Followers

Thursday, 22 March 2012

தூக்கமின்மை’ நோயின் காரணங்களும் தீர்வுகளும்!


தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப்படுகிறது. இது வயதானவர்களினிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்.நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்த நோய் வெளிக்காட்டப்படலாம்…

படுக்கையில் கிடந்தாலும் நித்திரைக்கு செல்ல முடியாமை
அடிக்கடி நித்திரை குழம்புதல்
சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்துவிடல்
நித்திரை கொண்டாலும் திருப்தியான நித்திரையின்மை

இந்தப் பிரச்சினை வேறு விதமான நோய்களோடு கலந்து காணப்படலாம். உதாரணமாக் மன நோய்கள் , நோவினை ஏற்படுத்தும் மருத்துவ நோய்கள் போன்றவை.
இவ்வாறு வேறு விதமான நோய்களோடு இறுபவர்களுக்கு இந்த நித்திரையின்மை பிரச்சினை ஏற்படுமானால் இது வெறுமனே அந்த மன நோயாலோ அல்லது மற்றைய நோயினால் ஏற்படும் நித்திரையின்மை என்று விட்டு விடாமல் , நித்திரையின்மை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.

இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்…

வயது முதிந்தவர்கள்
பெண்கள்
விவாகரத்துப் பெற்றவர்கள்
துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள்
புகைப் பிடிப்பவர்கள்
அதிகம் கோப்பி குடிப்பவர்கள்
அதிகம் மது அருந்துபவர்கள்
சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்கள்

இதற்கான தீர்வு :

முதலாவதாக இந்தப் பிரச்சினை வேறு நோய்களோடு சேர்ந்து அல்லது வேறு நோய்களினால் (மன நோய் உட்பட) ஏற்படுமானால் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு சரியான மருந்தளிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ளுவது எப்படி!?

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லுவதற்கும் எழும்புவதற்குமான நேரத்தை ஒழுங்காக வரையறுத்துக் கொள்ளுங்கள்
ஒழுங்கான உடற்பயிற்சி(இரவை அண்டிய நேரத்தில் தவிர்க்கவும்)
பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச்சத்திலே இருக்கப் பழகுங்கள்( சூரிய ஒளி)
இரவிலே பிரகாசமான வெளிச்சத்தை தவிருங்கள்
நித்திரைக்குச் செல்லுவதற்கு முந்திய .. மணி நேரத்தில் அதிகம் கனமான சாப்பாடுகளை தவிருங்கள்
தூங்கும் அறையை இருளாகவும், அமைதியாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள்
புகை மற்றும் குடியை தவீர்த்து விடுங்கள்
நித்திரைக்கு முன் மனதை சாந்தப் படுத்தும் விடயங்களில் ஈடுபடுங்கள்

மேற்சொன்ன வழிமுறைகளுக்கு அடுத்ததாக உங்கள் நித்திரை பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றப்பட வேண்டிய நித்திரைப் பழக்க பயிற்சி முறை :

படுக்கைக்கு சென்று சில நிமிடங்களில் தூங்கமுடியவில்லை என்றால் உடனேயே அறைவிட்டு வெளியேறி, நித்திரை என்னத்தை விட்டு உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை செய்யுங்கள்(வாசித்தல் போன்றவை)
இவ்வாறு உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் போது மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.
அவ்வாறு படுக்கைக்குச் சென்று மீண்டும் தூங்க முடியாவிட்டால் சில நிமிடங்களில் படுக்கையை விட்டு எழுந்து உங்களுக்கு பிடித்த வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள். படுக்கைக்கு சென்று சில நிமிடங்களிலே தூக்கம் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்யுங்கள்.

முக்கியமாக பகல் நேரத்தில் தூங்குவதை தவிருங்கள்.

இப்படியும் உங்களால இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டால் வைத்தியரை நாடி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts