Followers

Monday, 31 October 2011

மிளகின் மகத்துவம்

 
 
பண்டைய காலத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியா வந்து மிளகுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் அதை பெருஞ்செல்வம் போல் மதித்தார்கள். 15ம் நூற்றாண்டிற்கு பின்பே தென்அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மிளகாய் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு உணவில் காரம் சேர்ப்பது என்றால் மிளகு தான். மிளகாய் போல் மிளகின் காரம் பாதிப்பு ஏற்படுத்தாது. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார் சத்து, வைட்டமின், சுண்ணாம்பு, இரும்பு, பாஸ்பரஸ் என்று பல சத்துக்கள் மிளகில் நிறைந்துள்ளன. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பைக் கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பொருள் மிளகு என்றால் மிகையாகாது.

No comments:

Post a Comment

Popular Posts