Followers

Monday, 17 October 2011

உணவுப் பாதுகாப்பு.

 
 
மனிதனின் அடிப்படைத் தேவைகளில்முதன்மையானது உணவு.பேராசையும்,சுயநலமும் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் முறையற்றவணிக நடைமுறைகள் அதிகரித்துவிட்ட்து.ஆயுள் தண்டனை வரை சட்டங்கள்கடுமையாக்கப்பட்டுள்ளன.பத்தாண்டுகளுக்கு முன்பு நுகர்வோர் இயக்கத்தில் அதிகஆர்வமாக பங்கெடுத்த காலம்.உணவு பாதுகாப்பு குறித்து பல்வேறு விழ்ப்புணர்வுநிகழ்ச்சிகளை நட்த்திய அனுபவம் எனக்கு உண்டு.
 
கலப்படம்,தரமற்றஉணவுப்பொருட்கள் இன்றைய சமூகத்துக்கு மிகப்பெரிய சவால்.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை நோய்களுக்கும்,உயிரிழப்புக்கும் காரணமாகஇருக்கின்றன.இவை இதயமற்ற மனித மிருகங்களால் நேரும் தவறுகள்.நோய்கள் என்பது தனிமனிதபிரச்சினை மட்டுமல்ல! நாட்டின் சமூகப்பிரச்சினையும்,பொருளாதர பிரச்சினையும் கூட! ஒருவர்நோயுற்றால் அவரை கவனித்துக்கொள்பவர்கள் உள்பட இரண்டு வேலை நாட்களை இழக்கவேண்டியிருக்கிறது.
 
உணவு பாதுகாப்புசட்டப்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கிறார்கள்.இவ் வலைப்பதிவில் உணவுகுறித்த இடுகைகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.ஹோட்டலில் சாப்பிடுவீங்களா? என்றபதிவு பெருவெற்றி பெற்ற பதிவு.பெரும்பாலானவர்கள் படித்திருக்கலாம்.படிக்காதவர்கள்படிக்கவும்.http://counselforany.blogspot.com/2011/05/blog-post_29.htmlஇப்பதிவை படித்துவிட்டு நாகப்பட்டினத்திலிருந்து உணவு பாதுகாப்புஅலுவலர்திரு.அன்பழகன் மெயில் அனுப்பியிருந்தார்.சரியான தகவல் என்றுபாராட்டியிருந்தார்.இமெயில் மூலம் இவ்வலைப்பதிவின் இடுகைகளை வாசிக்கும் பெருமைமிகுவாசகர்.
இன்னொரு மெயிலில்கீழ்கண்ட வரிகள் இருந்தன
DEAR SIR.
ALL YOUR PRESENTATIONS ARE VERY MUCHUSEFUL TO EVERY PERSONS.
SOME OF THEM ARE NOT ACCEPTABLE TOME.
BUT YOUR MAILS ARE ALWAYS WELCOMEDBY ME.
THANK YOU VERY MUCH SIR.
-A.T.ANBAZHAGAN,
FOOD SAFETY OFFICER
NAGAPATTINAM.
 
அறிவியல்தகவல்களை பொருத்தவரை ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதி செய்த பிறகே வழங்குகிறேன்.ஆனால்என்னுடைய சிந்தனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுசாத்தியமல்ல.ஒவ்வொருவருக்கும்,வளர்ந்து வந்த சமூகம்,படித்த புத்தகங்கள்,ஆளுமைகள்போன்றவை மதிப்பீடுகளை தருகின்றன.இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.பெரிய பெரியமனிதர்களும்கூட ஒரே கருத்து கொண்டிருப்பதில்லை.இது இயல்பானது.
 
உணவுபாதுகாப்பு அலுவலர்களின் பணியின் முக்கியத்துவம் தெரிந்த விஷயம்தான்.தங்கள்கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றினால் இவர்களை விடவும் தேசத்திற்கு தொண்டுசெய்பவர்கள் யாருமில்லை.இன்றைய மெயிலில் அவரது பணி தொடர்பான நாளிதழ் செய்திகளைபகிர்ந்து கொண்டிருக்கிறார்.அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

Popular Posts