Followers

Tuesday, 18 October 2011

மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்

 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6RXG9VbPczmrQa3X0YhOY4q-my_zDM6huOQGq9J4axM-N2LyrSC_oTxmwwG2t6agTgWP4BhWWpt_7ak4gp-zFD07SlQZed7CSHf3YiWpbWc8Dcw_m11oAaFnM7FKHbR0DL5j3wX4Pyhw/s1600/useful+tips.jpg
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள்.


ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள். மற்ற‌வ‌ர்க‌ளுக்கும் அறிய‌ தாருங்க‌ள்.
சக்கரை நோய்க்கு கை வைத்தியம்.

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.

எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம்.

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

புளித்த ஏப்பமா?

தக்காளி சூப்பில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா போட்டுக் குடித்தால் போதும்.

வேர்க்குரு நீங்க ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவைக் கொஞ்சம் தண்ணீரில் கலக்கிப் பூசவும்.

ஆப்ப சோடாவைத் தண்ணீர் விட்டுக் கொப்புளத்தில் பூசினால் குணம் தெரியும்.

பல் வலி பாடாய்ப்படுத்தினால் கொஞ்சம் ஆப்ப சோடாவை ஈறின் மீது அழுத்தித் தடவவும். காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்ப சோடா கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

ம‌துவை ம‌றந்து விட‌லாமே.

மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் கரணை நோய் (Cirrhosis) வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. குழந்தைகள், வாழ்வில் ஒருமுறைகூட மதுவைத் தொடாதவர்களுக்கும் இந்நோய் வரும்.

நடுத்தர வயதுடைய பெண்களுக்கு பித்தநீர்ப்பையில் கரணை நோய் வர வாய்ப்பு உண்டு. உடலில் தாமிரச் சத்து மிகுதியால், குழந்தைகளிடத்திலும் இது காணப்படும். 'வில்சன்ஸ் நோய்' என்றழைக்கப்படும் இது, ஒரு பரம்பரை நோய் என்பது ஆச்சரியமான உண்மை!

நோய் வந்தால் குணமாக்குவது சற்று சிரமமான காரியமே.

முறையான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம். மது குடிக்காமல் இருந்தாலும் நோய் வரும் என்பதற்காக மதுவை நாடக் கூடாது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே இதற்குக் கடைசியான வழி.

பூண்டின் ம‌கிமை.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெள்ளைப் பூண்டு நல்லது என்பது தெரிந்த விஷயம். தெரியாதது, அது மலேரியா மற்றும் கேன்சருக்கும் கண்கண்ட மருந்து என்பது.

வெள்ளைப் பூண்டில் இயற்கையிலேயே அடங்கியுள்ள டைசல்பைடு (Disulphide) என்ற ரசாயனப் பொருள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கின்றது. மேலும், கேன்சர் செல்கள் பரவாமலும் தடுக்கின்றது. இது தவிர, மலேரியாவை உண்டாக்கும் 'பிளாஸ்மோடியம் பால்சிபாரம்' என்ற ஒட்டுண்ணியையும் தாக்கி அழிக்கின்றன. அட்லாண்டாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வின் முடிவு இது.

பூண்டை வெறுப்பவர்கள் கூட இனி பூண்டுக்கு 'வெல்கம்' சொல்வது நல்லது!

வெள்ள‌ரிக்காய்.
வீடுகளில் வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமைப்பது வழக்கம். ஆனால் அந்தத் தோலில்தான் உடலுக்கு வேண்டிய உப்பும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

மலச்சிக்கல், அதிக அமிலத்தன்மை, வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு வெள்ளரி அற்புதமான மருந்து. இதனைக் காரட்டோடு சேர்த்து ஜூஸாகச் சாப்பிட மூட்டு அழற்சி, சிறுநீரக அடைப்பு, வயிற்றுப்போக்கு, சருமநோய்கள் தீரும். துண்டாக நறுக்கி முகம், கண், நெற்றியில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

ஆஸ்பிரின்.

ஆஸ்பிரின் எளிய வலி நிவாரணியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும் ஒரு சில தீங்கான விளைவுடையது என்ற காரணத்திற்காக பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும்கூட பரால்ஜின், நோவால்ஜின், அனால்ஜின் என்ற பெயர்களில் அவை இந்தியாவில் விற்கப்படுகின்றன.

உங்க‌ளுக்கு தெரியுமா?

கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தைக்குமாகச் சேர்த்து இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற தவறான கருத்து பலரிடமும் நிலவுகிறது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. போதிய உணவை உட்கொள்ளாது விடுவது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ அதேயளவு பாதிப்பை மிதமிஞ்சிய உணவும் ஏற்படுத்தும்.

நேர‌ம் க‌ழித்து சாப்பிட்டால்?
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் நோய் காரணமாக சிலருக்கு நெஞ்சு எரிச்சல் (Heart Burn) ஏற்படும். சிலர், இரவு நெடுநேரம் கழித்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இதனால் ஆபத்து உண்டா?

நிச்சயமாக. இவர்களுக்குத் தூக்கம் கெடும். அரிதாக, புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உற்பத்தியாகும் அமிலங்கள் உணவுக் குழாயில் பாதிப்பை உண்டாக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்காக சில டிப்ஸ்கள்:

உங்களது இரவு உணவை ஆறு முதல் ஏழு மணிக்குள் முடித்துவிடுங்கள். இல்லையெனில் உணவுக் குழாயில் கொழுப்பு சேர்ந்து எதிர் ஓட்டத்துக்கு (Reflux) வழி வகுக்கும்.

இரவு எட்டு மணிக்கு மேல், காரம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். நீங்கள் தூங்கச் செல்லும் முன் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது வயிற்றைக் காயப்போடுங்கள்.

தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால், இரவு பத்து மணிக்குள் அன்டாசிட் மாத்திரைகளைச் சாப்பிட்டு விடுங்கள். இது வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும்.

எப்பொழுதும் இடது பக்கமாகவே ஒருக்களித்துப் படுங்கள். இதனால் வயிற்றில் மீதமிருக்கும் உணவுப் பொருட்கள் உணவுக் குழாயில் மென்மேலும் அழுத்தம் கொடுக்காது. இடதுபுறம் படுப்பதால் காலையில் மலம் எளிதில் வெளியேறும். மலம் வெளியேறும்போது எரிச்சல் இருக்காது.
மீன் சாப்பிடுவ‌து

மீன் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்குப் பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லையாம். எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள்தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகிறதாம்.

மீன் எண்ணெயில் உள்ள 'ஒமேகா_3' என்ற பொருள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்துக் கொள்கிறது. ரத்தம் சீராகப் பாயவும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கடல்வாழ் மீன்களிலிருக்கும் இ.பி.ஏ. (Elcosa Pantothenic Acid) இதயத்தமனிகள் உடைந்து போகாமல் இருக்கச் செய்கிறது.

ஆரஞ்சுச் சாறு.

'உணவே மருந்து' என்று சொல்லும் சித்த மருத்துவம், 'நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் மூலம் வரப்போகிற நோய்களையும் தடுத்து நிறுத்தலாம்' என்றும் கூறுகிறது.

தலைவலி _ காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.

டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது... ஆரஞ்சு ஜூஸ்.

தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.

டிஸ்பெப்ஸியா (Dyspepsia) எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.

பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.

இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.

உணவே மருந்து

உணவுப் பொருட்களை சமைத்து உண்பதைவிட அப்படியே சாப்பிடுவது சாலச் சிறந்தது. காரணம், அதில் உள்ள சத்துகள் சிறிதும் அழிவின்றி அப்படியே உடலில் சேர்கிறது. இப்படி அமைந்த சிறந்த உணவுப் பொருட்களே பழங்கள்.

• பழங்களைத் தனியாகவும் சாப்பிடலாம், பிற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். பழங்களை சாறு பிழிந்தும் சாப்பிடலாம்.

• சிற்றுண்டி விருந்தில் வாழைப்பழங்களும், பேருண்டி விருந்தில், மா, பலா, வாழை என முக்கனிகளும் இடம் பெறுவது சிறப்பு.

• பரிமாறப்படும் அறுசுவை உணவுப் பண்டங்களால் அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு, அஜீரணக் கோளாறைச் சரி செய்யவும், வயிற்றுக் கோளாறு உண்டாகாமலிருக்கவும், பழம் சாப்பிடும் பழக்கம் உண்டாக வேண்டும்.

• வெறும் வயிற்றில் பழம் உண்பது பழத்தின் முழுப் பலனை கிடைக்கச் செய்கிறது. காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் பழம் சாப்பிடலாம்.

• பழச்சாறு குடிப்பவர்கள் பழம் பிழிந்து ஐந்து நிமிடத்திற்குள் பழச்சாற்றை அருந்திவிட வேண்டும். நேரம் கழித்து பருகக் கூடாது, பக்க விளைவுகளைச் சந்திக்க நேரும்.

• பழம் இயற்கையிலேயே நன்கு பழுத்ததாக இருக்க வேண்டும். அதிகமாக பழுத்து அழுகிய பழங்களை உண்ணக் கூடாது.

• ஆப்பிள் பழத்தோலை நீக்குதல் கூடாது. தோலில் நிறைய சத்துக்கள் இருப்பதால், தோலுடன்தான் சாப்பிட வேண்டும்.

• கொய்யாப்பழத்தில் தோலையும், கொட்டைகளையும் நீக்கிவிட்டுச் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. அப்படியே சாப்பிட வேண்டும்.

• மாதுளம் பழக்கொட்டைகளை நன்றாக மென்று சாப்பிடாவிட்டால் அஜீரணம் ஏற்படும்.

• வாயில் துர்நாற்றமா? தினம் மூன்று வேளையும் சாப்பிட்டபின் எலுமிச்சை பழச்சாற்றில் வாய் கொப்பளித்துப் பாருங்கள்.

• உணவுகளை ஒரே நாளைக்கு மூன்று வேளை தட்டு நிறையச் சாப்பிடுவதை தவிர்த்து ஆறு வேளையாக, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.

• கொழுப்பு, காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை மிக அளவோடு சாப்பிட வேண்டும். கவலையாக இருக்கும்போது, பசியில்லாத போது சாப்பிடக் கூடாது. சாந்தமான மனநிலையில் ஆற அமரச் சாப்பிட வேண்டும். ருசிக்காக இல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிட வேண்டும். அதிகம் உண்பவன் தன் சவக்குழியைத்தானே தோண்டிக் கொள்கிறான்.

• உணவு சூடாக இருக்கும்போதே, அதை நுகர்ந்து, சுவைத்து, கண்ணால் ரசித்து, சிறிது சிறிதாக ருசியுங்கள். கசப்பு, துவர்ப்பு ருசிகளை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு போன்றவற்றை மிதமாகவும் சாப்பிடவும். இதை மனதில் கொண்டு சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்ணுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆரோக்கியம் தானாகவே பளிச்சிடும்.

நன்றி: 'இன்றைய மருத்துவம்'

No comments:

Post a Comment

Popular Posts