Followers

Sunday, 4 March 2012

கொலஸ்ட்ரால் குறைய தினம் ஒரு ஆப்பிள்! இயற்கை தரும் இளமை வரம்!

 

இயற்கை தரும் இளமை வரம்!
கொலஸ்ட்ரால் குறைய தினம் ஒரு ஆப்பிள்!




''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவமனைக்கே போக வேண்டியதில்லை'' என்பார்கள். ஆரோக்கியம் + அழகு தரும் அற்புதப் பழமான ஆப்பிளின், அழகு அணிவகுப்பு இதோ..

வற்றிப் போன கன்னங்களையும் பளபளக்க வைக்கும் ஆப்பிள் மாஸ்க் போடும் விதத்தைப் பார்க்கலாம்.

4 சிறிய ஆப்பிள் துண்டுகளை கால் கப் பாலில் போட்டுக் கொதிக்க விடுங்கள். தயிர் போல மாறி விடும். இறக்கி, ஆற வைத்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இதைச் செய்து வர, முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பளிங்கு போல் பிரகாசிக்கும்.

வறண்ட சருமத்தைப் பொலிவாக்கும் சக்தி, ஆப்பிள் கிரீமில் இருக்கிறது.

தோல் சீவிய ஒரு ஆப்பிள் பழத்தை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 2 டீஸ்பூன் தேன், 4 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் கலந்து, முகம் முழுவதும் பூசி, 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். மாசு, மரு இல்லாமல் பளீரென ஜொலிக்கும் முகம்.

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் ஆப்பிள் 'ப்ளீச்' செய்யலாமா?

2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுதுடன், அரை டீஸ்பூன் பால் பவுடர், அரை டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் போட்டு, அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். மின்னல் போல மின்னும் முகம்.

சருமத்தை மிருதுவாக்கும் சக்தி ஆப்பிளில் உண்டு.


ஆப்பிள் ஜூஸ் ஒரு டேபிள்ஸ்பூனுடன், கடலை மாவு அரை கப், பூலான் கிழங்கு தோல் பவுடர் ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் குளியல் பவுடரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளியுங்கள். சருமம் மென்மையாகும். சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

கோடை காலத்திலும் சருமம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமா?

ஆப்பிள் விழுது, தக்காளி அரைத்த விழுது, தர்பூசணி விழுது.. மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பஞ்சில் தோய்த்து, முகத்தில் ஒற்றி எடுங்கள். முகம் குளுகுளுவென்று இருக்கும்.

நோய்வாய்ப்பட்டாலே தலைமுடி சிக்கு பிடித்து உதிரத் தொடங்கும். இதற்கு ஆப்பிள் ஜூஸ் அருமையான தீர்வு.

வெந்தயப் பொடி - 2 டீஸ்பூன், சீயக்காய்த்தூள் - 3 டீஸ்பூன், ஆப்பிள் ஜூஸ் - 3 டீஸ்பூன்.. இவற்றை வெந்நீரில் கலந்து, இந்தக் கலவையால் கூந்தலை அலசுங்கள். முடி உதிர்வது முற்றிலும் நின்று விடும்.

காலில் ஏற்படும் ஆணி ஒரு தீராத பிரச்னை. சிலருக்கு இது தானாகவே சரியாகி விடும்.

கொய்யா ஜூஸ், ஆப்பிள் ஜூஸ்.. இரண்டையும் சம அளவு கலந்து கொள்ளுங்கள். காலை ஒரு கல்லின் மீது வைத்து, ஒரு காட்டன் துணியால் ஜூஸைத் தொட்டுத் தடவுங்கள். தினமும் இதைத் தொடர்ந்து செய்து வர.. வலி குறைவதுடன் ஆணியும் வெகு சீக்கிரத்தில் மறைந்து விடும்.

ஆப்பிள் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, உலர்த்தி, பவுடராக்குங்கள். இந்த பவுடரை சீயக்காய் (அ) ஷாம்புவுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க.. கூந்தல் மென்மையாகி பளபளக்கும்.
--------------------------------------------------------------------------------

ஆப்பிள் ஆரோக்கியத்துக்கான அற்புத சுரங்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதில் 85.9% நீர்ச் சத்து இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெயிலில் அலையும்போது அதீத தாகமெடுத்தால், ஒரு ஆப்பிளை வாங்கி சாப்பிடுங்கள். தாகமே எடுக்காது.

ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது ஆப்பிள்.

வயிற்றுப் பொறுமல், சீத பேதி, வயிற்றுப் போக்கு.. போன்றவற்றைக் குணமாக்கி, குடலையும் வலுவாக்கும்.

இதில் உள்ள 'டெக்டின்' (ஜிணிசிஜிமிழி) என்ற நார்ச்சத்து இருமலைக் கட்டுப்படுத்தி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். 3 முதல் 4 மாதங்கள் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.

பசியைத் தூண்டும்.. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆப்பிள்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃப்ரெஷ் ஆப்பிள் ஜூஸ் கொடுத்து வந்தால் நோய் விரைவில் குணமாகும். உடலும் தெம்பாகும்.

ரத்தத்தில் உப்புச் சத்து அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். ஆப்பிள் பழத்தில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து ஒரு மாதம் ஆப்பிள் ஜூஸ் குடித்து வாருங்கள். ரத்த அழுத்தம் குறையும்.

மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள், ஆப்பிளை அரைத்து வலி இருக்கும் இடத்தில் பற்றாகப் போட்டு வந்தால் வலி குணமாகும்.

வாயில் கோழை வழிதல், பல்லில் காரை படிதல் போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய்களை ஆப்பிளில் உள்ள ஆசிட் அழித்து விடும்.

No comments:

Post a Comment

Popular Posts