 நாட்கள் தொடர்ந்து குடித்து வர வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகள் ஓடிப் போகும்.

காய்ந்த ரோஜாவைத் தேனில் ஊற வைத்து (குல்கந்து) தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால், உடம்புக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைப்பதுடன் உடல் சூடும் தணியும்.

நல்ல காய்ந்த சிவப்பு ரோஜா இதழ்களை வெந்நீரீல் அரை மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, உப்பு கலந்து சாப்பிட்டால், வாந்தி, அதீத தாகம், உமட்டல் நீங்கி ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

No comments:

Post a Comment

Popular Posts