பண்டைய காலத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியா வந்து மிளகுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் அதை பெருஞ்செல்வம் போல் மதித்தார்கள். 15ம் நூற்றாண்டிற்கு பின்பே தென்அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மிளகாய் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு உணவில் காரம் சேர்ப்பது என்றால் மிளகு தான். மிளகாய் போல் மிளகின் காரம் பாதிப்பு ஏற்படுத்தாது. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார் சத்து, வைட்டமின், சுண்ணாம்பு, இரும்பு, பாஸ்பரஸ் என்று பல சத்துக்கள் மிளகில் நிறைந்துள்ளன. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பைக் கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பொருள் மிளகு என்றால் மிகையாகாது.
Healthy tips in tamil தமிழ்செய்திகள் | Tamil News Online | Tamilnadu News | TamilNadu
Followers
Monday, 31 October 2011
உணவு மருத்துவக்குறிப்புக்கள்
தேனிற்குப் பதிலாக...
தேன் சாப்பிட முடியாத நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில், இரவில் ஊற வைத்து இருபது கொண்டைக் கடலையை மென்று சாப்பிடவும். ஒரு சிட்டிகை வெந்தயத்தூளும் சாப்பிடவும். கொண்டைக் கடலை மூலம் வைட்டமின் சி கிடைத்து இதயம் சிறப்பாக இயங்கும். வெந்தயத்தூள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இதனால் ஆயுள் நீடிக்கும்.
தோல் நோய்களா?
தோல் தொடர்பான நோய்கள் மெல்ல மெல்ல மருந்தின்றிக் குணமாக, பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட வேண்டும். பிறகு பாகற்காயை மதிய உணவில் சேர்த்துவந்தால் போதும். இரண்டும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி தோல் நோய்களைத்துரத்தும்.
பழச்சாறு, புற்றுநோய் வராமல் தடுக்குமா?
இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுத்தும், குணமாக்கியும் நலமுடன் வாழும் சக்தி மனிதர்களிடம்தான் உள்ளது.
நெஞ்சு வலியைக் குணமாக்கும் மாதுளம் பழத்தில் புற்றுநோயைக் குணமாக்கும் சக்திவாய்ந்த எல்லாஜிக் அமிலம் உள்ளது.

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.
செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.
தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ...
செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.
ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாமுங்கோ, தப்பே இல்லை!) செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.
அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.
அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி என்கிறார்கள் டாக்டர்கள். செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள்.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப் பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.
விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி 'பை' வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம். தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.
இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது.
இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம். தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம்.
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.
எழுச்சி அல்லது எரக்ஷன் என்பதை டாக்டர்கள் ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே. அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.
இதுதவிர தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.
இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.
நரையைத் தடுக்கும் பழ மாத்திரை!
இந்தியர்களாகிய நாம், கருகரு முடியைத்தான் விரும்புவோம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் இயற்கை நமது கேசத்துக்கு வெள்ளையடித்தாலும், நாம் சாயம் பூசி `கறுப்புக் கிரீடம்' சூடவே ஆசைப்படுகிறோம். கரிய முடி என்பது இளமையின் அடையாளம் என்பது நமது எண்ணம்.
சரி, விஷயத்துக்கு வருவோம். புதிதாக, தலைமுடி நரைப்பதைத் தடுக்கும் ஒரு மாத்திரையைப் பழச் சாறில் இருந்து தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.
சர்வதேச அழகுசாதன நிறுவனம் ஒன்று, பத்தாண்டு கால ஆய்வுக்குப் பின் இந்த மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. நான்காண்டுகளுக்குள் இது சந்தைக்கு வந்துவிடுமாம்.
இன்று உலகெங்கும் ஆண்களும், பெண்களும் தலைச்சாய பாட்டில்களை வாங்கிக் குவிக்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. இந்நிலையில், தங்களின் கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமையும் என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வில் ஈடுபட்ட ரோம உயிரியல் துறைத் தலைவர் புரூனோ பெர்னார்டு கூறுகையில், ``ஆண்கள், பெண்கள் மத்தியில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்வதைப் போல இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை ஒன்றும் அதிக விலையுள்ளதாக இருக்காது'' என்கிறார்.
இந்த மாத்திரை, வெளியே கூறப்படாத ஒரு பழத்தின் கூட்டுப்பொருளைப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட கூட்டுப்பொருளானது, நமது உடம்பில் நிறமி உற்பத்தியைப் பாதுகாக்கும் என்சைமான `புரோட்டீன் 2'வைப் போலவே செயல்படுகிறது.
`ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' என்ற நிலைதான் நமது தலைமுடியை நரைக்கச் செய்கிறது. அதாவது, முடிச் செல்கள் தீமை பயக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்களால் பாதிக்கப்படுவது.
நரைத்த முடியை மேற்கண்ட மாத்திரை திரும்பக் கருக்கச் செய்யாது, ஆனால் நரைப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலன் தரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தினதந்தி

Saturday, 29 October 2011
மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது. 32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.உணவுக்குறிப்புகள்
திராட்சையின் நன்மைகள்
தினமும் திராட்சைச் சாறு அருந்தி வந்தால் ஒற்றைத் தலைவலி முழுமையாகக் குணமாகும். குறைந்தது 21 நாட்களாவது தொடர்ச்சியாக காலை ஒரு வேளை திராட்சைச் சாறு அருந்தி வரவும். இதனால் நெஞ்சுவலி இருந்தால் குணமாகும். இதயமும் பலப்படும். கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்களின் மூளையும் நன்கு ஓய்வு நிலைக்குத்திரும்பும்.
இதனால் புத்துணர்வுடன் வாழலாம். திராட்சைச் சாற்றில் சீனி சேர்க்காமல் மிக்ஸியின் அடியில் உள்ள திராட்சைத் தோல்களையும் சேர்த்து சாப்பிட்டால்தான் இவ்வளவு நன்மைகள்!
அற்புதக் கொய்யா
குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும்,மருத்துவக்குணங்களும் வியப்பானவை.
ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் சி உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ.பி. ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுன்றன. வாழைப்பழத்தின் உள்ளதை விட கூடுதலாக பொட்டாட்சியம் சத்து உள்ளது.
கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும் தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.
தோல்நோய்களை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெறவும். சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவுகிறது.
தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீ்ட்டுத்தருகிறது.
அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.
ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்
தேவையான பொருட்கள்
ஈரல் - 1/2 கிலோ
முந்திரிப் பருப்பு - 10
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகுத்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை ;
ஈரலை சுத்தம் செய்து கியூப்களாக நறுக்கி கொள்ளவும்.

உடல் சூட்டைத் தணிக்கும் மாதுளை
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பு, புளிப்பும் கலந்த மாதுளைன்னு மொத்தம் மூன்று வகையான மாதுளை இருக்குது. குடல் அழற்சியைப் போக்கிற சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு.
இது, உணவு செரிக்கிறதையும் துரிதப்படுத்தும். மேலும், குடல்ல ஏற்படுற இயல்பான மாற்றங்களையும் சரி செய்யும் ஆற்றல் அதுக்கு உண்டு.
மூலிகை ஜூஸ்
தேவை :
அருகம்புல்-1 கட்டு
தேன் - 2 டேஸ்பூன்
ஏலக்காய் - 1 சிட்டிகை
அருகம்புல்-1 கட்டு
தேன் - 2 டேஸ்பூன்
ஏலக்காய் - 1 சிட்டிகை
செய்முறை :
அருகம்புல்லை சுத்தம் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன், ஏலக்காய்ப் பொடி சேர்த்து பருகவும்.
Thursday, 27 October 2011
ஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்
மணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.
வெட்பாலைப் பூக்கள்
வெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும்.
புங்கைப்பூ
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன் மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடி செய்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு பசும்பால் குடிக்கவேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம்.
48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேக நோய் உள்ளவர்கள் புங்கைப்பூ பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும்.
சிற்றகத்திப்பூக்கள்
சிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப்பு நிறத்தில் பூ பூப்பதை கருஞ் செம்பை என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் செம்பை என்றும் வழங்குவர்.
எந்த நிறத்தில் பூப்பதாக இருந்தாலும் அவரவர் ஊர்களில் கிடைக்கின்ற பூக்களைக் கொண்டு மருந்தாக தயாரித்து உண்ணலாம்.
சிற்கத்திப்பூக்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலை முழுகி வர தலைப்பாரம், மூக்கில் நீர் பாய்தல் முதலியன குணமாகும். தலைக்கு சாதாரணமாக தேய்த்து வந்தாலும் தலைப்பாரம் நீங்கும்.
பனம்பூ
ஆண் பனை பாளையை உற்பத்தி செய்கிறது. பாளை மீது பூக்கள் ஒட்டியிருக்கும். அதைத்தான் பனம் பூ என்கிறோம். பல்வலி இருக்கும் போது இளம் பாளையில் உள்ள பனம்பூவை எடுத்துப் பிழிந்து 300 மி.லி சாறு எடுத்து அத்துடன் 100 மி.லி எலுமிச்சை சாறும், 2 கிராம் உப்பும் சேர்த்து வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.
மகிழம் பூ
மகிழம் பூவை சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும்.
பித்தத்தை தணிக்கும், ஆண்மை கிடைக்கும். மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும்.
கணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரை பருகினால் கணைச்சூடு நீங்கும். இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு எடுத்து அரை டம்ளர் அளவு சாப்பிட மலக்கட்டு நீங்கும்.
சம்பங்கிப்பூக்கள்
சம்பங்கிப்பூக்கள் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து அதிலிருந்து பூக்களை எடுத்து விடவேண்டும்.
அந்த நீரை காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.
எலுமிச்சைப் பூக்கள்
எலுமிச்சைப் பூக்களை மைபோல அரைத்து தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பருகிவர பல் ஈறு நோய், பல்வலி குணமடையும்.
களாப்பூ
களா என்பது காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணப்படும் ஒரு முட் செடி. இதனுடைய பூச்சாறு கண் நோய்களுக்குக் கூறப்பட்ட மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
கண்களில் பூ விழுந்து அது முற்றுவதற்கு முன்னால் களாப் பூவைக் கசக்கி பிழிந்து சாறு மூன்று துளி கண்களில் பிழிந்து வர குணமாகும்.
பெண்ணின் கண்களை விரியச்செய்யும் “அழகிய பெண்மணி”
ஓமியோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெல்லடோனா எனப்படும் மூலிகைத் தாவரம் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவினைச் சார்ந்த்தாகும்.
இதன் மருத்துவ பயன் கருதி உலகெங்கும் வளர்க்கப்படுகிறது. இது இரண்டு மீட்டர் உயரத்திற்கு மட்டுமே வளரும் பல பருவ குறுஞ்செடி. அகன்ற இலைகளைக் கொண்ட இந்த தாவரத்தின் இலைகள், வேர் மருத்துவ பயன் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் டிரோபென் ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், கௌமெரின்கள், எளிதில் ஆவியாகும் காரங்கள் உள்ளன. டிரோபென் ஆல்கலாய்டுகளில் அட்ரோஃபைன் மற்றும் அயோசயமைன் முக்கியமானவை.
மூட்டு வலியை நீக்கும்
இத்தாவரம் கண் பாப்பாவினை விரியச் செய்யும். இதனை இத்தாலிய மகளிர் தங்களது கண்களை விரியச் செய்வதற்குப் பயன்படுத்தினர்.
இதன் காரணமாகவே இதன் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் 'அழகியப் பெண்மணி' என்னும் பொருளில் அமைந்துள்ளது. தலைவலியை குணமாக்கும், வயிற்றுவலியை போக்கும்.
பெண்களுக்கு மெனோபாஸ் கால வலியை நீக்கும். ருமாய்டாய்டிசம் என்னும் மூட்டுப்பிரச்சினைக்கு மருந்தாகிறது. நரம்பு தொடர்புடைய நோய்களையும் நீக்குகிறது. ஹைபர் தைராய்டினால் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும்.
பக்கவாத நோய் குணமாகும்
பார்கின்ஸன் நோயில் ஏற்படும் கை, கால் உதறல் மற்றும் விறைப்புத் தன்மையினைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இது கைகால் இயக்கத்தினையும், பேச்சினையும் சரி செய்யும்.
இதயத்துடிப்பினையும் அதிகரிக்கிறது. இயங்கு தசைகளைக் கட்டுப்படுத்த வல்லது. இத்தாவரம் நல்ல தொரு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜீரண மற்றும் மூச்சுக்குழல் சுரப்புகளை கட்டுப்படுத்துகிறது.
வயிற்றுப் புண் சரியாகும்
இது தளர்ந்த உறுப்புகளை நல்ல நிலைக்குக் கொண்டு வரும். வயிறு மற்றும் குடல் பகுதி மீது செயல் புரிந்து குடல் வலியினைப் போக்கும்.
பெப்டிக் எனப்படும் வயிற்றுப் புண் குணமடைய உதவுகிறது. ஜீரண அமிலங்கள் சுரப்பினைக் கட்டுப்படுத்தும். சிறுநீர் நுண் குழல்களின் பிடிப்பு வலியினை நீக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை மருந்தும் சரியான உணவும்.
நம் உடலைப் பேணிப் பாதுகாக்க முதலில் நாம் செய்ய வேண்டியது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதேயாகும். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கும் கவசமாக, அரணாக உள்ளது. அடுத்தபடி தான் உணவும், மருந்தும். உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தாலே பலவித நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவேதான் உணவே ம ருந்து என்று சொல்லி இருக்கிறார்கள்.
நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களைப் போல, நம்மை நோய் நொடியிலிருந்து பாதுகாப்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான். இந்த வெள்ளை அணுக்கள் தாம், உடலில் நோய் தாக்கும்போது, அதற்குக் காரணமான கிருமிகளை எதிர்த் துப் போராடும் ஆற்றல் மிக்கது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பிலும் தனியாகத் தோன்றுவதில் லை. நம் மூளை, ரத்தம், கல்லீரல், மண்ணீரல், எலும்பு, நிணநீர், ரத்தக் குழாய்கள், நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படும் போதுதான் நோய் எதிர்ப்பு நம் உடலில் வளருகிறது. இதில் ஏதாவது குறைபாடு ஏற்படும்போதுதான் நோய் உண்டாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது உடலில் சாதாரண காய்ச்சல் முதல், தொற்றுநோய், புற்றுநோய், சளித்தொந்தரவு, ஆஸ்து மா என்றெல்லாம் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்போது, நோயிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதற்கு ஆதாரமானது நல்ல, சமச்சீரான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவாகும்.
மூலிகைகள் பல, அத்தனையையும் நாம் பயன்படுத்த முடியாது. இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமே இந்த மூலிகைகள்தான். சித்தர்கள் இதைக் கண்டறிந்து, நாம் நோய் நீங்கி நெடுங்காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பலவித மூலிகைகளையும், அதன் பலன்களையும், அதனைப் பயன்படுத்தும் விதத்தையும் நமக்குக் கூறியுள்ளனர். இந்த மூலிகைகளில் சிலவற்றையாவது நாம் அன்றாடம்
அருந்துவதால் நோய் நீங்கி நாம் நலமுடன் வாழலாம். இதனை ஆதாரமாகக் கொண்டே நம் ஆலயங்களில் பல தலவிருக்ஷங்கள் நமது ஆலய வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த மூலிகைப் பிரசாதங்களை அருந்தும் போது, மூலிகைகளின் மருத்துவ குணத்தாலும், இறையருளாலும் நமது நோய் நீங்குகிறது. இதனைத் தெய்வீக மூலிகைகள் என்கிறோம்.
தெய்வீக மூலிகைகளாக மாரியம்மன் கோயில்களில் பயன்படுத்தப்படும் வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி, விநாயகருக்கு உரிய அறுகம்புல், பிரம்மாவுக்கு உரிய அத்தி இலை, கங்கைக்குரிய மாவிலை அடங்கும். மற்றும் அரசனிலை, ஆலயிலை கரிசலாங்கண்ணி, தூதுவளை, கண்டங்கத்திரி, நெல்லி, தும்பைப்பூ, குப்பைமேனி, கீழாநெல்லி, ஜாதிக்காய், தான்றிக்காய், அதிமதுரம் ஆகியவை. இவற்றை சிறிது, சிறிதாக பொடித்து வெயிலில் காயவைத்து,
உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இரண்டு தேக்கரண்டி தண் ணீரில் கலந்து அருந்த நோய் குணமாகும்.
இந்த மூலிகைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பாக்டீரியாக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடெ ண்டுகள், ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஃபங்கஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவன.
சமச்சீரான, சத்துள்ள வைட்டமின்கள், தாது உப்புகள், கொழுப்பு, இரும்புச் சத்து, புரதம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற உடல்நல ஊக்கிகள் கொண்ட உணவு வகைகள் நோயைக் குணப்படுத்தும். இவற்றை வகை அறிந்து உண்பதால் பலன் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சில முக்கியமான உணவுகள்:
கேரட்: இது எல்லா நோய்களையும் குணப்படுத்தும். கேரட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், பீட்டா கரோடின் என்ற சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்திகள் காரணமாக வைரஸ், பாக்டீரியா கிருமிகளை ஒழித்து, நோய் எதிர்ப்புச் செல்களை உரு வாக்கி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து, நோயிலிருந்து நாம் விடுதலை பெற உதவுகின்றன.
தினமும் 5 முதல் 10 கேரட்டுகளை பச்சையாகவே சாப்பிட்டு வர பலன் கிடைக்கும். இதனால் 30 மி.கி. முதல் 60 மி.கி. வரை நமக்கு கரோட்டின் சத்து கிடைக்கிறது. இவை நமது உடல் ஆரோக்கியத்துக்குப் போதுமானது.
கேரட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பீட்டா கரோட்டின் அளவு குறைந்து நோய் நம்மைத் தாக்குகிறது. கேரட் மற்றும் மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, வெண்பூசணி, தர்பூசணி, கீரை வகைகள், வெள்ளரிப்பிஞ்சு, தயிர் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளதால் அது மிகுந்த பலன்தரும்.
தயிர்: தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் செல்கள் உள்ளன. உடலில் கட்டிகள் ஏற்படுத்தும் செல்களை அழித்து நோயைப் போக்குகிறது. தினமும் ஒரு கப் தயிர் வீதம் 2 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, பல நோய்களிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.
ஜெர்மன் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து அதிகம் மாமிசம் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வெள்ளை அணுக்கள் 100% தேவை என்றும், பழங்கள், காய்கறிகள் போன்ற சைவ உணவை சாப்பிடு பவர்களுக்கு 50% வெள்ளை அணுக்கள் இருந்தால் போதும் என்றும் கண்டறிந்துள்ளனர். பழங்கள், காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளதே இதற்குக் காரணம்.
வெள்ளைப்பூண்டு: பூண்டு ஒரு அருமையான நோய் நிவாரணி. சிலருக்கு அதன் சுவை பிடிக்காததால் பூண்டு சாப்பிடுவதில் லை. பொதுவாக மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் கசப்புச் சுவை மருந்துகளே நோயைத் தீர்க்கும். பூண்டில் ஆன் ட்டி பாக்டீரியாக்கள், ஆன்ட்டி வைரஸ், கேன்ஸர் ஆக்டிவிட்டி சக்திகள் உள்ளதால் வைரஸ், பாக்டீரியாக்களையும், புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான செல்களை எதிர்த்துப் போராடுவதால் பூண்டு நமது அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டும். மற்றும் கொழுப்புச் சத்துக் குறைவானதும், துத்த
நாகச் சத்துக்கள் அதிகம் உள்ளதுமான உணவுகள் பலன் தரும்.
கீரைகள்: எல்லாவிதமான கீரைகளும் நல்லது. அவற்றில் பச்சையம், வைட்டமின் ஏ, இரும்புச் சத்து இருப்பதே காரணம். முக்கியமாக வெந்தயக் கீரை, புதினா கீரை, மணத்தக்காளிக் கீரை வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. புதினா கீரைத் து வையல் ஜீரண சக்தியைத் தூண்டும். கறிவேப்பிலை மல்லியும் ஜீரணசக்தியைத் தூண்டும். பாசிப்பருப்புடன் தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து கீரைகளைச் சமைத்து உண்பதால் சுவையும், உடல்நலமும் கிடைக்கிறது.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு, பெருங்காயம் போன்றவை உணவில் சுவைகூட்ட மட்டு
மல்ல மருந்துப் பொருளுமாகும். அதில் குறிப்பாக வெந்தயம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பொங்கல், உப்புமா, இட்லி, தோசை மாவில் வெந்தயமும் சேர்த்து செய்தால் அவை மிருதுவாக இருப்பதுடன் உட லுக்கும் நல்லது.
வெந்தயத்தில் அதிகள வில் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க் கரை, கொலஸ்ட்ரால் அளவைப் பொறுத்து 50 கிராம் வரை வெந்தயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
வெந்தயத்தை தினசரி சேர்த்து வருவதுடன் தினமும் சற்று நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்துவர சர்க்கரை நோய் க ட்டுப்படுகிறது. உடல் எடையைக் குறைப்பதன் மூலமும் இன்சுலின் சத்தைக் குறைப்பதன் மூலமும் சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதற்கு வெந்தயம் உதவுகிறது.
வயிற்றுப்போக்கு, குடலில் ஏற்படும் வாயுத்தொந்தரவு முதலியன வெந்தயம் சாப்பிடுவதால் நீங்குகிறது.

thanks:http://www.thedipaar.com/news/news.php?id=35881
தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது.
எல்லோரும் மிகவும் விரும்பிக் கொய்யும் பழமாக (கொய்யும் -பறிக்கும்) விளங்கும் இப்பழத்தைக் கொய்யா(த) பழம் என்று அழைக்கக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொய்யாப்பழத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கொய்யாப்பழத்தின் உள்ளே சிவப்பு வண்ணத்திலும், சில பழங்களில் வெள்ளை வண்ணத்திலும் காணப்படும். இரண்டுக்கும் குணத்தில் ஒரே தன்மைதான்! கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்காதானே! வெப்பம் மிகுந்த நாடுகளில் கொய்யாப்பழம் மிகுந்த அளவில் விளைகின்றன.
ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் கொ ஞ்சம் கொழுப்பு, புரோட்டீன் ஆகியவை உள்ளன. உங்கள் முகம் பொலிவோடு விளங்க வேண்டுமென்றால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்! நாள்தோறும் ஒரு கொய்யாப் பழம் வீதம் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. காலையில் உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள். ஒரு மணிநேரம் கழித்து உணவருந்தலாம். ஆனால் மதியம் வரை நீங்கள் காபி, தேநீர் எதுவும் குடிக்கக்கூடாது. பால், பூஸ்ட், ராகி மால்ட் பருகலாம். மாலை வேளையில் காபி, தேநீர் குடிக்கலாம்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. இரத்தத்தைப் பெருகச் செய்யும்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்
1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

Monday, 24 October 2011
வெங்காயப் பூவில் மறைந்திருக்கும் பெறுமதிமிக்க மருத்துவ குணங்கள்
சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.
குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.
நூறு வயது வரை வாழ ஏழு குறிப்புகள்
நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.
ஆயுளை அதிகரிக் கடினமான சில விடயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.
ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.
இடையைக்குறைத்தல்
புகைத்தலைத் தவிர்த்தல்
உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்
நீரிழிவு கட்டுப்பாடு
சுறுசுறுப்பான வாழ்க்கை
பழங்களை அதிகம் உண்ணுதல்
அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
Saturday, 22 October 2011
தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.
தாய்ப்பால்கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந்தால் கொடுத்து விட்டு போகிறார்கள்என்று நினைக்கத்தோன்றுகிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள்மருத்துவர்கள்.சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லைஎன்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு.சிலர் புட்டிப்பால் கொடுக்கஆரம்பித்துவிடுவார்கள்.இதெல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பைஏற்படுத்தக் கூடியது.தாய்ப்பாலுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனையில் கூட உருவாக்கமுடியாது என்பதே நிஜம்.
பால் கொடுக்கும்போது குழந்தையின்தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்குநேராகவும்,அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்கவேண்டும்.அடுத்துகுழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.குழந்தையின் கழுத்து,தோள் மட்டுமில்லாமல் முழு உடலையும் தாயின் கை தாங்குவது போல் வைக்கப்படவேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கமுயற்சிக்கும்போது தாய் குழந்தையின் உதடுகளால் மார்பக காம்பைத் தொடவைக்க வேண்டும்.குழந்தை வாய் திறக்கும் வரைகாத்திருந்து கீழ் உதடு மார்பக காம்பின் அடிப்பகுதியை நன்கு பிடித்துக்கொள்ளுமாறுசெய்யவேண்டும்.
குழந்தைமார்பகத்தைநன்கு கவ்வியிருக்கிறதா சரியாக சப்பிக் குடிக்கிறதா என்பதை தாய் கவனிக்கவேண்டும்.குழந்தையின் முகவாய்க்கட்டை மார்பகத்தை தொடவேண்டும்.வாய் நன்றாகதிறந்திருக்க வேண்டும்.கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும்.மார்பக காம்பின்கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாயினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த திரவமும் தேவைப்படாது.கிரைப்வாட்டர்,தண்ணீர் எல்லாம் அவசியமேயில்லை.தேவையான் தண்ணீர் தாய்ப்பாலில்இருக்கிறது.ஒரு நாளில் எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.குழந்தைஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு மாட்டுப்பாலைகொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இதுகுழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்றவணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசிபோடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.
தாய்ப்பாலை விட பாதுகாப்பானதுவேறெதுவும் இல்லை.மருத்துவர் அறிவுரையின் பேரில் மாட்டுப்பால் கொடுத்தாலும் நிறையதண்ணீர் கலக்கவேண்டும்.அதுவும் சுத்தமான நீராக இருக்கவேண்டும்.கடையில் பவுடர்வாங்கினாலும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.பாலாடை அல்லது தேக்கரண்டிபயன்படுத்துவதே சிறந்த்து.புட்டி பயன்படுத்தும்போது அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்றைஉருவாக்கலாம்.ஆறு மாதம் கழித்து பிறகு இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம்.
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)
உடல் பருமனைக் குறைக்கும் புரதம்
உடல்பருமனுக்கு எளிய முறையில் விடைகொடுக்கிறது புரதம் என்கின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள். குண்டுப்பிரச்னையில் சிக்கி தவிப்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஆம் உலகில் பெரும்பாலானவர்களின் தலையாய பிரச்னை இதுதான் என்பதால் இது குறித்த தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று அதிக அளவு புரதம் எடுத்துக் கொள்வது குண்டுப்ரச்னைக்கு தீர்வாகிறது என்று தெரிவித்துள்ளது.
உடல் பருமன் குறைப்பில் ஈடுபடுபவர்கள் பட்டினி கிடப்பதாலும், கலோரி அளவைக் குறைப்பதாலும் மட்டுமே இளைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் வெளியாகி உள்ள தகவல் இது. இது குறித்து வெளியாகி உள்ள தகவல் வருமாறு -உடல்பருமன் குறைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைந்த கலோரி உள்ள அதிகப்புரதம் இதற்கு எளிய தீர்வாவது தெரியவந்துள்ளது. டயட் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படும் குறைந்த கலோரி உணவுகளால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.
வரும் முன் காப்போம் என்பதற்கிணங்க உடல் பருமனாகும் முன்னரே கார்போஹைட்ரேட், அதிக கொழுப்புள்ள உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சைக்காய்கறிகள், அதிகப்புரதம் உள்ள உணவுகள் எப்போதுமே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். உடல்பருமனாவதில் இருந்தும் இத்தகைய உணவுகள் பாதுகாக்கும்.
மேலும் ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு, தொடர் உடற்பயிற்சி, அவ்வப்போதைய மருத்துவ அறிவுரை ஆகியவை உடல் பருமன் பிரச்னையில் இருந்து பாதுகாப்பளிப்பதுடன் ஆரோக்கியமான வாழக்கைக்கும் வகைசெய்யும்.

மூளையை பாதிக்கும் விடயங்கள்
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Thursday, 20 October 2011
வயிற்றில் பொங்கும் அமிலத்தின் அவஸ்தை
வழியில் கிடைத்த எதாவதொன்றை விழுங்கி விட்டு பறக்கும் இன்றைய அவசர யுகத்தில் இழந்தவற்றுள் முக்கியமானது நமது உடல்நலம்.ஆம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.உணவுக் குழாய் சுவர்களை அரிக்கும் ஒரு உடல் நலக்கோளாறு நெஞ்செரிச்சல்.உணவு செல்லும் பாதையில் அமிலம் பொங்கும் அவஸ்தை.
வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் உணவுப்பாதையில் நெஞ்சு வரை பயணித்து இதயத்தில் பிரச்சனையா என்று கவலைப்படும் அளவுக்கு வாட்டும்.உண்மையில் நெஞ்சுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.அப்பகுதியில் எரிச்சலும்,அரிக்கும் உணர்வு ஏற்படும் அவ்வளவே.
வழக்கமாக செரிமானம் ஆகாத உணவுகள்,-இவை பெரும்பாலும் மசாலா,துரித உணவுகள்-இக்கோளாறை உருவாக்கும்.புகை பிடித்தல்,மது,அளவுக்கதிகமான உணவு,கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்,அதிக எடை போன்றவையும் காரணம்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாத உண்வுகளை உண்பதாலும் ஏற்படும்.
பொதுவாக, தொண்டை,நெஞ்சு பகுதியில் எரிச்சல்,வயிற்றின் உணவு நுழையும் பகுதியில் வலி,வாந்தி,குமட்டல்,இருமல்,உடலின் பின் பகுதியில் கூட சிலருக்கு வலி இருக்கலாம்.இத்தகைய அறிகுறிகள் இருக்குமானால் உடனே கவனிக்க வேண்டும்.
நெஞ்செரிச்சலில் இருந்து காத்துக்கொள்ள
• புகை பிடித்தல்,மதுவை தவிர்ப்பது(ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும்)
• போதுமான அளவுக்கு நீர் அருந்துங்கள்.
• துரித உணவுகளை தவிர்க்கவும்
• அமிலம் சேர்க்கப்பட்ட குளிர்பான்ங்களை தவிர்த்து பழச்சாறுகளை தேர்ந்தெடுக்கவும்.
• வறுக்கப்பட்ட உணவு,எரித்த இறைச்சி போன்றவை செரிமானத்தின் எதிரி.
• காபி அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும்.
வயிற்றில் ஒரு பங்கு உணவு,ஒருபங்கு நீர்,ஒரு பங்கு காலியாக இருப்பது என்று தீர்மானித்துக்கொண்டால் அதிகம் தின்பதை தவிர்க்கலாம்.
சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகள் ஒவ்வாமையை உருவாக்கலாம்.இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அத்தகைய உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.(தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)
Tuesday, 18 October 2011
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!
சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
இருமல் சளிக்கு
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
http://www.koodal.com/health/paati_vaidyam.asp?id=707&title=home-remedies-and-natural-cures-for-common-illnesses
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள்.
ஆரோக்கியமாக வாழ மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள். மற்றவர்களுக்கும் அறிய தாருங்கள்.
சக்கரை நோய்க்கு கை வைத்தியம்.
சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.
எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம்.
பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.
இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.
பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.
இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.
புளித்த ஏப்பமா?
தக்காளி சூப்பில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா போட்டுக் குடித்தால் போதும்.
வேர்க்குரு நீங்க ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவைக் கொஞ்சம் தண்ணீரில் கலக்கிப் பூசவும்.
ஆப்ப சோடாவைத் தண்ணீர் விட்டுக் கொப்புளத்தில் பூசினால் குணம் தெரியும்.
பல் வலி பாடாய்ப்படுத்தினால் கொஞ்சம் ஆப்ப சோடாவை ஈறின் மீது அழுத்தித் தடவவும். காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்ப சோடா கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
மதுவை மறந்து விடலாமே.
மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் கரணை நோய் (Cirrhosis) வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. குழந்தைகள், வாழ்வில் ஒருமுறைகூட மதுவைத் தொடாதவர்களுக்கும் இந்நோய் வரும்.
நடுத்தர வயதுடைய பெண்களுக்கு பித்தநீர்ப்பையில் கரணை நோய் வர வாய்ப்பு உண்டு. உடலில் தாமிரச் சத்து மிகுதியால், குழந்தைகளிடத்திலும் இது காணப்படும். 'வில்சன்ஸ் நோய்' என்றழைக்கப்படும் இது, ஒரு பரம்பரை நோய் என்பது ஆச்சரியமான உண்மை!
நோய் வந்தால் குணமாக்குவது சற்று சிரமமான காரியமே.
முறையான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம். மது குடிக்காமல் இருந்தாலும் நோய் வரும் என்பதற்காக மதுவை நாடக் கூடாது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே இதற்குக் கடைசியான வழி.
பூண்டின் மகிமை.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெள்ளைப் பூண்டு நல்லது என்பது தெரிந்த விஷயம். தெரியாதது, அது மலேரியா மற்றும் கேன்சருக்கும் கண்கண்ட மருந்து என்பது.
வெள்ளைப் பூண்டில் இயற்கையிலேயே அடங்கியுள்ள டைசல்பைடு (Disulphide) என்ற ரசாயனப் பொருள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கின்றது. மேலும், கேன்சர் செல்கள் பரவாமலும் தடுக்கின்றது. இது தவிர, மலேரியாவை உண்டாக்கும் 'பிளாஸ்மோடியம் பால்சிபாரம்' என்ற ஒட்டுண்ணியையும் தாக்கி அழிக்கின்றன. அட்லாண்டாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வின் முடிவு இது.
பூண்டை வெறுப்பவர்கள் கூட இனி பூண்டுக்கு 'வெல்கம்' சொல்வது நல்லது!
வெள்ளரிக்காய்.
வீடுகளில் வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமைப்பது வழக்கம். ஆனால் அந்தத் தோலில்தான் உடலுக்கு வேண்டிய உப்பும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.
மலச்சிக்கல், அதிக அமிலத்தன்மை, வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு வெள்ளரி அற்புதமான மருந்து. இதனைக் காரட்டோடு சேர்த்து ஜூஸாகச் சாப்பிட மூட்டு அழற்சி, சிறுநீரக அடைப்பு, வயிற்றுப்போக்கு, சருமநோய்கள் தீரும். துண்டாக நறுக்கி முகம், கண், நெற்றியில் தடவி வர முகம் பொலிவு பெறும்.
ஆஸ்பிரின்.
ஆஸ்பிரின் எளிய வலி நிவாரணியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும் ஒரு சில தீங்கான விளைவுடையது என்ற காரணத்திற்காக பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும்கூட பரால்ஜின், நோவால்ஜின், அனால்ஜின் என்ற பெயர்களில் அவை இந்தியாவில் விற்கப்படுகின்றன.
உங்களுக்கு தெரியுமா?
கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தைக்குமாகச் சேர்த்து இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற தவறான கருத்து பலரிடமும் நிலவுகிறது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. போதிய உணவை உட்கொள்ளாது விடுவது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ அதேயளவு பாதிப்பை மிதமிஞ்சிய உணவும் ஏற்படுத்தும்.
நேரம் கழித்து சாப்பிட்டால்?
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் நோய் காரணமாக சிலருக்கு நெஞ்சு எரிச்சல் (Heart Burn) ஏற்படும். சிலர், இரவு நெடுநேரம் கழித்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இதனால் ஆபத்து உண்டா?
நிச்சயமாக. இவர்களுக்குத் தூக்கம் கெடும். அரிதாக, புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உற்பத்தியாகும் அமிலங்கள் உணவுக் குழாயில் பாதிப்பை உண்டாக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்காக சில டிப்ஸ்கள்:
உங்களது இரவு உணவை ஆறு முதல் ஏழு மணிக்குள் முடித்துவிடுங்கள். இல்லையெனில் உணவுக் குழாயில் கொழுப்பு சேர்ந்து எதிர் ஓட்டத்துக்கு (Reflux) வழி வகுக்கும்.
இரவு எட்டு மணிக்கு மேல், காரம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். நீங்கள் தூங்கச் செல்லும் முன் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது வயிற்றைக் காயப்போடுங்கள்.
தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால், இரவு பத்து மணிக்குள் அன்டாசிட் மாத்திரைகளைச் சாப்பிட்டு விடுங்கள். இது வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும்.
எப்பொழுதும் இடது பக்கமாகவே ஒருக்களித்துப் படுங்கள். இதனால் வயிற்றில் மீதமிருக்கும் உணவுப் பொருட்கள் உணவுக் குழாயில் மென்மேலும் அழுத்தம் கொடுக்காது. இடதுபுறம் படுப்பதால் காலையில் மலம் எளிதில் வெளியேறும். மலம் வெளியேறும்போது எரிச்சல் இருக்காது.
மீன் சாப்பிடுவது
மீன் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்குப் பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லையாம். எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள்தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகிறதாம்.
மீன் எண்ணெயில் உள்ள 'ஒமேகா_3' என்ற பொருள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்துக் கொள்கிறது. ரத்தம் சீராகப் பாயவும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கடல்வாழ் மீன்களிலிருக்கும் இ.பி.ஏ. (Elcosa Pantothenic Acid) இதயத்தமனிகள் உடைந்து போகாமல் இருக்கச் செய்கிறது.
ஆரஞ்சுச் சாறு.
'உணவே மருந்து' என்று சொல்லும் சித்த மருத்துவம், 'நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் மூலம் வரப்போகிற நோய்களையும் தடுத்து நிறுத்தலாம்' என்றும் கூறுகிறது.
தலைவலி _ காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு.
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.
டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது... ஆரஞ்சு ஜூஸ்.
தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.
டிஸ்பெப்ஸியா (Dyspepsia) எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.
பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.
இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.
உணவே மருந்து
உணவுப் பொருட்களை சமைத்து உண்பதைவிட அப்படியே சாப்பிடுவது சாலச் சிறந்தது. காரணம், அதில் உள்ள சத்துகள் சிறிதும் அழிவின்றி அப்படியே உடலில் சேர்கிறது. இப்படி அமைந்த சிறந்த உணவுப் பொருட்களே பழங்கள்.
• பழங்களைத் தனியாகவும் சாப்பிடலாம், பிற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். பழங்களை சாறு பிழிந்தும் சாப்பிடலாம்.
• சிற்றுண்டி விருந்தில் வாழைப்பழங்களும், பேருண்டி விருந்தில், மா, பலா, வாழை என முக்கனிகளும் இடம் பெறுவது சிறப்பு.
• பரிமாறப்படும் அறுசுவை உணவுப் பண்டங்களால் அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு, அஜீரணக் கோளாறைச் சரி செய்யவும், வயிற்றுக் கோளாறு உண்டாகாமலிருக்கவும், பழம் சாப்பிடும் பழக்கம் உண்டாக வேண்டும்.
• வெறும் வயிற்றில் பழம் உண்பது பழத்தின் முழுப் பலனை கிடைக்கச் செய்கிறது. காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் பழம் சாப்பிடலாம்.
• பழச்சாறு குடிப்பவர்கள் பழம் பிழிந்து ஐந்து நிமிடத்திற்குள் பழச்சாற்றை அருந்திவிட வேண்டும். நேரம் கழித்து பருகக் கூடாது, பக்க விளைவுகளைச் சந்திக்க நேரும்.
• பழம் இயற்கையிலேயே நன்கு பழுத்ததாக இருக்க வேண்டும். அதிகமாக பழுத்து அழுகிய பழங்களை உண்ணக் கூடாது.
• ஆப்பிள் பழத்தோலை நீக்குதல் கூடாது. தோலில் நிறைய சத்துக்கள் இருப்பதால், தோலுடன்தான் சாப்பிட வேண்டும்.
• கொய்யாப்பழத்தில் தோலையும், கொட்டைகளையும் நீக்கிவிட்டுச் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. அப்படியே சாப்பிட வேண்டும்.
• மாதுளம் பழக்கொட்டைகளை நன்றாக மென்று சாப்பிடாவிட்டால் அஜீரணம் ஏற்படும்.
• வாயில் துர்நாற்றமா? தினம் மூன்று வேளையும் சாப்பிட்டபின் எலுமிச்சை பழச்சாற்றில் வாய் கொப்பளித்துப் பாருங்கள்.
• உணவுகளை ஒரே நாளைக்கு மூன்று வேளை தட்டு நிறையச் சாப்பிடுவதை தவிர்த்து ஆறு வேளையாக, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
• கொழுப்பு, காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை மிக அளவோடு சாப்பிட வேண்டும். கவலையாக இருக்கும்போது, பசியில்லாத போது சாப்பிடக் கூடாது. சாந்தமான மனநிலையில் ஆற அமரச் சாப்பிட வேண்டும். ருசிக்காக இல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிட வேண்டும். அதிகம் உண்பவன் தன் சவக்குழியைத்தானே தோண்டிக் கொள்கிறான்.
• உணவு சூடாக இருக்கும்போதே, அதை நுகர்ந்து, சுவைத்து, கண்ணால் ரசித்து, சிறிது சிறிதாக ருசியுங்கள். கசப்பு, துவர்ப்பு ருசிகளை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு போன்றவற்றை மிதமாகவும் சாப்பிடவும். இதை மனதில் கொண்டு சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்ணுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆரோக்கியம் தானாகவே பளிச்சிடும்.
நன்றி: 'இன்றைய மருத்துவம்'
எண்டோஸ்கோப்பி பரிசோதனை!
மருத்துவத்துறையில் எண்டோஸ்கோப்பியின் வரவு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜீரண நலத் துறையில் அதன் பங்கு அளவிட முடியாதது. கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் இன்று நிஜமாக்கி வருகிறது எண்டோஸ்கோப்பி, உடலுக்குள்ளே உள்ள ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்தி, மனித இனத்துக்குப் பெரும் உதவி செய்து வருகிறது.
தொடர் வயிற்றுவலி என்றால் கூட அறுவை சிகிச்சை செய்தே அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இன்று, எள் அளவு பிரச்சனையைக் கூட எண்டோஸ்கோப்பி காட்டிக் கொடுத்து விடுகிறது.
முன்பு, குடல்புண், போன்ற சாதாரண நோய்களுக்கு அரை அடி நீளத்துக்கு வயிற்றைக் கிழித்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் பெரிய காயம் ஆற அதிக நாள்கள் ஆனது.பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டிய ஆபத்து இருந்தது.நீண்ட நாள்களுக்குக் கட்டாய ஓய்வு, காயத்தில் இருந்து, சீழ் வடிதல், குடலிறக்கம் ஆகிய துன்பங்களை நோயாளிகள் சந்தித்தனர். இவையனைத்தும் தற்போது பழங்கதைகள் ஆகிவிட்டன.
ஜீரண மண்டல நோய்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவும் எண்டோஸ்கோப்பி கருவியின் பயன்பாடு குறித்து விரிவான அலசல் :
எண்டோஸ்கோப்பி என்றால் என்ன?
எண்டோ என்றால் உள்ளே, ஸ்கோப்பி என்றால் நோக்குதல் எனவே இது இரைப்பை குடல் உள்நோக்கி என்று தமிழில் அழைக்கப்படுகிறது. ஒரு மீட்டர் நீளத்தில் குடலின் நெளிவுகளுக்கு ஏற்ப வளைந்து, நெளிந்து குறுகிச்சென்று குடலின் பாகங்களைப் பன்மடங்கு மிகைப்படுத்திக் காண்பிக்கும் ஒரு நூதனக் கருவி. இக்கருவியின் நுனியில் ஒளி வருவதற்கான ஏற்பாடும், சுருங்கி இருக்கும் குடலை விரிவடையச் செய்ய காற்றுச் செலுத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. குடல் பகுதியில் புற்றுநோய் எனச் சந்தேகப்படும் இடங்களில் சதைப் பரிசோதனை செய்வதற்கான அமைப்பும் உள்ள நுண்ணிய கருவி இது. இக்கருவியை வாய்மூலமாகவும், ஆசன வாய் மூலமாகவும் செலுத்தி உள் பாகங்களைக் கண்டறிய முடியும்.
பயன்படுத்தும் உறுப்புகளைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களில் எண்டோஸ்கோப்பி அழைக்கப்படுகிறது. பெருங்குடலைப் பரிசோதிக்கும் கருவியை, கொலோனோஸ்கோப்பி (Colonoscopy) என்கிறோம். சிறுகுடலைப் பரிசோதிக்கும் எண்ட்ராஸ்கோப் (Enteroscope) என்றும் உணவுக்குழாய் இரைப்பையைப் பரிசோதிக்கும் எண்டோஸ்கோப்பி (Esophago Gastro Duodenoscopy) என்று அழைக்கப்படுகிறது. எண்டோஸ்கோப்பி கருவி மூலம் இரைப்பையின் உள்பகுதியை 5 நிமிடங்களில் அலசி ஆராய்ந்து விட முடியும்.
எண்டோஸ்கோப்பி மூலம் என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் :
உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், உள் சவ்வு (விuநீஷீsணீ) ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கண்டுபிடிக்க முடியும்.
குறிப்பாக, உணவுக் குழாய் புற்றுநோய், உணவுக் குழாய் அமில அரிப்பு, இரைப்பை மேலேற்றம், இரைப்பை புண், இரைப்பை புற்றுநோய், குடல்புண், ரத்த வாந்திக்கான காரணம், குடல் தசை வளர்ச்சி, பெருங்குடல் அழற்சி, மூல நோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க முடியும்.
எண்டோஸ்கோப்பி பரிசோதனை யாருக்குத் தேவை?
தீராத வயிற்று வலி, உணவு விழுங்குவதில் கஷ்டம், நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம், பசியின்மை, தீராத வாந்தி, தீராத வயிற்றுப்போக்கு, எடை குறைதல், இது தவிர பாரம்பரியத்தில் யாருக்காவது வயிற்றுப்புற்றுநோய் இருந்தால் அவர்களது வாரிசுகள், ரத்த வாந்தி, நீண்டகாலமாக மது, சிகரெட், புகையிலை பயன்படுத்துபவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், மலத்தில் ரத்தம் தென்படுபவர்கள் போன்றவர்களுக்கு எண்டோஸ் கோப்பி பரிசோதனை அவசியம்.
சிறுகுடலைப் பரிசோதிப்பதற்கான வீடியோ எண்ட்ரோஸ்கோப்பி (Video enteroscopy) என்ற கருவி உள்ளது. இக்கருவி மூலம் சிறுகுடலின் பாகங்களை நேரடியாக ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க முடியும்.
எண்டோஸ்கோப்பி மூலம் செய்யும் சிகிச்சை முறைகள் யாவை?
கல்லீரல் சுருக்க வியாதி (Cirrhosis), குடல் புண் (Duodenal Ulcer) ஆகியவற்றால் ஏற்படும் ரத்த வாந்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த எண்டோஸ்கோபபி உதவியுடன் பேண்டிங், ஸ்கிலிரோதெரப்பி, குளு (பசை) போன்ற சிகிச்சைகளைச் செய்ய முடியும்.
உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எண்டோஸ்கோப்பி மூலம் செயற்கை உணவுக்குழாய் (Metallic Stent) பொருத்த முடியும்.
உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை, பலூன் மூலம் விரிவடையச் செய்து (Balloon Dilatation) சிகிச்சை அளிக்க முடியும்.
பித்தக்குழாய் கல் (Bile Duct Stone) மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அடைப்பு மஞ்சள் காமாலைக்கு எண்டோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். அதாவது ERCP மூலம் பித்தக் குழாயில் கற்களை நீக்க முடியும். பித்தக்குழாய் புற்றுநோய் சுருக்கத்துக்கு, செயற்கை உலோகக் குழாய் பொருத்தலாம்.
தவறுதலாக, நாணயம், ஹேர்பின், குண்டுஊசி, மீன்முள், எலும்புத்துண்டு, கோலிக்குண்டு, கம்மல் போன்றவற்றை விழுங்கி விடும் நிலையில், அவற்றை அறுவை சிகிச்சையின்றி எளிதாக எண்டோஸ்கோப்பி மூலம் எடுக்க முடியும்.
கணையக் கற்கள் அகற்றுதல், கணையத்தைச் சுற்றி நீர் கோர்த்திருந்தால் அதை வடிப்பது போன்றவற்றுக்கு எண்டோஸ்கோப்பி உதவும்.
எண்டோஸ்கோப்பி முறை சிகிச்சை பெறுவதற்கு செலவு அதிகமாகுமா?
பழைய முறையில் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் மருத்துவமனையில் 10, 15 நாட்கள் வரை தங்க வேண்டியிருக்கும். மருத்துவமனைச் செலவு ஒரு பக்கம், அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்குவதால் பொன்னான மனித நாட்கள் விரயமாவது மற்றொரு பக்கம், நோயாளியின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதோடு அவருக்கு உதவிக்கு வரும் உறவினர்களின் வேலைகளும் பாதிக்கப்படும். எண்டோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கினால் போதும். இதனால் மொத்தச் செலவு எனக் கணக்கிட்டால் எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு தான்.
எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளிப்பதற்கு உரிய பயிற்சி தேவை. உரிய பயிற்சியும் நிபுணத்துவமும் இருந்தால் தான் எண்டோஸ் கோப்பி மூலம் சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.
எண்டோஸ்கோப்பி சிகிச்சையால் பலன் என்ன?
முன்பெல்லாம் அறுவைசிகிச்சை முறையில் வயிற்றைத் திறந்து பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 7 முதல் 10 நாள்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது. மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது கடினம். நவீன சிகிச்சை முறையில் குறிப்பாக எண்டோஸ்கோப்பி முறையில் பல நன்மைகள் உள்ளன. வயிற்றைக் கிழிக்காமல் வாய் வழியாகவே ஆசன வாய் வழியாகவோ கருவிகளைச் செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.
தையல் இல்லை ரத்த சேதம் மிகக்குறைவு மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை.
ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கினால் போதும்.
எண்டோஸ்கோப்பி ஜீரண நலத்துறையின் புரட்சி என்பது வெறும் வார்த்தை அலங்காரத்துக்காகச் சொல்லப்பட்டது அல்ல. எண்டோஸ்கோப்பியின் வருகைக்குப் பின் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எனவே எண்டோஸ்கோப்பி ஒரு நாட்டின் சமூக, சுகாதார மேம்பாட்டுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

பப்பாளிப்பழத்துடன் தயிர்கலந்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
எளிமையாக ஓய்வு நேரத்தில் நமக்கு நாமே செய்து கொள்ளும் இதுபோன்ற ஓப்பனைகளுக்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை
எளிமையாக ஓய்வு நேரத்தில் நமக்கு நாமே செய்து கொள்ளும் இதுபோன்ற ஓப்பனைகளுக்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
நாட்டு வைத்தியம் மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.. வராம போனாலும் விபரீதம்தான். இதுக்கு மூலிகை வைத்தியத்துல ...
-
நெல்லிக்காய் – பயன்கள் உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், க...
-
நாட்டு வைத்தியம்! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு.. இந்த ரெண்டுக்கும் நாட்டு வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்து...
-
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும்...
-
இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது! உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர ...
-
தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குண...
-
முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகு...
-
என் ஆண் உறுப்பு செக்ஸ்இல் இருக்கும்போது கூட தோல் உரியாமல் அப்படியே இருக்கிறது அதேபோல நான் என் உறுப்பு மொட்டையும் (penis glans)...
-
இயற்கை தரும் இளமை வரம்! ராஜகளை தரும் ரோஜா தைலம்! ரோஜாப் பூவில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்-படும் தைலம...