Followers

Saturday, 18 February 2012

குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க.....

 


குழந்தைகளின் சருமம் மென்மையானது. பட்டுப்போன்ற அந்த பிஞ்சுகளின் சருமத்தை பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்காக என சோப்புகளும், லோசன்களும் வந்துவிட்டன.
அவை பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும் அவற்றில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். எனவே இயற்கை முறையில் வீடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்தோடு குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடலை மாவு

கடலை மாவை மைய அரைத்து அவற்றை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டினால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும் போது கடலை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தால் பிசு பிசுப்பு மட்டுமே நீக்கி எண்ணெய் பசையை தக்கவைக்கும். இதனால் குழந்தைகளின் சருமம் பளபளப்பாகும்.

கடைகளில் விற்கும் லோஷன்களை போடும் போது அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளுக்கு அலர்ஜி வராத நிலையிலும் பின் விளைவுகள் கண்டிப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு முடிந்தவரை நாம் இயற்கை மூலிகைகள், வழிமுறைகளைக் கொண்டே சரி செய்து கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியில் ஆலிவ் எண்ணெய்

பிறந்த குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயில் தடவும் போது அது காலை நேரமாக இருக்க வேண்டும். காலையில் இளஞ்சூரியனில் ஒரு சில நிமிடங்கள் காட்டினால் தான் நாம் தேய்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு உடம்பில் பளபளப்பை கொடுக்கும்.

பாதாம் எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு வெஜிடபிள் ஆயில் கலந்து கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கடலை மாவு கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள்

பிறந்த குழந்தைகளுக்கு உடம்பில் முடி அதிகம் காணப்படும். நாளடைவில் ஏற்படும் மாற்றங்களால் முடி கொட்டி விட வாய்ப்பு உண்டு. வயதிற்கு வந்த பிறகு பார்த்தால் முடி அதிகம் இருக்காது. அப்படியும் இருந்தால் முடியை நீக்க, கஸ்தூரி மஞ்சளை கல்லில் உரசிப் பூசி சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு குளிக்க வைக்க வேண்டும்.

தோல் மிருதுவாக

குழந்தைகளை குளிக்க வைக்கும் தண்ணீரில் ரோஜா இதழை போட்டு, 2 மணி நேரம் கழித்து குளிக்க வைக்கலாம். அது குழந்தைகளின் சருமத்தை மிருதுவாக வைப்பதுடன் இயற்கை மணமும், புத்துணர்ச்சியும் இருக்கும்.

பள பளக்கும் சருமம்

குழந்தைகளின் சருமத்திற்கு தேவையான பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். பூலாங்கிழங்கு 100 கிராம், ரோஜா இதழ் 100 கிராம், ஆவாரம் பூ 50 கிராம், கடலை மாவு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் இவையனைத்தையும் நன்றாக வெயிலில் சுத்தம் செய்து விட்டு உலர்த்த வேண்டும். பின்னர் அவற்றை பவுராக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் தேங்காய் பாலில் குழைத்து குழந்தைகள் உடம்பில் தேய்க்கலாம். நாளாக, நாளாக சருமம் பளபளப்பாக இருக்கும்.

6 மாதங்கள் கழித்து குழந்தைகள் வளரும் பருவத்தில் சருமத்தைப் பராமரிக்க நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை ஒரு நாளில் மாற்றி மாற்றி ஒன்றோ அல்லது இரண்டு தடவையோ நன்றாக மசித்து கொடுக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் சமைக்கிற சமையலில் கருவேப்பிலை சேருங்கள். கருவேப்பிலையை அரைத்துப் பயன்படுத்தினால், அதன் சத்து உடலுக்கு சேரும்.

No comments:

Post a Comment

Popular Posts