Followers

Sunday, 19 February 2012

ஆலிவ் எண்ணெய் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து !

 

கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுது தங்கம் என்று கூற வாய் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம் விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.

ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்கு திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி… ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்ற கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாக புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரம்ப நிலை புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில், இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவை சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ''பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்'' என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய், அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் த டுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும், அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி' முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் 'திரவத்தங்கம்' என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்பு செய்து, இரண்டாம் முறை வடிகட்டும் எண்ணெய் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், இது சுத்திகரிப்புக்கு உட்பட்டு கிடைப்பதால்.

மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள் பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயை, அதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்ட பி ன்பு செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு (Deep Fry) ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள்தான் பஜ்ஜி, போண்டா, வடை என்று எண்ணெயில் குளிக்கும் உணவுகளைப் பொரித்துக் (Deep Fry) கொறிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆயிற்றே. அதனாலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அயல்நாடுகளை நோக்க இங்கே மிகக் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போல சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.
ஆலிவ் எண்ணெயைக் காலையில் இரு சொட்டுகள் வாயில் இட்டு நன்கு ஆயில் புல்லிங் செய்துவிட்டு வெளியில் துப்பாமல் முழுங்கிவிட்டால் வயிற்றில் அமிலம் சுரப்பது (Acidity) அறவே நீங்கி விடும் என்று ஆலிவ் எண்ணெய் சூப்பர் மார்க்கெட் கூறுகிறது. 10 சொட்டு ஆலிவ் எண்ணெய் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நமைச்சல், கல் போன்றவற்றை அகற்றி விடும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.

அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

பொன்பொடியை (தங்க பஸ்பம்) பொன்மனச்செம்மல் பயன்படுத்தியதாகக் கூறுவர். ஏன்? உடல் வலிமையோடு இருக்க இல்லை. உடல் மினுமினுப்பாக இருக்கவாம். அதனால்தான் அவர் பொன் போல மின்னினார் என்கிறார்கள். எல்லோரும் என்ன 13.7.18 ஆ, தங்க பஸ்பம் சாப்பிட்டுத் தங்கம்போல ஜொலிக்க? புரியலையா விநிஸி ஆ என்று கேட்டேன். ஆங்கில எழுத்துக்களைக் கூட்டிக் கழிச்சுப் பாருங்க சரியாத்தான் இருக்கும். என்னதான் விலை கூடுதல் என்றாலும் ஆலிவ் எண்ணெயான இந் தத் திரவத்தங்கம் நிச்சயமாகத் தங்க பஸ்பத்தைவிட விலை குறைவாகத்தான் இருக்கும்.. நம்புங்கள்…

No comments:

Post a Comment

Popular Posts