Followers

Wednesday, 29 February 2012

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!

 

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

மருத்துவக் குணங்கள்

சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.

Read more >>

Tuesday, 28 February 2012

வைட்டமின் டி

 

நமக்கு இலவசமாக கிடைக்கும் விட்டமின் தான் விட்டமின் டி. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வெய்யில் குளியல் செய்தால் போதும். இந்த குறிப்பிட்ட நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா – வயலெட் கதிர்கள் நாம் உடலின் கொழுப்பு திசுக்களில் மேல் படியும் போது, இரசாயன மாறுதலால் வைட்டமின் டி தோன்றுகின்றது. எவ்வளவு நேரம் சூரிய ஒளி பட வேண்டும் என்பது பல விஷயங்களை பொருத்தது. நம்முடைய தோல் நிறம், வயது எப்போது வீட்டிலிருந்து வெளியே செல்கின்றோம் முதலியவை அடிப்படை காரணங்கள்.
வெள்ளை தோல் உள்ளவர்கள், தினமும் 1/2 மணி நேரம் நேரடியாக சூரிய ஒளியில் உலாவினால் அவர்களுக்கு தேவையான விட்டமின் 'டி' உருவாகி விடுகின்றது. குளிர்காலத்தில் சிறிது அதிக நேரம் பிடிக்கும். கருமை நிறமுடையவர்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் உலாவினால் சர்ம பாதிப்புகள் ஏற்படலாம். கோடையில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி நேரம் வெளியே போவதை தவிர்ப்பது நல்லது. போக நேர்ந்தால் குடை (அ) தொப்பி, உடல் முழுவதும் மூடும் ஆடைகளுடன் செல்லவும். சன் கிரீம் லோசன்-ஐ தடவிக் கொள்ளலாம்.
பயன்கள்
உணவிலிருந்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகின்றது. இதனால் எலும்புகள், பற்கள் வலிவடைகின்றன.
விட்டமின் டி குறைந்தால் பஞ்சு போல் நெகிழ்ந்து வளையும். எலும்பு நோயான ரிக்கெட்ஸ் குழந்தைகளை தாக்குகின்றது.
விட்டமின் டி குறைபாட்டினால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும்.
கிடைக்கும் பொருட்கள்
சூரிய ஒளி
பால்
வெண்ணெய்
தானியங்கள்
கீரை, காய்கறிகள்
முட்டை
மீன்கள்.
தினசரி தேவை
50 வயதை தாண்டியவர்களுக்கு தாங்கள் வழக்கமாக உட்கொள்வதை விட இரு மடங்கு அதிகம் எடுத்துக் கொள்ளவும். 70 வயதை தாண்டியவர்களுக்கு இன்னும் அதிகம் தேவை.
50 வயதிற்கு குறைந்தவர்கள் – 200 ஐ.யு.
51 லிருந்து 70 வயது வரை – 400 ஐ.யு.
70 வயதை தாண்டியவர்கள் – 600 ஐ.யு.
வைட்டமின் டி குறைந்தால்
முன்பு சொன்னபடி குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் ஏற்படும். ஆஸ்டியோ பொராசிஸ் ஏற்படலாம்.
காது கேளாமை, வாய் தொண்டை எரிச்சல்.
எலும்பு, தசை பலவீனமடையும்.
அதிகமானால்
பசியின்மை, தலை வலி, பேதி ஏற்படலாம். உடல் சோர்வடையும். கால்சியம் தேங்கி அதிக அளவு நாளங்களில், சிறுநீரகத்தில், இதயத்தில் படிந்து பல நோய்களை உண்டாக்கும்.

உணவு நலம் நவம்பர் 2011

Read more >>

நார்சத்து நமது உயிர்சத்து


நார்சத்து நமது

நமது உணவு முறை தவறுகளாலேயே பல நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே நமது உணவுகள் பற்றியும், அதன் தன்மைகளை பற்றியும் தெரிந்து கொண்டால் தான். அதனை நாம் பயன்படுத்த முயல்வோம். இல்லையேல் தேவையானவற்றை நீக்கியும், தேவையற்றவற்றை உபயோகித்தும் நோய்களுக்கு ஆளாகி விடுவோம். உணவுகளில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இது பல நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றவல்லது. இந்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக பழங்கள், காய்கள், கீரைகள், தானியங்கள் முதலியவற்றில் தான் அதிகமாக உள்ளது. இதனைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டு, பயன்படுத்தி நோய்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்.
பழங்களிலும், காய்கறிகளிலும், தானியங்களிலும், கீரைகளிலும் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக இருப்பது நார்ச்சத்து ஆகும். பழங்கள், காய்களில் அதன் மேல் தோல்களிலும், தானியங்களில் உமிகளிலும் உள்ளது. தண்ணீர் உட்பட மிக எளிதில் கிடைக்கும். எந்த, பொருட்களையும் நாம் துதிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை உமி என்பது செல்லுலோஸ் என்னும் நார்சத்து ஆகும். தவிடு என்பது தையமின் ஆகும். தவிட்டில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் செல்லுலோஸ் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. தற்போது தான் செல்லுலோஸ் என்னும் நார்ச்சத்து, நமது உடலுக்கும், குடலுக்கும் ஒர் இன்றியமையாத வேர் சத்து என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.
பல சாலிக்கு பாலிசாக்ரைடுகள் கூட்டு சர்க்கரை உடலுக்கு சக்தி தரும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. சக்தி மாற்றத்திற்கு நமது உடல், கார்போஹைட்ரேட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறது. இது இல்லாத போதே புரதமும், கொழுப்பும் எரிக்கப்படுகின்றன. இது நமது உடலில் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன.
பாலி சாக்ரைடுகள் ஸ்டார்ச்சு, டெக்ஸ்டிரின், கிளைகோஜன், செல்லுலோஸ்
டைசாக்ரைடுகள் இரட்டை சர்க்கரை சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ்
மோனோ சாக்ரைடுகள் ஒற்றை சர்க்கரை குளூக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகின்றன
நாம் பாலிசாக்கரைட்டுகளை உண்டு, அவைகள் நமது சீரண நீர்களால் டைசாக்கரைட்டுகளாகவும், மோனோ சாக்கரைட்டுகளாகவும், மாற்றப்படுவதே சரியான வழியாகும். அவ்வாறில்லாமல், மோனோ சாக்கரைட்டுகளையே நாம் உண்போமானால் செரிமான பாதையில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியமும் கெடும்.
நார்சத்து என்றால் என்ன செல்லுலோஸ் பாலிசாக்கரைடுகளில் சேர்ந்தே உள்ளது. இது தாவரங்களில் மட்டுமே காணப்படும். நார்ப்பொருளாகும். தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் சுற்றுச்சுவரில் இந்த நார்ச்சத்து இருப்பதால் தான், தாவரங்களில் மட்டும் இது காணப்படுகிறது. விலங்குகளின் செல்களில் சுற்றுச்சுவர் கிடையாது. அதனால் இது, சீரண நீர்களால், சீரணிக்கப்படுவதில்லை. சீரணத்திற்குப் பிறகும் மாற்றம் அடையாது அப்படியே உள்ளது.
நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது. தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது. முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு. காய்கறிகளில் குறிப்பாக அவரை இனங்களில் இதற்கு குறைவில்லை. மாமிச உணவுகளிலும், தோல் நீக்கப்பட்ட தானியங்கள், பருப்புகள் மற்றும் கிழங்குகளில் இது இல்லை.
மலச்சிக்கலுக்கு மாமருந்து
நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த செல்லுலோஸ் எனப்படும். நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும் வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில் எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது. இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும் செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும். மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய் என்று சொல்கிறோம். இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும் மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன. இந்த மூலநோய் முற்றிவிடாத இரத்த போக்கால் குடல்களில் சோர்வு ஏற்பட்டு, குடல்கள் வறண்டு குடல்புற்று நோயாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு சாதாரண விஷயமான இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் மற்றும் கீரைகளை குறிப்பாக நார்சத்து உள்ள தோல்பகுதியை நீக்காமல் உண்ண தவறுவதால் ஏற்படும் விளைவுகள் பலப்பல. எனவே நார்சத்தின் பயன்களை அறிந்து அவற்றை உணவில் சேர்த்து பலன் பெறுவோம். குறிப்பாக தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டாலும் கூட 50% மலச்சிக்கலை தவிர்க்கலாம். பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் செய்யும் தவறுகள் பலப்பல. அவை முதலில் அரிசி பொதுவாக தவிடு நீக்கிய அரிசியை தான் நாம் வாங்குகிறோம். தவிடு நீக்கிய அரிசியின் மேல் உமி என்னும் நார்ச்சத்து படர்ந்து காணப்படும். இது மிக மிக முக்கியமானது. அரிசியை கழுவுவதின் மூலம் 50% உமியை நாம் இழந்து விடுகின்றோம். அரிசியை ஊற வைத்து பின்பு கழுவி சமைப்பதனின் மூலம் 80% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். சமைத்த சாதத்தை வடிப்பதின் மூலம் 100% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். மீதம் நாம் உண்பது ஒன்றுமே இல்லாத சாதம். அதை சாப்பிடுவதின் மூலம் ஒரு பயனுமில்லை. இதற்கும் மேலாக ஒரு படி மேலே போய், ஒரு சிலர் தவிடு நீக்கிய அரிசியை பாலீஷ் போடுவதின் மூலம் உமி என்கிற அந்த நார்சத்தை 100 முதலிலேயே இழந்து விடுகின்றனர். பிறகு சமைத்து சாப்பிடுவதால் சக்தி, நேரம் போன்றவை வீணாவதை தவிர வேறு ஒரு பலனும் நம்மை வந்தடைவதில்லை. எனவே அரிசியை பாலீஷ் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் அரிசியை ஒரு முறை கழுவிவிட்டு, இரண்டாவது முறை ஊறவைக்கும் தண்ணீரோடு அரிசியை வேக வைத்து, கஞ்சி வடிக்காமல் சாதம் செய்து சாப்பிட்டால் அரிசியிலுள்ள 80 நார்ச்சத்தை நாம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை. மேற்கூரிய தவறுகளை திருத்தி கடைபிடித்தால் வேண்டிய நார்சத்தை பெற்று நலமோடிருக்கலாம்.

உணவு நலம் நவம்பர் 2011

Read more >>

வளர்சிதை மாற்றம் (Metabolism)

 

வளர்சிதை மாற்றம் Metabolism

டயாபடீஸ்ஸை metabolism கோளாறு என்கிறோம். metabolism என்பது உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியல், ரசாயன மாற்றங்கள் மற்றும் சீரண மண்டல இயல்பாடுகள், உணவு சத்துப் பொருளாக மாற்றுதல், உயிரணுக்கள் (Cells), திசுக்கள் உண்டாக இவற்றுக்கு தேவையான எரிபொருள்சக்தி போன்ற எல்லாவித இயல்பாடுகளையும் குறிக்கும் ஒரே வார்த்தை. நம் உணவு எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.
நாம் பலவித உணவுகளை பலவித இடங்களில் உண்ணுகிறோம். நாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டாலும் சரி, "கையேந்தி" பவன்களில் சாப்பிட்டாலும் சரி, இல்லை வீட்டில் சாப்பிட்டாலும் சரி, நம் உடல் நாம் சாப்பிடும் உணவை புரிந்து கொள்ளாது, அதற்கு தயிர் சாதமும் ஒன்று தான், மட்டன் பிரியாணியும் ஒன்று தான். அதற்கு தெரிந்த தெல்லாம், மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை தான்.
நாம் உணவு உண்பது எதற்காக? உடல் வளர்ச்சிக்காக, உடல் உறுப்புகள் சரிவர, சுறு சுறுப்பாக இயங்க, உடலை பாதுகாக்க, உடல் வலிமைக்காக, சுருக்கமாக சொன்னால் உயிருடன் வாழ உணவு தேவை. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுப்பொருளை சர்க்கரையாகவும், புரதத்தை அமினோ அமிலமாகவும், கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகவும் (Glycerol) கிளிஸராலாகவும் மாற்றப்படுகின்றன. இதற்கு வயிற்றில் உண்டாகும் ஜீரணத்திரவங்கள் (Gastric juices), கல்லீரலால் உண்டாகும் பித்த நீர் (Bile), கணையம் தயாரிக்கும் என்ஸைம்களும் உதவுகின்றன.
மாவுப்பொருட்கள் (Starch, Carbohydrates) மூன்று ரக சர்க்கரைகளாக மாற்றப்படுகின்றன. அவை
1. ஒற்றை சர்க்கரை (Mono – Saccharide) - இவை பழங்கள், பால் சார்ந்த உணவுகள், தேன், அத்திப்பழம் இவற்றிலிருந்து கிடைக்கும் Fructose. பழச்சர்க்கரை எளிதில் ஜீரணமாகி உடனே ரத்தத்தில் கலக்கும்.
2. இரட்டை சர்க்கரை -(Di – saccharide) இரண்டு மானோ சாக்ரைடுகள் சேர்ந்தவை. மால்டோஸ் (Maltose), லாக் டோஸ் (Lactose) மற்றும் சுக்ரோஸ் (Sucrose). மால்டோஸ், முளைகட்டிய தானியங்களிலிருந்து கிடைப்பது. லாக்டோஸ் பாலில் இருந்து கிடைப்பது. சுக்ரோஸ், கரும்பு, சர்க்கரை பீட்ருட்டிலிருந்து கிடைப்பது. இந்த direct சர்க்கரையான சுக்ரோஸ் கடந்த 50 வருடங்களில் அதிகமாக உட்கொள்ளபடுவதால், பற்கள் சிதைவு, டயாபடீஸ், உடல்பருமன், இருதயநோய், இவை அதிகமாகி விட்டன.
3. பல சர்க்கரை (Poly – Saccharides) - இது அரிசி, கோதுமை, கேழ்வரகு, கிழங்குகளிலிருந்து கிடைக்கும். இது கல்லீரலில் க்ளைகோஜன்(Glycogen) என்ற சர்க்கரையாக சேமித்து வைக்கப்படுகிறது.
தசைகளும் Glycogenஐ சேமித்து வைக்கும். இந்த மாதிரி சேமித்து வைக்கப்பட்ட Glycogen ஒரு நாள் கலோரி தேவைக்கு போதுமானது.
இந்த மாதிரி மாற்றப்பட்ட சர்க்கரை சக்தியை உடலெங்குமுள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு கொண்டு செல்வது ரத்தத்தின் கடமை. பொறுப்பாக இந்த சக்தியை ரத்தம் மாத்திரம் கொண்டு சென்றால் அதை செல்கள் ஏற்காது. ரத்தத்துடன் கூட, செல்களுக்கு அறிமுகமான ஒரு ஹார்மோன் உதவியாளர் தேவை. இந்த உதவியாளர் தான் 'இன்சுலின்' செல்கள் ஏன் ரத்தத்தை மட்டும் அனுமதிப் பதில்லை?
உடல் செல்கள் membrane எனப்படும் சவ்வால் – சருகால் மூடப்பட்டவை இந்த membrane கள் வெறும் "பை" அல்ல. Receptors எனும் புகு வாய்களை கொண்டவை. இவை பிற செல்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறமை வாய்ந்தவை. யாரை உள்ளே விடுவது யாரை உள்ள விடக்கூடாது என்று தெரிந்தவை.
எதற்காக இந்த பாதுகாப்பு? உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் செல்கள் உள்ளன. இவை அந்தந்த அவயத்திற் ஏற்ப பிரத்யேகமானவை. இவை வேறு அவயங்களுக்கு சென்று விட்டால் குழப்பம் தான். உதாரணமாக தலை முடி செல் கண்ணுக்குள் புகுந்து விட்டால், கண்களிலிருந்து முடி வளரும்!
எனவே ரத்தம் தனியாக செல்களை அணுகி, க்ளுகோஸை தள்ளி விட முடியாது. கூடவே செல்லும் இன்சுலின் தான் திறவுகோல். சாவி பூட்டைத் திறப்பது போல், இன்சுலின் உடல் செல்களுடன் ஒட்டி இணைந்து, "தாள் திறவாய்" என்று செல்லின் அனுமதியுடன் குளுகோஸை செல்லுக்குள் செலுத்த உதவும்.
எனவே தான் இன்சுலின் குறைந்தாலோ அல்லது நின்று விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரை தேங்கிவிடும்.
உணவில் உள்ள கார்போஹைடிரேட் சில மணி நேரங்களிலேயே ஒற்றை சர்க்கரையாக மாற்றப்படும். இந்த ஒற்றை சர்க்கரை ரத்தத்தில் காணப்படும் மற்றும் எரிசக்தியாக உடலுக்கு உதவும். சில கார்போஹைடிரேட்டுகளை மாற்றுவதில்லை. இவை பழச்சர்க்கரை. இவை நேரடியாக செல்களின் எரி பொருளாகின்றன. இவை குளூக்கோஸாக மாற்றப்படுவதில்லை. எனவே திக்ஷீuநீtஷீsமீ இன்சுலின் / குளூக்கோஸ் சமாசாரங்களில் பங்கெடுப்பதில்லை. சம்மந்தப்படுவதுமில்லை. தவிர செல்லுலோஸ் எனப்படும் மாவுச்சத்தும் குளூக்கோஸாக மாற்றப்படுவதில்லை. காரணம் இவற்றை நம் உடல்களால் மாற்ற இயலாது!

உணவு நலம் டிசம்பர் 2011

Read more >>

Tuesday, 21 February 2012

உடல் எடையைக் கூட்ட, குறைக்க திராட்சை சாப்பிடுங்கள்!!


உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

Read more >>

உங்களுக்கு தைராய்டு தொல்லையா? இதோ சில அலோசனைகள்…

 

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

டயட்

உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்' என்கிறார் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

Read more >>

Monday, 20 February 2012

எளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களுக்கு…

 

பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.

· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..

அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்
.

Read more >>

Sunday, 19 February 2012

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ? அல்சரை அடித்துவிரட்ட கடுகு- தேங்காய் பச்சடி !

 

ஒபிசிட்டி எனும் அதீத உடல்பருமன் நோய் உள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்… நீரிழிவு எனும் சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்…'என்று கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். இனி, அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச் னையில் சிக்கியிருப்போருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன… அவற்றைத் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பார்க்கலாம்… அல்சர் பற்றிய சில விஷயங்களை அசைபோட்டபடியே!

எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதிதான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!

வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது… ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார்.

எப்பவும் 'கபகப'னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப்ப, வாந்தி வேற வந்து இம்சைப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயித்து வலியால சுருண்டு போயிடறேன்' இப்படி அலறி துடிப்பவர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக் கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.

மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.

அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, 'ஹெச் பைலோரை' (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.

இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான 'டியோடினம்'என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு 'பெப்டிக் அல்சர்' என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்துவிடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டுவிடும்.

வந்திருப்பது அல்சர்தானா… புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது… ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?' என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம். எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.

வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன்குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு 'திம்'என்று இருக்கும். இதையே சிலர், 'சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்குமோ?' என்று நினைப்பார்கள். இப்படி அடைப்பு ஏற்படும்போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறுகுடலுக்கு போய்விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கிவிடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.

வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்… அல்சரை அறவே ஒழித்துவிடலாம்" என்றார் டாக்டர் சந்திரமோகன்.

அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப்.

கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை: கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் – அரை மூடி (100 கிராம்), தயிர் – ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் – 2, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் அவியல் கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது – ஒரு கப், தயிர் – அரை கப் (50 மில்லி), சர்க்கரை – ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் – கால் கப் (25 கிராம்), பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 5 மில்லி.

செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.

இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்த ரெசிபிகள் பற்றி 'டயட்டீஷியன்'கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்?

செஃப் சொல்லியிருக்கும் இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி யாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படு வதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்பதால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்" என்றார் டயட்டீஷியன்.

Read more >>

ஆலிவ் எண்ணெய் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து !

 

கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுது தங்கம் என்று கூற வாய் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம் விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.

ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்கு திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி… ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்ற கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாக புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரம்ப நிலை புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில், இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவை சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ''பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்'' என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய், அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் த டுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும், அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி' முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் 'திரவத்தங்கம்' என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்பு செய்து, இரண்டாம் முறை வடிகட்டும் எண்ணெய் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், இது சுத்திகரிப்புக்கு உட்பட்டு கிடைப்பதால்.

மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள் பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயை, அதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்ட பி ன்பு செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு (Deep Fry) ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள்தான் பஜ்ஜி, போண்டா, வடை என்று எண்ணெயில் குளிக்கும் உணவுகளைப் பொரித்துக் (Deep Fry) கொறிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆயிற்றே. அதனாலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அயல்நாடுகளை நோக்க இங்கே மிகக் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போல சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.
ஆலிவ் எண்ணெயைக் காலையில் இரு சொட்டுகள் வாயில் இட்டு நன்கு ஆயில் புல்லிங் செய்துவிட்டு வெளியில் துப்பாமல் முழுங்கிவிட்டால் வயிற்றில் அமிலம் சுரப்பது (Acidity) அறவே நீங்கி விடும் என்று ஆலிவ் எண்ணெய் சூப்பர் மார்க்கெட் கூறுகிறது. 10 சொட்டு ஆலிவ் எண்ணெய் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நமைச்சல், கல் போன்றவற்றை அகற்றி விடும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.

அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

பொன்பொடியை (தங்க பஸ்பம்) பொன்மனச்செம்மல் பயன்படுத்தியதாகக் கூறுவர். ஏன்? உடல் வலிமையோடு இருக்க இல்லை. உடல் மினுமினுப்பாக இருக்கவாம். அதனால்தான் அவர் பொன் போல மின்னினார் என்கிறார்கள். எல்லோரும் என்ன 13.7.18 ஆ, தங்க பஸ்பம் சாப்பிட்டுத் தங்கம்போல ஜொலிக்க? புரியலையா விநிஸி ஆ என்று கேட்டேன். ஆங்கில எழுத்துக்களைக் கூட்டிக் கழிச்சுப் பாருங்க சரியாத்தான் இருக்கும். என்னதான் விலை கூடுதல் என்றாலும் ஆலிவ் எண்ணெயான இந் தத் திரவத்தங்கம் நிச்சயமாகத் தங்க பஸ்பத்தைவிட விலை குறைவாகத்தான் இருக்கும்.. நம்புங்கள்…

Read more >>

Saturday, 18 February 2012

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!

 

ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தும், பாதிப்படைந்தவருக்கு வலி குறையவில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணில்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத்துவரிடம் அனுப்புகிறார். கண் மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார். கண்ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனுப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்த பிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடும்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். "எதற்கும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன' என்று மருத்துவருக்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த நோயாளி. ரிசல்ட் படு சுத்தம். ஒரு பிரச்னையும் இல்லை. கடைசியாக வலி நிர்வாகத்துறைக்கு வருகிறார் அந்த நோயாளி. அங்கேதான் அவருக்கான சரியான தீர்வு கிடைக்கிறது.

எந்த நோயாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே வலி நிர்வாகத்துறை மருத்துவர்களிடம் போய்விட்டால் பிரச்னையே இல்லை. அவர்கள், வலி எதனால் வருகிறது, என்ன சிகிச்சை தரவேண்டும், நோய் எப்போது முழுமையாக குணமாகும் என்று அத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துவிடுவர். இது ஒன்றும் மந்திர வித்தை இல்லை. அதே சமயம், "என்னிடம் ஒரு நாற்காலி இருக்கிறது. அதில் உட்கார்ந்தால் எந்த வலியும் இல்லாமல் போய்விடும்' என்று சொல்லும் ஏமாற்று வித்தையும் அல்ல. புதுவிதமான மருத்துவ முறையும் அல்ல. "அல்ஜியாட்ரி' என்றழைக்கப்படும், சிகிச்சை முறை தான் இது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வரும் அலோபதி மருத்துவம் தான் இதுவும். அதன் அடிப்படையில், உலகெங்கும் இருக்கும் பல்வேறு டாக்டர்கள் செய்த ஆராய்ச்சிகளாலும், சோதனைகளாலும் கிடைத்திருக்கும் அதிசயம். பொதுவாக, மருந்து, மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மிக அதிகமான டோஸ்கள் கொண்ட மாத்திரையையோ, மருந்தையோ சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வரும். சிறுநீரகக் கோளாறு வரும். இதயத்தில் பாதிப்பு ஏற்படும். இது போல என்னென்னவோ எதிர் விளைவுகள் தோன்றும். ஆனால், அல்ஜியாட்ரி சிகிச்சையில் அது கிடையாது.

காரணம் என்னவென்றால், ஊசி மூலமாகச் செலுத்தப்படுவது மருந்து அல்ல. ஒரு வகை சுத்தமான காற்று என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் நிஜம். அதே போல நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளும், பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தாதவை. முக்கியமாக அறுவை சிகிச்சை என்பது கிடையவே கிடையாது. இந்தியாவில் மக்களை அதிகம் பாதிக்கும் நோய் எது? எயிட்சா? காச நோயா? நீரிழிவு நோயா? கிடையாது. "ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்ட்' என்று சொல்லப்படும் மூட்டுவலிதான் என்று அடித்துச் சொல்கிறது ஒரு புள்ளி விவரம்.

"வயசானாலே மூட்டு வலி வந்துவிடும்' என்று சிலர் சொல்வர். உண்மையில், வயதுக்கும், மூட்டு வலிக்கும் சம்பந்தமே இல்லை.உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, மூட்டு வலி சர்வ சாதாரணமாக வந்துவிடும். நமக்குத் தெரிந்த குடும்பங்களிலேயே, யாராவது ஒருவருக்காவது, நிச்சயம் மூட்டுவலி இருக்கும். இந்நோய்க்கு, மருத்துவத்துறையில் மருந்து, மாத்திரை, பிசியோதெரபி என்று, பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவற்றால் பலன் கிடைக்கவில்லை என்றால், டி.கே.ஆர்., என்ற அறுவை சிகிச்சையை இறுதியாகச் செய்வர். அதை, Total Knee Replacement என்று சொல்வர்.

அறுவை சிகிச்சை மூலம், செயற்கை முறையில் கால் மூட்டைப் பொருத்திவிடுவர். முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கூட இந்தச் சிகிச்சையைச் செய்திருக்கிறார். வலி கூடாது என்பதற்காக இந்த அறுவை சிகிச்சை. அதற்குப் பிறகு சிகிச்சை பெற்றவர்கள், ரோபோ மாதிரி நடப்பர். டி.கே.ஆர்., அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவில், 10 அல்லது 20 சதவீதம் தான் செலவு ஆகும். மூட்டுவலி மட்டும் அல்ல, தலைவலி, புற்று நோயால் ஏற்படும் வலி ஆகியவற்றுக்குக்கூட வலி நிர்வாகத்துறை சிகிச்சை கொடுத்து குணப்படுத்துகிறது. ஒரு நோயாளி வருகிறார். தனக்குத் தாங்க முடியாத தலை வலி என்று சொல்கிறார். உடனே மருத்துவர், தலைவலிக்கு மட்டும் மருந்து கொடுத்தால் அது தவறு. அந்த வலி வருவதற்கான மூல காரணத்தை ஆராய்ந்து சிகிச்சை தரவேண்டும். அதைத்தான் வலி நிர்வாகத்துறை செய்கிறது.

சரி, தலைவலி வந்தவருக்கு மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. அதனால்தான் தலைவலி என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு ஊசி போட்டால், வலி போய்விடும். அது மட்டும்தானா, வலி நிர்வாகத்துறையின் வேலை? இல்லை. அதையும் தாண்டி, அந்தக் கட்டியை அகற்ற என்ன செய்யலாம் என்று நோயின் மூலம் வேரைத் தேடிப் போய் ஆராய்கிறது இந்த துறை. அதற்கான சிகிச்சையையும் கொடுக்கிறது.

ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்று ஒரு நோயைப் பற்றி நாம் அறிந்திருப்போம். முகத்தில் திடீரென்று மின்னல் போல வந்து வலி தாக்கும். பாதிக்கப்பட்டவர் அப்படியே துடிதுடித்துப் போய்விடுவார். எவ்வளவு சிகிச்சை கொடுத்தாலும் தீராத அந்த நோய்க்கு வலி நிர்வாகத்துறை தரும் சிகிச்சை நிரந்தரத் தீர்வாக இருக்கிறது. "ஸ்லிப் டிஸ்க்' பிரச்னை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிற ஒன்று. முதுகுத் தண்டுவடத்தில் கணையங்களுக்கு நடுவே இருக்கும் ஜவ்வு வெளியே வந்து, அதற்கு அருகே இருக்கும் நரம்பு பாதிக்கப்பட்டு ஏற்படும் முதுகு வலி, பெரும்பாலும், எடை அதிகமாக உள்ளவர்களுக்கும், அதிக தூரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் வரும் கொடிய நோய். இந்த நோய் வந்தவர்கள், மருத்துவரைப் பார்ப்பர். அவர் சொல்கிறபடி அறுவை சிகிச்சை செய்துகொள்வர். ஆனால், அது நிரந்தரத் தீர்வு அல்ல. இழந்த ஜவ்வு திரும்ப வராது. மேலும், பல பக்கவிளைவுகள் ஏற்படும். அறுவை சிகிச்சை, தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், அந்த வலி வந்துகொண்டே தான் இருக்கும். இந்த, "ஸ்லிப் டிஸ்க்' பிரச்னைக்கு வலி நிர்வாகத்துறை சிகிச்சையில் பூரண குணம் பெறலாம். சிலருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும். தாங்க முடியாத தலைவலி இருக்கும். எப்போதும் உடல் அசதியாக இருக்கும். ஞாபக மறதி ஏற்படும். இந்த நோயை ஆங்கிலத்தில், 'Fibromyalgia' எ ன்று சொல்வர். இது, ஆண்களைவிட பெண்களை அதிகமாகத் தாக்கும் நோய்.
மருந்து கடைகளில், பெண்கள், "கை, கால், குடைச்சல். ஏதாவது மாத்திரை குடுங்க' என்று கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் பார்த்தால், வலியால் அவதிப்படுபவர்கள் போல் தெரியாது. ஆனால், கடுமையான வலியைப் பொறுத்துக் கொண்டிருப்பர். இந்த நோய்க்கும் வலி நிர்வாகத்துறை சிகிச்சையில்'Trigger Point Injections' மூலமாக குணம் பெறலாம். சில குழந்தைகள் மிக புத்திசாலியாக இருப்பர்.

ஆனால், நடக்கும் போது நேராக இல்லாமல், ஒரு மாதிரி கோணலாக நடப்பர். கைகளை வளைத்தது மாதிரி வைத்துக் கொள்வர். இதற்குக் காரணம் இருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், பிரசவ சமயத்தில் மூளைக்குள் போகிற ரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அதனால் தான் அதன் அசைவுகள் அப்படி இருக்கும். இதை, Cerebral Palsy என்று சொல்வர். இப்படியான பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் வலி நிர்வாகத்துறையில், Botox ஊசி மூலமாக குணப்படுத்தப்படுகின்றனர். மாதவிடாய் காலங்களிலும், மெனோபாசுக்குப் பிறகும், பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலிகளுக்கு நிவாரணம் வலி நிர்வாகத்துறையின் சிகிச்சையின் மூலமாகக் கிடைக்கிறது. வலி உடல் சம்பந்தமானது மட்டும் அல்ல; மனம் சம்பந்தமானதும் கூட. தொடர்ந்து வலியால் அவஸ்தைப்படுபவர்கள், பல்வேறு விதமான மனச் சிக்கலுக்கு ஆளாகிவிடுவர். அது மன அழுத்தத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடும். சமூகத்தோடு ஒட்டி உறவாட முடியாது. திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாது. நண்பர்களையோ, உறவினரையோ தேடிப் போக முடியாது. ஒரு கட்டத்தில், உறவுகளையே தள்ளி வைத்துவிடும் நிலைமை கூட வந்துவிடும். இதற்கெல்லாம் வலி நிர்வாகத்துறையில் தீர்வு கிடைக்கிறது.
வலியை மட்டும் குணப்படுத்துவது வலி நிர்வாகத்துறையின் குறிக்கோள் அல்ல. வலியின் அடிப்படைக் காரணிகளுக்குள் சென்று, அதை முழுவதுமாக ஆராய்ந்து, அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் அந்த பிரச்னையிலிருந்து பாதிக்கப்பட்டவர் விடுபட வழிவகுப்பது தான் இத்துறையின் முக்கிய நோக்கம். இவ்வாறு சொல்கிறார்

Read more >>

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..!

 

இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட்கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்.

காய்ச்சி ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும். காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும்.

கேரட் சாறு, தேன்

ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப்பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும்.

பப்பாளி, பாதம் எண்ணெய்

பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும். பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.

வைட்டமின் ஈ

முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

ஆரஞ்ச் ஜூஸ்

முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீர் குடிங்க

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருகவேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Read more >>

குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க.....

 


குழந்தைகளின் சருமம் மென்மையானது. பட்டுப்போன்ற அந்த பிஞ்சுகளின் சருமத்தை பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்காக என சோப்புகளும், லோசன்களும் வந்துவிட்டன.
அவை பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும் அவற்றில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். எனவே இயற்கை முறையில் வீடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்தோடு குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடலை மாவு

கடலை மாவை மைய அரைத்து அவற்றை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டினால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும் போது கடலை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தால் பிசு பிசுப்பு மட்டுமே நீக்கி எண்ணெய் பசையை தக்கவைக்கும். இதனால் குழந்தைகளின் சருமம் பளபளப்பாகும்.

கடைகளில் விற்கும் லோஷன்களை போடும் போது அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளுக்கு அலர்ஜி வராத நிலையிலும் பின் விளைவுகள் கண்டிப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு முடிந்தவரை நாம் இயற்கை மூலிகைகள், வழிமுறைகளைக் கொண்டே சரி செய்து கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியில் ஆலிவ் எண்ணெய்

பிறந்த குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயில் தடவும் போது அது காலை நேரமாக இருக்க வேண்டும். காலையில் இளஞ்சூரியனில் ஒரு சில நிமிடங்கள் காட்டினால் தான் நாம் தேய்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு உடம்பில் பளபளப்பை கொடுக்கும்.

பாதாம் எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு வெஜிடபிள் ஆயில் கலந்து கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கடலை மாவு கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.

கஸ்தூரி மஞ்சள்

பிறந்த குழந்தைகளுக்கு உடம்பில் முடி அதிகம் காணப்படும். நாளடைவில் ஏற்படும் மாற்றங்களால் முடி கொட்டி விட வாய்ப்பு உண்டு. வயதிற்கு வந்த பிறகு பார்த்தால் முடி அதிகம் இருக்காது. அப்படியும் இருந்தால் முடியை நீக்க, கஸ்தூரி மஞ்சளை கல்லில் உரசிப் பூசி சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு குளிக்க வைக்க வேண்டும்.

தோல் மிருதுவாக

குழந்தைகளை குளிக்க வைக்கும் தண்ணீரில் ரோஜா இதழை போட்டு, 2 மணி நேரம் கழித்து குளிக்க வைக்கலாம். அது குழந்தைகளின் சருமத்தை மிருதுவாக வைப்பதுடன் இயற்கை மணமும், புத்துணர்ச்சியும் இருக்கும்.

பள பளக்கும் சருமம்

குழந்தைகளின் சருமத்திற்கு தேவையான பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். பூலாங்கிழங்கு 100 கிராம், ரோஜா இதழ் 100 கிராம், ஆவாரம் பூ 50 கிராம், கடலை மாவு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் இவையனைத்தையும் நன்றாக வெயிலில் சுத்தம் செய்து விட்டு உலர்த்த வேண்டும். பின்னர் அவற்றை பவுராக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் தேங்காய் பாலில் குழைத்து குழந்தைகள் உடம்பில் தேய்க்கலாம். நாளாக, நாளாக சருமம் பளபளப்பாக இருக்கும்.

6 மாதங்கள் கழித்து குழந்தைகள் வளரும் பருவத்தில் சருமத்தைப் பராமரிக்க நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை ஒரு நாளில் மாற்றி மாற்றி ஒன்றோ அல்லது இரண்டு தடவையோ நன்றாக மசித்து கொடுக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் சமைக்கிற சமையலில் கருவேப்பிலை சேருங்கள். கருவேப்பிலையை அரைத்துப் பயன்படுத்தினால், அதன் சத்து உடலுக்கு சேரும்.
Read more >>

Friday, 17 February 2012

உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே போதும்…

 

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.

சரி விகித உணவுகள்

காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

சூடான நீர்

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

வீட்டு உணவுகள் சாப்பிடலாம்

3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்,.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

பி பாசிட்டிவ்

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

Read more >>

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும்!

 


யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பத்மாசனம்

பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

புஜங்காசனம்

புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.

இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தனுராசனம்

வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.

உற்சாகம் கூடும்

யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Read more >>

Thursday, 16 February 2012

இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!

 
 
 
யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது.
 
பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
பத்மாசனம்
 
பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.
 
புஜங்காசனம்
 
புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.
 
இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
 
தனுராசனம்
 
வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.
 
உற்சாகம் கூடும்
 
யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Read more >>

கண்களின் அழகை பாதிக்கும் கருவளையம் : எளிதில் போக்க டிப்ஸ்!


முகத்திற்கு முத்தாய்ப்பாய் அழகை தருபவை கண்கள். அந்த கண்களில் ஏற்படும் சோர்வு முக அழகையே மாற்றிவிடும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் கண்களின் அழகை பாதித்துவிடும். எனவே கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.உடல் உஷ்ணம்

உடல் உஷ்ணம் நேரடியாக கண்களை பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலை தரும். கண்களை குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை கண்களை மூடி பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

புத்துணர்ச்சி தரும் தண்ணீர்

ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி அதை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும், இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு போன்றவற்றை அகற்றிவிடும்.

அழகை பாதிக்கும் கருவளையம்

கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். தூக்கம் குறைவாக இருந்தாலே கருவளையம் ஏற்படும். அதிகமான கணினி பயன்பாடும் கருவளையம் தோன்ற காரணமாகும். எனவே 7 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளை சேர்க்கவேண்டும். வைட்டமின் எண்ணெய் வைத்து கண்ணை சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.

பளிச் பாதாம் பருப்பு

கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்டவின் கழுவ வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதை கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் மறையும்.

வசீகரிக்கும் ஆரஞ்சு

கண் வசீகரத்திற்கும், உடல் அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து, கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.

Read more >>

பால் போன்ற முகத்துக்கு பப்பாளி!

 


வயோதிகத்தை விரட்டி இளமையைத் தக்க வைக்கும் அற்புதப் பழம் பப்பாளி. எல்லா விதமான சருமத்துக்கும் ஏற்ற பப்பாளியின் பலன்களைப் பார்ப்போமா?
டீன்-ஏஜில் முகம் முழுக்கப் பருக்கள் ஏற்படும். அவை புண்ணாகி, காய்ந்து போவதால் முகம் சொரசொரப்பாகி, அழகை கெடுக்கும். இதற்கு பப்பாளியில் நிரந்தரத் தீர்வு உண்டு.
மேல்பகுதி கரும்பச்சையாகவும் உள் பகுதி சிவப்பாகவும் உள்ள பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி வர, முகத்தில் உள்ள பருக்கள் மறையும். சொரசொரப்பும் மாறி, சருமம் மிருதுவாகும்.
வயதாவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குகிறது பப்பாளி. கனிந்த பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்து, முகத்தில் பூசி வந்தால், சுருக்கமும் தொய்வும் ஓடிப் போகும். முகம் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் வசீகரிக்கும்.
சிலருக்கு சருமம் வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதற்கும் வைத்தியம் இருக்கிறது பப்பாளியில்..

தோலுடன் அரைத்த முற்றிய பப்பாளி பழத்தின் விழுது - 2 டீஸ்பூன், 'வைட்டமின் ஈ' ஆயில் - ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இவை கலக்கும் அளவுக்கு வெள்ளரி விதை பவுடரை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கழுவுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இந்த சிகிச்சையைச் செய்து வர, சருமம் மிருதுவாகி.. முகம் பால் போலாகி விடும்.
வெயிலில் அலைவதால் முகம் கருமை படிந்து டல்லாகத் தெரியும். ஒரு தாமரை இலையுடன் ஒரு பப்பாளி இலையை சேர்த்து அரைத்து, உடலில் வெயில் படும் இடங்களில் தேய்த்துக் கழுவுங்கள். இழந்த நிறத்தை மீட்டு, பொலிவைக் கூட்டும் இந்த இலை பேஸ்ட்!

கூந்தலின் வறட்சியைப் போக்கி, சீக்காளி கூந்தலுக்கு போஷாக்கு தருகிறது பப்பாளி.
முற்றிய பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இலையை எடுத்து கைகளால் கசக்கினால் நுரை போல வரும். அதை அப்படியே அதே கொதி நீரில் கரைத்து வடிகட்டுங்கள். இந்த நீரில் கூந்தலை அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, பட்டுப் போல் மென்மையாகும் கூந்தல்.

பப்பாளி இலைகளுடன் 5 செம்பருத்தி இலைகளை சேர்த்துக் கொதிக்க விட்டும் இதே சிகிச்சையைச் செய்யலாம். இந்த இலைகளுடன் 5 புங்கங்காய்களின் தோலைச் சேர்த்து, கொதிநீரில் போட்டு, எடுத்து, அரைத்து, சீயக்காய்க்கு பதில் தேய்த்துக் குளித்தால், தலை சுத்தமாகும். இது உடலுக்கும் குளிர்ச்சி!
ஒரு பப்பாளியை தோலுடன் துருவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு வினிகரை விட்டு, இறுக மூடி விடுங்கள். 5 வாரம் கழித்துக் கிடைக்கிற பப்பாளி வினிகர் அற்புதமான அழகு மருந்து!


பப்பாளி வினிகரை பஞ்சால் தொட்டு, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். அழுக்கெல்லாம் ஓடிப்போய் சருமம் சூப்பர் சுத்தமாகி விடும். வாரம் இருமுறை இந்த சிகிச்சையைச் செய்யலாம்.
பப்பாளி துண்டுகள் இரண்டை எடுத்து, விழுதாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் பப்பாளி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 'பேக்' ஆகப் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். 'ப்ளீச்' செய்தது போல முகம் பளிச்சிடும்.
ஒரு டீஸ்பூன் பப்பாளி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு கற்றாழை ஜெல்.. மூன்றையும் கலந்து, முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிஜொலிக்கும்.
________________________________________
''மறையுமே மூட்டு வலி!''

'' 'விட்டமின் ஏ' நிறைந்த பப்பாளிக்கு கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு.
பப்பாளி பழத்தின் சதைப் பகுதி கேன்சரின் தீவிரத்தைக் குறைக்க வல்லது. இதை 'சாலட்' ஆகச் செய்து சாப்பிடலாம்.
பப்பாளியை ஜூஸாக அருந்தி வர, மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.
தினமும் ஒரு பப்பாளி துண்டை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி விடும்.
வெறும் வயிற்றில் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால் குடலில் உள்ள வட்டப் புழுக்கள் அழியும்.

பப்பாளி, நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, பப்பாளிக் காயை கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.
கை, கால் குடைச்சல், மூட்டு வலிகளைப் போக்கக் கூடியது பப்பாளிச் சாறு.
பப்பாளி, இளமையான தோற்றத்தைத் தரும். நரம்புகளை வலுவூட்டி சக்தி கொடுக்கும். பல் ஈறுகளை வலுவாக்கி பல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
பப்பாளியில் உள்ள சில என்சைம்கள் இதயத்தை வலுவாக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.''
Read more >>

இயற்கை தரும் இளமை வரம்! ரோஜா தைலம்!

 
 


இயற்கை தரும் இளமை வரம்!

ராஜகளை தரும் ரோஜா தைலம்!

ரோஜாப் பூவில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்-படும் தைலம் சருமத்துக்கு மிருதுத் தன்மை-யையும் பளபளப்பையும் கொடுப்ப-துடன் நல்ல நிறத்தையும் தருகிறது. இந்த ரோஜாத் தைலத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.

ரோஜாப் பூக்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதின் அளவில் சம பங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து, மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். தண்ணீர் வற்றி சத்தம் அடங்கியதும் நல்ல வாசனையுடன் தைலம் தனியாகப் பிரியும். இப்போது இறக்கி, ஆற வையுங்கள். இதுதான் ரோஜா தைலம். இதை சென்ட் பாட்டிலில் அடைத்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இந்த ரோஜா தைலத்தால் என்னவெல்லாம் உபயோகம்? பார்ப்போமா?

இரண்டு துளி ரோஜா தைலத்துடன் ஒரு துளி தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் பளபளக்கும். கருத்த உதடுகள் நிறத்துடன் ஜொலிக்கும்.

கண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது ரோஜாத் தைலம். 2 துளி ரோஜாத் தைலத்-துடன், 2 துளி தேன், அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடரை கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, கழுவுங்கள். கருவளையம், வறட்சி நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.

5 துளி ரோஜா தைலத்துடன் கடுகு எண்ணெய் 5 துளி, கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, பாதங்களில் பூசி தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் வெடிப்புகள் மறைந்து பாதம் பஞ்சு போல் மிருதுவாகி விடும்.

முழங்கை, முழங்கால், கணுக்கால், மூட்டு பகுதிகளில் தோன்றும் கருமையை மறைய வைக்கும் சக்தியும் இந்தத் தைலத்துக்கு உண்டு. 5 துளி தேனுடன், 3 துளி ரோஜா தைலம், கால் டீஸ்பூன் வெண்ணெயை குழைத்துத் தடவுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் கருமை மறைந்து மிருதுவாகும் அந்தப் பகுதிகள்.

பருக்களால் முகத்தில் தழும்பு ஏற்பட்டிருக்கிறதா? தழும்பின் மீது தினமும் ஒரு சில துளிகள் ரோஜா தைலத்தைத் தடவி வந்தால், முகம் மெழுகு போல் மின்னும்.

6 முதல் 8 துளி ரோஜா தைலத்துடன், சிவப்பு சந்தனத் தூள் அரை டீஸ்பூன் கலந்து முகத்தில் 'பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 6 மணி நேரம் ஆனாலும் அன்று மலர்ந்த தாமரைபோல் முகம் ஃப்ரெஷ் ஆகவே இருக்கும்.

உடலைக் குளிர்ச்சியாக்கி, வறண்ட கூந்தலை மிருதுவாக்கு-வதிலும் ரோஜாவுக்கு நிகர் வேறில்லை. 10 கிராம் ரோஜா மொட்டு-டன், 10 கிராம் செம்பருத்திப் பூ, 4 செம்பருத்தி இலையை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வாரம் இருமுறை இதைத் தலைக்குத் தேய்த்து அலசுங்கள். ரோஜாவில் எண்ணெய்ப் பசை இருப்ப-தால் பளபளப்பைக் கொடுக்கும். செம்பருத்தி, கூந்தலை சுத்தப்படுத்தி, மிருதுவாக்கும்.

கருகரு கூந்தலுக்குக் கை கொடுக்கிறது ரோஜா. ஒரு கப் சிவப்பு ரோஜாப் பூ இதழுடன், ஒரு கப் செம்பருத்தி இதழ், தோல் நீக்கிய புங்கங்காய் 3.. இவற்றை எடுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சக்கையை எடுத்து விடுங்கள். இந்தத் தண்ணீரில் சீயக்காய் (அ) பயத்த மாவைக் கலந்து தலைக்குக் குளித்து வர, கூந்தல் மிருதுவாகும். கருகருவென்று அடர்த்தியாகவும் வளரும்.

சீராகுமே சுவாசம்!


வெற்றிலை, பாக்கு போடும்போது ரோஜா இதழ்களை சிறிது சேர்த்துக் கொண்-டால்.. அஜீரணக் கோளாறு நீங்கும்.

காதில் திருகு வலி ஏற்பட்டால், 2 சொட்டு ரோஜா தைலத்தைக் காதுக்குள் விட்டால் வலி, குத்தல் மறைந்து விடும்.

ஒரு கப் ரோஜா இதழுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியாகும்.

ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதனுடன் பால், வெல்லம் சேர்த்துக் குடித்தால்.. வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஓடிப் போய், வாய் மணக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் 5, 6 ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால்.. சிறுநீர் நன்றாகப் போகும்.

சளித் தொல்லையால் அவதிப்-படுபவர்கள்.. ரோஜாவை முகர்ந்தாலே போதும். சளி, மூக்கடைப்பு நீங்கி, நன்றாக சுவாசிக்க முடியும்.

ஜோரா முகம் ஜொலிக்க ரோஜா
'ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக் கிளியே அழகிய ராணி..'







'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்..'

'ரோஜா.. ரோஜா..'

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சினிமா பாடல்கள் உலகில் ராஜாங்கம் நடத்தும் ரோஜாப் பூக்களின் அழகை!

பார்க்க மட்டுமா அழகு ரோஜா? அழகு பலன்களை அள்ளித் தருவதிலும் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை:

ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர், ஒரு அபாரமான அழகுக் கலை நிபுணர். இதை வீட்டிலேயே தயாரிக்கும் விதத்தைப் பார்க்கலாம்.

இதற்கு பிங்க் நிற ரோஜாக்களைத்தான் பயன்படுத்தவேண்டும். வருடங்கள் கடந்தாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் இந்த பன்னீர்.

50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதுதான் பன்னீர். தேவைப்படும்போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம்.

இந்த பன்னீர் எதற்கெல்லாம் உபயோகமாகிறது என்று பார்க்கலாம்..

கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகளை போக்குவதுடன், வராமல் தடுக்கவும் உதவுகிறது ரோஜா பன்னீர்.

அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர், கால் டீஸ்பூன் பால், இவை கலக்கும் அளவுக்கு ரோஜா பன்னீரை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு வயிற்றுப் பகுதியில் 5 நிமிடம் தடவி குளியுங்கள். இதனால் வயிற்றுப் பகுதி வரிகள் மறைந்து விடும். டெலிவரி ஆவதற்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த பேஸ்ட்டைத் தடவி வரலாம். இப்படிச் செய்தால் வரிகள் விழாது.

பிறந்த குழந்தைகள் சில நேரம் இரவில் தூங்கவே தூங்காது. இதற்கு, அரை டீஸ்பூன் கடலை மாவுடன், பயத்தமாவு, பூலாங்கிழங்கு பவுடர் தலா அரை டீஸ்பூன் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரைச் சேருங்கள். இந்த பேஸ்ட்டை குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். இந்த வாசனைக்கே குழந்தை நிம்மதியாக உறங்கும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பன்னீர்க் கூட்டணி.

மேக்கப் போட்ட பிறகும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டேயிருக்கும். டல்லடிக்கும் முகத்தையும் 'டால்' போல மாற்றும் சக்தி பன்னீருக்கு உண்டு. அரை டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடருடன் அரை டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு முகத்தில் பூசி கழுவுங்கள். பிறகு 'மேக்கப்' போடுங்கள். முகத்துக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் இந்த பேக். அதோடு, நீங்கள் வீட்டுக்கு 'பேக்கப்' ஆகும்வரை உங்கள் 'மேக்கப்' கலையாமலும் இருக்கும்.

ஃபேஷியல் செய்ததுபோல உங்கள் முகம் ஜொலிஜொலிக்க வேண்டுமா?

அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், ஜாதிக்காய் பவுடர், சர்க்கரை, வெண்ணெய்.. இவை தலா கால் டீஸ்பூன் எடுத்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை வாரம் ஒருமுறை முகத்தில் மேலும் கீழுமாகப் பூசி வந்தால் 'பளீரென' முகம் பிரகாசிக்கும். பருக்களும் மறைந்து விடும்.

சூடு தணிக்குது ரோஜா!

ரோஜா மலரை 'அத்தர்' என்றும் குறிப்பிடுவதுண்டு. காட்டு ரோஜா பார்க்க அழகாக இருந்தாலும் நாட்டு ரோஜாதான் வாசனையாக இருக்கும். இதில்தான் மருத்துவ குணங்கள் உண்டு.

ரோஜா பன்னீர் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

உணவுப் பொருட்களுடன் ரோஜா பன்னீரை சேர்த்துச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு நீங்கும். உடல் சூடு தணியும்.

மனக் கலக்கத்தை மாற்றி மனதை அமைதியாக்கும் சக்தி ரோஜாவுக்கு உண்டு. தலையில் தினமுமே ரோஜாவை சூடிக் கொள்வது நல்லது.

காய்ந்த ரோஜா இதழ்களை வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சுங்கள். இதுதான் ரோஸ் வாட்டர். இதைத் தினமும் ஒரு டீஸ்பூன் 45 நாட்கள் தொடர்ந்து குடித்து வர வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகள் ஓடிப் போகும்.

காய்ந்த ரோஜாவைத் தேனில் ஊற வைத்து (குல்கந்து) தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால், உடம்புக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைப்பதுடன் உடல் சூடும் தணியும்.

நல்ல காய்ந்த சிவப்பு ரோஜா இதழ்களை வெந்நீரீல் அரை மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, உப்பு கலந்து சாப்பிட்டால், வாந்தி, அதீத தாகம், உமட்டல் நீங்கி ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
Read more >>

அழகுக் குறிப்புகள் அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள்

 

கறிவேப்பிலை


இந்தியாவின் பல பகுதிகளிலும், அந்தமான் தீவுகளிலும் வளரும் சிறு பூண்டுச் செடியாகவும், சிறு மரமாகவும் காணப்படும். இலையுதிர் காலத்தில் இலையுதிர்க்கும் தன்மை கொண்ட இந்தச் செடியில் நறுமணங் கொண்ட இலைகள் சமையலுக்காக மட்டுமின்றி மருத்துவத்திற்கும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இதன் மணம் எல்லோருக்கும் பிடிக்கும்.

இலைகளில் வைட்டமின் 'ஏ', இரும்பு, தாமிர, கந்தகச் சத்தும், கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

கோனிகின் எனும் ஒருவகை மரப்பிசினும் உண்டு. காம்புகளிலும், இலைகளிலும் சிறிது சாம்பல் உப்பு இருக்கும்.

கறிவேப்பிலைச் செடியின் இலைகள், பட்டை மற்றும் வேர் முதலிய பகுதிகள் பசி தூண்ட, வெப்பமுண்டாக்க பயன்படுத்தப்படுகிறது. பசும் இலைகளிலிருந்து எண்ணெய் வடித்தெடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் அழகுசாதனப் பொருட் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும்.

கறிவேப்பிலையை வறுத்து உட்கொண்டால் வாந்தியைத் தடுக்கலாம். கொப்புளங்களுக்கும் விஷக்கடிகளுக்கும் தடவு மருந்தாக, மேல் பூச்சாக உபயோகிக்கலாம். சீதபேதிக்கு தளிர் இலையைத் தயிருடன் உட்கொள்ளலாம்.

கசக்கிய இலைகள் பற்றாக தோல் வீக்கங்களில் பயன்படுத்தலாம். தலைமுடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலையை பச்சைப் பயறுடன் கலந்து ஸ்நானப் பொடியாகப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை 2 கைப்பிடியுடன் கசகசா 9 கிராம், கஸ்தூரி மஞ்சள் 4 கிராம் அனைத்தையும் சேர்த்து மையாக அரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங் கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும். வல்லாரைக்கு உள்ள குணங்கள் இதற்கும் உண்டு. ஞாபகசக்தியை பன்மடங்கு விரிவு படுத்துவது போல, இம்மூலிகையும் சக்தியைத் தூண்டிப் பெருக்கும்.

நன்றாக முற்றிய கறிவேப்பிலை 100 கிராமுடன் சுக்கு 25 கிராம், கடுக்காய் உலர்ந்த தோல் இவற்றை நன்றாக உலர்த்தி பொடியாக்கி இந்த பொடியைத் தேவைக்கேற்றவாறு வெந்நீரில் கலக்கி குடித்து வந்தால் அழிந்து போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசி இல்லா நாக்கில் ருசியை ஏற்படுத்திக் கொடுக்கும். வாத பித்தங்கள் உடலில் ஒளிந்து கொண்டிருந்தால் அவை விடுபட்டு மறைந்து விடும்.

வளரும் குழந்தைகளுக்கும் வலுக்குறைந்த பெரியோர்களுக்கும் இரும்புச் சத்தை இழக்கும் பெண்களுக்கும் கறிவேப்பிலை சிறந்த சத்துணவு.

தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. இரத்தத்தைச் சுத்தம் செய்யும் திறன், புண்களை விரைவில் குணப்படுத்தும்

ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக வாய்ப் புண்களைக் குணப்படுத்தும். பல் ஈறுகளை வலுப்படுத்தும். வைட்டமின் 'சி' ஊட்டச்சத்து, இரத்த சோகையை விரட்டியடிக்கும் பாலிக் அமிலம் எனும் உயிர்ச்சத்து இதில் அடங்கியுள்ளது. தலைமுடியின் வளர்ச்சிக்கும் வனப்புக்கும் உதவும் ஊட்டச்சத்துகள் கறிவேப்பிலையில் நிறைய உண்டு. கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும்.

ஜீரணத்திற்கு உதவும் சிறந்த மருந்தாக இந்த இலை பயன்பட்டு வருகிறது. இந்த இலை தனித்தும், பிற பொருள்களோடு சேர்ந்தும் நம் நோய்களை போக்குகிறது.

பசும் இலைகளிலிருந்து நீராவி அழுத்தத்தில் தைலம் வடித்தெடுக்கப்படுகிறது. இத்தைலம் குளியல் சோப்புகளில் சேர்க்கப்படும் நறுமணங்களை நிலைக்க செய்ய பயன்படுகிறது. கறிவேப்பிலைப் பழங்களில் இருந்தும் தைலம் வடிக்கப்படுகிறது.

முகத்திலுள்ள அம்மைத் தழும்பினை போக்க கைப்பிடி கறிவேப்பிலையுடன், கசகசா 15 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், இவற்றை மை போல அரைத்து முகததில் கனமாகப் பூசி கால் மணி நேரம் ஊறவைத்து பின் வெந்நீர் கொண்டு கழுவி விட வேண்டும். இவ்விதம் காலை, மாலை இரு வேளை செய்யப் படிப்படியாக தழும்பு மறைந்து விடும்.

தைலம் காரச் சுவையும், அழுத்தமான நறுமணமும் கொண்டிருக்கும். நாட்டு மருந்து வகைகளில் கறிவேப்பிலைச் செடியின் இலைகள், பட்டை மற்றும் வேர் முதலிய பகுதிகள் பசி தூண்ட பயன்படுத்தப்படுகிறது.

கறிவேப்பிலை மரத்தின் மலர்கள் வெண்மையாக இருக்கும். பின்னர் இது பச்சை நிறமுள்ள காய்களாகக் காய்க்கும். காய்கள் கரிய நிறமுள்ள கனியாக மாறி கீழே உதிர்ந்துவிடும். இந்த கனியினுள் கனத்த உறையுடன் கூடிய விதைகள் இருக்கும். அழகிய கரிய கூந்தலுக்கு கறிவேப்பிலை உத்தரவாதம் தரும் எளிய மருந்து.


மருதோன்றி








இது ஒரு புதர்ச்செடி. நல்ல மணமுள்ள பெரிய அல்லது நல்ல தரமான அதிகக் கிளைகளுடன் கூடிய சிறிய மரமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் எளிதாக வளரும். வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய கொத்துகளான சிறிய மலர்கள் மிகுந்த மணத்துடன் காணப்படும். அழவணம், ஐவணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இலைகள், மலர்கள் மற்றும் கனிகள், காய்கள் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ பயன் உடைய பகுதிகளாகும். மருதாணி (மருதோன்றி) இலைக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுண்டு. இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மை உடையவை. இலைகளின் சாறு உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மலர்கள் தூக்கத்தை தூண்டக் கூடியவை.

இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

இலைகளின் இளஞ்சிவப்பு நிறச்சாயம் உள்ளங்கைகள், நகங்கள், பாதங்கள் மற்றும் கேசத்திற்கு நிறங்கொடுக்கும் பொருளாகவும், துணிச்சாயமாகவும் உபயோகிக்கப்படுகிறது. நறுமணப் பொருட்கள் சேர்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது.

விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று என்ற கொடுமையான வலி நோய் தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காயெண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்.

தலை கழுவியாகவும் செயல்பட்டு கூந்தலின் செழுமையான கேச வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. மருதாணிப் பூவை அரைத்து தொழுநோய் புண்களுக்குப் பற்றிடலாம்.

கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.

இதன் கஷாயம் வறண்ட தொண்டைக்கு தொண்டை கழுவி நீர்மமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் இலைப்பசை தலைவலி, கால் எரிச்சல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. இலைகள் நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கெதிராகவும் பயன்படுகிறது. விதைகளும் வேர்ப்பட்டைகளும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

பண்டைய எகிப்தில் சடலங்கள் மருதாணி சாயத்தில் தோய்த்தெடுத்த துணிகளில் பாதுகாக்கப்பட்டன. அரேபியா மற்றும் இந்தியாவில் கைகளில் அழகிய நிற வேலைப்பாடு செய்ய இந்த சாயம் பயன்பட்டது.

மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.

இலையுடன், படிகாரமும் சேர்த்து அரைத்து அதன் விழுதை, கருந்தேமல், படைகள், கால்வலி, நரம்பு இழுப்பு உள்ளவர்கள் தேய்த்து வர இந்நோய்கள் நீங்கும். இலையை உள்ளங்காலில் தேய்த்தால் கண் எரிச்சல் நீங்கும். இலையின் விழுதை தலையின் இருபுறமும் பக்கவாட்டில், நெற்றிப் பொட்டின் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

அம்மை போட்ட காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கும் நேரிடாதவாறு பாதுகாக்க இலையை அரைத்து இருகாலடிகளில் வைத்துக் கட்டலாம். நகங்களுக்கு வைக்க நகம் யாதொரு நோய்க்கும் உட்படாமல் தடுக்கப்படும். பூவினை தலையில் சூட உடல் வெப்பம் மாறும். விதைச் சாற்றில் தாளகத்தை இழைத்து மெல்லியதாக வெண்குட்டத்தின் மீது பூசிவர நிறம் மாறும்.

மருத்துவப் பயன்கள் :
கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.




வேப்பிலை (மார்கோசா, வேம்பு)




வேம்பு இந்தியா முழுவதும் அனைவரும் நன்கு அறிந்த மரம். தென்னிந்திய மக்களால் தெய்வமாய் போற்றப்படும் இதில் மலை வேம்பு, சந்தன வேம்பு என பல வகைகளும் உள்ளன.

இம்மரம் இந்தியாவிலும், பர்மாவிலுமே பெருமளவு காணப்படுகிறது. இதன் காய் வெளிர் பச்சை நிறத்தில் நீள உருளை வடிவில் 2 செ.மீ நீளமுள்ளதாக இருக்கும். காய் வெள்ளை நிறப் பாலுடையது. காய் கனிந்து, மஞ்சள் நிறமுடைய சதைப்பற்றுடைய கனியாக மாறுகிறது. பறவைகளுக்கு பிடித்தமான பழம் இது. இதன் இலை, காய், பூ, அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

நம் நாட்டின் சாலையோரங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. வீடுகளிலும், கோயில்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. வேப்ப மரத்தால் சுகாதார கேடுகளும், முருங்கை மரத்தால் பசிப் பிணியும் வராமல் தடுக்கலாம் என்பது நம் முன்னோர் கருத்து. வேப்பமரத்தின் அடியில் அமர்வதும், அதன் மேல் பட்டு வரும் காற்றை சுவாசிப்பதும் மக்களின் மனநிலையை சாந்தமாக்கும். மனம் அமைதி பெறும்.

இதன் உலர்ந்த தண்டின் பட்டைகள், இலைகள், வேர்ப்பட்டைகள் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. இலைகள் கசப்பு சுவை உடையது. தோல் வியாதிகளுக்கும், பரு, கொப்புளங்கள் இவற்றை குணப்படுத்துவதில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.

அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் சிறந்த கிருமி நாசினியாக சேர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மற்றும் வேர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் கொண்டவை. வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளுக்கு எதிரானவை.

காற்றில் கலந்து மிதந்து வரும் நுண் கிருமிகளால் வரும் நோய்கள், வேம்பின் இலையால் விலகும். வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்குத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் உடைந்து காயத் தொடங்கும். வேப்பிலையால் கிருமிகள் எல்லாம் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இது சீதளத்தை விரட்டி உடம்பிற்குத் தேவையான சீதோஷ்ணத்தைக் கொடுத்து சமச் சீராக உடலை வைத்துக் கொள்ளும்.

ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர அம்மை வடு மாறும். உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்க்கு இதன் இலைச்சாறு நல்ல மருந்து.

பசி குறைந்து உடல் மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்தரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும்.

கட்டி, படை, புண்களுக்கு பற்றாகத் தடவலாம். தண்டு நுனியிலிருந்து வெளிவரும் சாறு வலுவின்மை, தோல் வியாதிகளைப் போக்கும். குளிர்ச்சி தரும். வலுவேற்றும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.

வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும்.

உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது.

வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும். விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காயங்களில் கிருமிகள் தோன்றாமல் தடுக்கும். முடக்குவாதம், தோல் வியாதிகளுக்கு உதவுகிறது. வேப்ப எண்ணெய் கருவுறுதலைக் தடுக்கிறது.

தொடர் தோல் வியாதிகளான தொழுநோய் மற்றும் ஆறாத புண்களைக் குணப்படுத்தும். சுளுக்கு மற்றும் முடக்குவாதத்திற்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கொட்டையிலிருந்து வேப்ப எண்ணெய் எடுப்பார்கள். இந்த எண்ணெயில் மார்கோசிக் அமிலம் உள்ளது. இந்த எண்ணெய் மஞ்சள் நிறத்துடன் கசப்பாக இருக்கும். அந்த எண்ணெய் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது. வேப்ப மரம் இவ்வாறு மக்களுக்கு நல்ல மருத்துவ பயன்களைத் தருகிறது. இத்தகைய மரத்தை வீட்டிற்கொன்று வளர்த்து நன்மை பல பெறுவோம்
Read more >>

Popular Posts