Followers

Tuesday, 18 October 2011

மாரடைப்பைத் தடுக்கும் இதயக் காவலன்!

 
 

தயத்திலிருந்து செல்லும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், மகாதமனி ("அயோட்டா') வழியாக உடலில் உள்ள எல்லா திசுக்களையும் சென்றடைவதைப் போல இதயத்தின் தசையையும் வந்தடைய வேண்டும்.
உடலில் உள்ள திசுக்கள், செல்கள் போன்ற அனைத்துக்கும் ரத்தத்தை அனுப்பும் வகையில் இதயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத் தசையின் இயக்கத்துக்கும் ரத்தம் தேவை.
இதயத் தசைகளை ஊட்டப்படுத்துவற்காக மகாதமனியின் அடியில் கரோனரி ஆர்ட்டரி (ரத்தக் குழாய்) பிரிந்து செல்கிறது. இதன் மூலம் இதயத் தசைகள் ரத்தம் பெற்று ஊட்டமடைகின்றன.
இதயத்தின் வலது கரோனரி ஆர்ட்டரி, இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது. அங்கிருந்து இடது கரோனரி ஆர்ட்டரி இரண்டு ரத்தக் குழாய்களாகப் பிரிந்து ஒன்று உடலின் மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தை அனுப்புகிறது. மற்றொரு ரத்தக் குழாய் இதயத்தை ஊட்டப்படுத்த பயன்படுகிறது.
நமது உடலில் உள்ள ரத்தம் எனும் சிவப்பான திவம், பல செல்களால் ஆன ஒரு திசுவாகும். பல பணிகளைச் செய்வதற்கு உரிய செல்கள் 22 சதவீதமும் தண்ணீர் 78 சதவீதமும் இருப்பதால்தான் ரத்தம் அடர்த்தியாக உள்ளது.
ரத்தத்தில் பிளாஸ்மாவின் அளவு அதிகமாக இருக்கும்; அதில் சிவப்பணுக்கள்-வெள்ளை அணுக்கள்-பிளேட்டலட் அணுக்கள் என மூன்று வகையான அணுக்கள் கரைந்திருக்கும்.மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், ஹார்மோன்கள், வாயுக்கள், ஆக்ஸிஜன், கார்பன்-டை ஆக்சைடு, நைட்ரஜன் போன்றவையும் காணப்படும். இவை அனைத்தும் சேர்ந்து உடலின் உறுப்புகளுக்கு உயிரைத் தந்து இயக்குகின்றன.
 
ஆபத்துக்கு உதவும் கொலேட்ரல் ரத்தக் குழாய்கள்:
 
 
இதயத்தின் பாதுகாவலனாக விளங்குவது "கொலேட்ரல் ரத்தக் குழாய்கள்'. ஒருவரின் இதயம் இயல்பாக ஆரோக்கியமாகச் செயல்படும் போது, இந்த வகை ரத்தக் குழாய்கள் வேலை செய்யாது.
இதய கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையில், இத்தகைய "கொலேட்ரல் ரத்தக் குழாய்கள்' செயல்பட்டு இதயத் தசையின் திசுக்களுக்குத் தேவையான ரத்தத்தை எடுத்துச் சென்று அதன் இறப்பைத் தடுக்கின்றன.
இந்த மாற்று வழி ரத்தக் குழாய் பாதையை ("கொலேட்ரல் ரத்தக் குழாய்கள்') வேலை செய்ய வைக்க எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை.
இப்போது ஊசி துளைக்காத, வலியில்லாமல், மருத்துவமனையில் தங்கும் அவதியில்லாமல் வெளி நோயாளியாக மட்டுமே வந்து இதய பாதிப்பைச் சரி செய்து கொள்ளக் கூடிய வசதி சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் உள்ளது.
இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விரும்பாதவர்கள், அறுவைச் சிகிச்சை செய்தும் பலன் இல்லாதவர்கள், சில மருத்துவ பிரச்னைகளால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள், முதியோர் என அனைவரும் ஆக்ஸிமெட் மருத்துவமனையின் ஊசி துளைக்காத சிகிச்சை மூலம் பலன் அடையலாம்.
thanks:http://www.thedipaar.com/news/news.php?id=33852

No comments:

Post a Comment

Popular Posts