Followers

Saturday, 11 February 2012

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் இருமலைப் போக்கும் எருக்கம் இலைகள்!

 



எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேன். இதன் மருத்துவ குணங்கள்

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.

இலைகளை இந்துப்புடன் கலந்து மண்சட்டியிலிட்டு வதக்கிக் கரியாக்கி, சிட்டிகை சாம்பலை மோருடன் சாப்பிட மகோதரம் எனப்படும் வயிற்றிலுண்டாகும் நீர்த்தேக்கம் குணமாகும். இதையே கல்லீரல் அடைப்பு உபாதை நீங்கவும் பயன்படுத்தலாம்.

இலைகளை இடித்துப் பிழிந்த சாறு 1- 5 சொட்டுக்கு மேல் மிகாமல் உள்ளுக்குச் சாப்பிட, முறைக்காய்ச்சல் எனும் குறிப்பிட்ட நேரத்தில் ஒருநாளில் ஒருமுறை உண்டாகும் காய்ச்சல் குணமாகிவிடும்.

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்.

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

நொங்கணாதி எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை எருக்கின் இலை மீது தடவி, சூடாக்கி, யானைக்கால் பாதித்துள்ள பகுதியில் ஒட்டி வைக்கலாம். அதுபோலவே, பலாஹடாதி எனும் மூலிகைத் தைலத்தை எருக்கின் இலை மீது தடவி, சூடு செய்து நெற்றியில் ஒட்டி வைக்க, தலைவலி குணமாகிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கின் பூ 10 கிராம், மிளகு 10 கிராம், கிராம்பு 5 கிராம் நன்கு அரைத்து மிளகு அளவு மாத்திரையாக்கிக் கொண்டு சாப்பிட்டு வர மார்பில் கபக்கட்டு இளைப்பு நீங்கும்.

நாக்கில் ருசியின்மை, மூக்கிலிருந்து நீராக வடியும் நிலையில் உலர்ந்த பூக்களைப் பொடித்து, ஓரிரு சிட்டிகை எடுத்துச் சிறிது தேனுடன் குழைத்துச் சாப்பிட, இந்த உபாதைகள் நீங்கிவிடும்.

நீலப்பூ உள்ளது அதிகம் கிடைக்கும். வெள்ளைப் பூ அதிகம் கிடைக்காது. வெள்ளைப் பூ விநாயகர் வழிபாட்டிற்கு ஏற்றது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்.

எருக்கம் இலைகளை ஒடிக்கக் கசியும் பாலை, சுளுக்கு, வாயுப்பிடிப்பு, கீல்வாயு, நரித்தலை (முழங்கால்) வாயு இவற்றில் பற்றிடலாம். வலி வீக்கம் குறையும். பாலைப் பீங்கான் பாத்திரத்தில் கரந்து உலர்த்தி அதில் குந்துமணி அளவு பனை வெல்லத்துடன் சாப்பிட எலி விஷம் நீங்கும்.

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

ஊசிப்பாலைச் சாறுடன், எருக்கம் பாலைக் கலந்து பற்களில் ஏற்படும் கிருமிச் சிதைவில் நிரப்பினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதுபோலவே ஏழிலைப் பாலையுடன் எருக்கின் பால் கலந்து பற்களில் பூசினாலும் அங்குள்ள கிருமிகள் நசியும்.

எருக்கின் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்தாகிய அர்க்கலவணம் எனும் மருந்து பல உபாதைகளை நீக்கக் கூடியது.

No comments:

Post a Comment

Popular Posts