Followers

Sunday, 2 October 2011

இதயநோய்கள் வராமல் தடுக்க

 
 
 
Image
இதய நோய்கள் வராமல் தடுக்க குறித்த நேரத்தில் வேலைக்குக் கிளம்ப, சாப்பிட, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட குடும்பத்தாரிடம் கலந்து பழக என நேரத்தை திட்டமிடுங்கள்.

பதட்டத்திற்கு இடம் தராதீர்கள். பிரயாணம் செய்யும் முன்பே பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என அந்த அந்த இடங்களுக்கு முன் கூட்டியே சென்று விடுவது நல்லது. அப்படி சரியான நேரத்திற்கு செல்லாமல் வண்டிகளை தவற விட்டு விட்டாலும் கவலைப்படாமல், புலம்பாமல் அடுத்த வண்டிக்குச் செல்லங்கள்.

கனமான பொருட்களை நின்றுகொண்டே தூக்காமல், உட்கார்ந்து கொண்டு தூக்குங்கள். இது இதயத்திற்கு நல்லது.

உணவு உண்ணும் பொழுது ரசித்து ருசித்து உண்ணுங்கள். சாப்பிடும் பொழுது கவலைதரும் பேச்சுக்கள் பேச வேண்டாம்.

நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கி எப்பொழுதும் கலகலப்பாக இருங்கள் . தனிமையை தவிர்க்கவும்.

திடுக்கிடச் செய்யும் விஷயங்களில் நிதானமாக செயல்படவும்.

இரவு படுக்கச் செல்லும் பொழுது நடந்தவைகளை, நடக்கப்போறவைகளை பற்றி சிந்திக்காமல் மனதை வெறுமையாக்கி நிம்மதியாக தூங்குங்கள்.

புகை பிடித்தல், மது அருந்துதல் கட்டாயம் கூடாது.

வயது எதுவானலும் உடல் பயிற்சி செய்யுங்கள். தினமும் காலை மற்றும் மாலையில் கட்டாயம் நடை பயிற்சி அவசியம்.

ஸ்கூட்டரில் செல்வதற்குப் பதில் சைக்கிளில் செல்வது மிக நல்லது.

புத்தம் புதிய பழங்கள், நார்சத்து மிகுந்த காய்கறிகள் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

உணவுப் பொருளில் வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்புப் பொருட்களை தேவையானல் மிக சிறிய அளவு சேர்க்கவும் பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. தோல் நீக்கிய கோழி, இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சி வகைகளை தேர்ந்தெடுத்து வேகவைத்துச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்தச் சாப்பிடுவது கெடுதி. முட்டையிள் வெண்கருவை சாப்பிடலாம். மஞ்சல் கருவை தவிர்ப்பது நல்லது. சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், சோயபீன்ஸ் எண்ணெய்களைப் அளவோடு பயன்படுத்தலாம். புத்தம் புதிய பழச் சாறுகள், பால் சேர்க்காத கடும் டீ, காபி இவைகளை சாப்பிடலாம். சர்கரைக்குப் பதில் பாதிப்பை ஏற்படுத்தாத பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பது நல்லது.

ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. வீட்டில் எளிமையாகச் சமைத்து உண்பதே நல்லது. 'சாட்" உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை பழக்கக் கூடாது.

ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயமாக இதய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆண்டுக்கொரு முறை இ.சி.ஜி. எடுத்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் இதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும். உடல், உள்ளம், உணர்வுகள் அமைதி கொள்ள யோகா செய்வது நல்லது. மனதிற்கு அமைதி, முறையான வாழ்க்கை, ஆபத்தில்லா இயற்கை உணவு, தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியன இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுணர்கள்.

No comments:

Post a Comment

Popular Posts