Followers

Wednesday 5 October 2011

புற்றுநோயை தடுக்கும் சூப்பர் பிரக்கோலி

 
 

சூப்பர் பிரக்கோலியை(பச்சைப் பூக்கோஸ்) உண்பதால் புற்று நோய், இருதய நோய் வராமல் தடுக்கலாம் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சூப்பர் பிரக்கோலியை உண்பதால் புற்றுநோய், இருதய நோய் வராமல் தடுக்கலாம் என்று நார்விச்சில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்னீஸ் மையத்தில் உள்ள குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
சாதாரண பிரக்கோலியை விட சூப்பர் பிரக்கோலியில் குளுக்கோராபின் எனப்படும் ஊட்டச்சத்து மூன்று மடங்கு அதிகம் உள்ளது. குளுக்கோராபின் ஊட்டச்சத்து புற்று நோய், இருதய நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இது குறித்து இங்கிலாந்து நாட்டின் அறிவியல் துறை அமைச்சர் டேவிட் கூறுகையில்,"இது சிறந்த கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் எங்கள் உடல் நலமும், பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும்" என்றும் தெரிவித்தார்.
சூப்பர் பிரக்கோலி என்பது காலிபிளவர் பூ போன்று காணப்படும் காய்கறி வகையைச் சார்ந்தது ஆகும். இதை பச்சைப் பூக்கோஸ் என்றும் அழைப்பர்.

No comments:

Post a Comment

Popular Posts