Followers

Thursday, 29 March 2012

காரம், புளிப்பு, மட்டுமல்ல மன அழுத்தத்தினாலும் அல்சர் வரும்

 
நம் வயிற்றுக்குள் குடலை பாதுகாக்கும் திரை போன்ற அதைப்பு பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவானாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது இதுவே அல்சர் எனப்படுகிறது. இந்த புண்களினால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். நெஞ்சு எரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என இன்றைக்கு பெரும்பான்மையோரை வாட்டி எடுக்கிறது அல்சர். சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விடுவதும், பாஸ்ட் புட், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ போன்றவற்றை உள்ளே தள்ளுவதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்சன், மன அழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மன அழுத்தம் பாதிப்பு

ஒரு சிலருக்கு பரம்பரை காரணமாகவும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டென்சன் ஏற்படும் போது அமிலம் அதிகமாக சுரக்கிறது. இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

மருந்தின் வீரியத்தினால் புண்கள்

சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று எதையாவது மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில் ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் போது மருத்துவர்கள் தரும் பி.காம்பளக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம். தவிர்க்கும் பட்சத்தில் மருந்தின் வீரியத்தினால் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றன.

ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும்

எந்த காரணம் கொண்டு உணவுகளை தவிர்க்க கூடாது. மேலும் அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையில் உணவுகளை உட்கொள்ளவேண்டும். அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரியில் கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம்.

எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது ஆபத்தானது

அல்சர் வந்தவர்கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இவற்றை அறவே தவிர்க்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது. ஏனெனில் அது நெஞ்சு எரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். எனவே மூன்று மணிநேரம் கழித்தே உறங்கவேண்டும். நள்ளிரவு நேரத்தில் எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர்
Read more >>

Monday, 26 March 2012

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தர்பூசணி



தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. சி வைட்டமினும் அதிகம் இருக்கிறது.
இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கால்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் உள்ள சிலர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இரு குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழு தினமும் ஒரு மாத்திரை சாப்பிட்டனர்.
இரண்டாவது குழுவுக்கு வெறும் சோதனைக்காக போலி மாத்திரை கொடுக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டது. தர்பூசணி மாத்திரை சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது.
மாரடைப்பு, ஸ்டிரோக் ஏற்பட மிக முக்கிய காரணம் அதிக ரத்த அழுத்தம் தான். தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது.
WATERMELON IMAGE
USETAMIL.COM
இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப வேண்டிய இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Read more >>

Saturday, 24 March 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்

 
 
sidthamaruthuvam
ginger image
இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது.

அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

பல நோய்களுக்கு அருமருந்தாக

சளிப்பிடித்தல் ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Read more >>

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை


சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார். இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.

இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும். இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.

டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.

சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம் என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம் ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும். அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Read more >>

Thursday, 22 March 2012

தூக்கமின்மை’ நோயின் காரணங்களும் தீர்வுகளும்!


தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப்படுகிறது. இது வயதானவர்களினிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்.நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்த நோய் வெளிக்காட்டப்படலாம்…

படுக்கையில் கிடந்தாலும் நித்திரைக்கு செல்ல முடியாமை
அடிக்கடி நித்திரை குழம்புதல்
சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்துவிடல்
நித்திரை கொண்டாலும் திருப்தியான நித்திரையின்மை

இந்தப் பிரச்சினை வேறு விதமான நோய்களோடு கலந்து காணப்படலாம். உதாரணமாக் மன நோய்கள் , நோவினை ஏற்படுத்தும் மருத்துவ நோய்கள் போன்றவை.
இவ்வாறு வேறு விதமான நோய்களோடு இறுபவர்களுக்கு இந்த நித்திரையின்மை பிரச்சினை ஏற்படுமானால் இது வெறுமனே அந்த மன நோயாலோ அல்லது மற்றைய நோயினால் ஏற்படும் நித்திரையின்மை என்று விட்டு விடாமல் , நித்திரையின்மை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.

இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்…

வயது முதிந்தவர்கள்
பெண்கள்
விவாகரத்துப் பெற்றவர்கள்
துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள்
புகைப் பிடிப்பவர்கள்
அதிகம் கோப்பி குடிப்பவர்கள்
அதிகம் மது அருந்துபவர்கள்
சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்கள்

இதற்கான தீர்வு :

முதலாவதாக இந்தப் பிரச்சினை வேறு நோய்களோடு சேர்ந்து அல்லது வேறு நோய்களினால் (மன நோய் உட்பட) ஏற்படுமானால் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு சரியான மருந்தளிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ளுவது எப்படி!?

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லுவதற்கும் எழும்புவதற்குமான நேரத்தை ஒழுங்காக வரையறுத்துக் கொள்ளுங்கள்
ஒழுங்கான உடற்பயிற்சி(இரவை அண்டிய நேரத்தில் தவிர்க்கவும்)
பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச்சத்திலே இருக்கப் பழகுங்கள்( சூரிய ஒளி)
இரவிலே பிரகாசமான வெளிச்சத்தை தவிருங்கள்
நித்திரைக்குச் செல்லுவதற்கு முந்திய .. மணி நேரத்தில் அதிகம் கனமான சாப்பாடுகளை தவிருங்கள்
தூங்கும் அறையை இருளாகவும், அமைதியாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள்
புகை மற்றும் குடியை தவீர்த்து விடுங்கள்
நித்திரைக்கு முன் மனதை சாந்தப் படுத்தும் விடயங்களில் ஈடுபடுங்கள்

மேற்சொன்ன வழிமுறைகளுக்கு அடுத்ததாக உங்கள் நித்திரை பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றப்பட வேண்டிய நித்திரைப் பழக்க பயிற்சி முறை :

படுக்கைக்கு சென்று சில நிமிடங்களில் தூங்கமுடியவில்லை என்றால் உடனேயே அறைவிட்டு வெளியேறி, நித்திரை என்னத்தை விட்டு உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை செய்யுங்கள்(வாசித்தல் போன்றவை)
இவ்வாறு உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் போது மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.
அவ்வாறு படுக்கைக்குச் சென்று மீண்டும் தூங்க முடியாவிட்டால் சில நிமிடங்களில் படுக்கையை விட்டு எழுந்து உங்களுக்கு பிடித்த வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள். படுக்கைக்கு சென்று சில நிமிடங்களிலே தூக்கம் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்யுங்கள்.

முக்கியமாக பகல் நேரத்தில் தூங்குவதை தவிருங்கள்.

இப்படியும் உங்களால இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டால் வைத்தியரை நாடி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Read more >>

Tuesday, 20 March 2012

இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி

 

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.

பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.

எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read more >>

Sunday, 18 March 2012

நீண்ட காலம் உயிருடன் வாழ புதிய மாத்திரை: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

 
 
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீண்ட காலமாக மாற்றும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

பாலூட்டி இனங்களில் உள்ள "சிர்ட்6" (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.
எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது.

இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர். அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Read more >>

கண்களிலும் புற்று நோய் வரும்!

 
 
உடலில் எந்த ஒரு பகுதியிலும் புற்று நோய் வரும். ஏன். கண்களில் கூட புற்று நோய் வரும் என்கிறார் சங்கர நேத்திராலயாவின் கண் டாக்டர் மகேஷ் ஷண்முகம். இந்த நோய் குறித்து அவர் விவரிக்கிறார்.

புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கண்களில் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம் பரம்பரை. மற்றொன்று மரபணு மாற்றம் என்று சொல்லலாம். கண்களில் ஏற்படும் புற்றுநோயை 'ரெடினோ பிளாஸ்டோமான்னு சொல்லுவோம்.

இது பெரும்பாலும் சின்ன குழந்தைகளை பாதிக்கும். இவர்களின் கருவிழியில் வெள்ளை படலம் படர்ந்து, இரவில் மிருகங்களின் கண்கள் ஒளிர்வது போல் இருக்கும். மாறுகண் பாதிப்பு இருப்பது போல் தோற்றமளிக்கும்.

சில குழந்தைகளுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். இந்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. கண்களில் வரும் இந்த புற்றுநோய் கவனிக்காமல் இருந்தால், நாள்பட அது மற்ற உறுப்புகளையும் பாதித்து, கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடும்.

இதனை 3 வழி முறைகளில் குணப்படுத்தலாம்.

முதலாவது

அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. இதனால் சில சமயம் கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

இரண்டாவது

இன்ட்ரா எட்ரியல் கிமோதெரபி: கண்பார்வைக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும். இன்ட்ரா கிமோதெரபியில், லேசர் கதிர்களை கண்களுக்கு வெளியே செலுத்துவோம். அது புற்றுநோய் கட்டியில் ஊடுருவி சென்று அதனை அழிக்கும்.

மூன்றாவது

பிராகி தெரபி: கண்களுக்கு மேல் சின்ன வட்டமான பிளேட் வைத்து அதன் வழியாக கண்களுக்கு செலுத்துவோம். இது புற்றுநோய் கட்டியை மட்டும் தாக்கும். முகத்தில் மற்ற பாகங்களை பாதிக்காது. அதே சமயம் கண் பார்வையும் காப்பாற்ற முடியும்.

இந்த நோய் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பாதிக்கும். பெரியவர்களை பொறுத்தவரை, நாற்பது வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படும். மெலனாமா புற்றுநோய்' என்று அழைக்கப்படும் இந்த நோயின் பாதிப்பு கருவிழி முழுதும் வெள்ளை படலம் படர்ந்து இருக்கும்.

பார்வை குறைவது மட்டும் இல்லாமல் பக்காவாட்டில் உள்ள பொருட்களை பார்க்கும் திறனும் குறையும். இவர்களுக்கு பிராகி தெலபி சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்றார்.
Read more >>

Thursday, 15 March 2012

உடல் வலிகளும் காரணங்களும் - அறிய வேண்டிய மருத்துவம்!

 
 
 
எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம், வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.
 
1. மிகமோசமான தலைவலி
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்
பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம்.
அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.
3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி
அனேகமாக இது arthritis ஆக இருக்கலாம்.
4. கடுமையான வயிற்று வலி
வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.
5. கெண்டைக்கால் வலி
கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி
கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.
7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி
சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் " கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது "என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.
சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போது நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாம்ல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.
8. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி
வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து கடினமடைகின்றது.மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது. இதனால் முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால் மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம் மரத்தும் போகிறது.
இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவே நியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு.காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அவஸ்தைகள் அதிகரிக்கும்.இது தங்களது சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு. (அப்படி எண்ணி சில மருத்துவர்களும் தவறான சிகிச்சை அளித்திருக்கிறார்கள்!).
நம் உடலில் மூளை தொடங்கி கால் நுனி வரை ஒவ்வொரு பாகத்துக்கும் குறிப்பிட்ட நரம்புகள் செல்கின்றன. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறது என்று அர்த்தம்.இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாக உணர்கிறீர்கள். காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின்மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. களிம்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குத்தான் லாபம்.
9. காரணம் அறிதல்
பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும் போது மூட்டுப்பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால் வந்த வலியா என்பதைப் பெரும்பாலும் கண்டு பிடித்துவிட முடியும்.
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின்உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோவலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம
ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை 'சுரீர்"என்று இழுக்கும் உணர்வுஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோஇது அதிகமாகும்.
ஸியாடிகா எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டுஎழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும். காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்தது போல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்க முடியும்.வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்றஅளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகிவிடும்.
10. சிறப்பு சிகிட்சை
மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான் செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. நல்லவேளையாக இப்போது எம்.ர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது.முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும்தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.
ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டு வடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும்.
ஆனால் தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய ஆப்பரேஷன் செய்வது அவசியமாகிறது.நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்து குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டி.
Read more >>

Wednesday, 14 March 2012

வாயு தொல்லை நீங்க...

 
 
தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
வாய் நாற்றம்: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
குடல்புண்: மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
உதட்டு வெடிப்பு: கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
Read more >>

Saturday, 10 March 2012

வாத நோய்களை குறைக்கும் யோகாசனங்கள்

 
 
 


யோகாவும் அதை சார்ந்த ஆசனங்களும் நம் நாட்டில் பிறந்தவை. அவற்றின் அருமை பெருமைகள் தற்போது உலகெங்கும் பரவியுள்ளன. யோகா உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் மருந்தாகும். நோய்களுக்கு பிராணாயமம், யோகாசனங்கள், தியானம் இவைகளும், டாக்டர் கொடுக்கும் மருந்துகளும் இணைந்து செயல்பட்டால் நிவாரணம் நிச்சயம்.
வாத நோய்களை குறைக்க பல யோகாசனங்கள் இருக்கின்றன. யோகாசனங்களை ஆரம்பிக்கும் முன் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
1. யோகாவை ஆரம்பிக்கும் முன் – முதலில் ஒரு யோகாசன குரு தேவை. ஆசனங்களின் அடிப்படை தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் வீடியோ மூலமாக அல்லது இன்டர்நெட் மூலமாக அறிந்து கொண்டு ஆசனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு தடவையாவது குருவிடமிருந்து கற்றுக் கொள்வது நல்லது.
2. நேரமும் இடமும் – காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்ற சமயமாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், சாயங்காலமும் செய்யலாம். செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய வேண்டாம். ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும்.
3. வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3-4 மணி நேரம் விட வேண்டும். எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்கவும்.
4. யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும்.
5. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
6. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம்.
ஆசனங்கள் செய்யும் போது
1. எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய வாம் அப் எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
2. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய முற்படுங்கள்.
3. உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
4. யோகாசனங்களை செய்யும் போது எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
5. எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது.
6. ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.
யோகாசனத்தின் நன்மைகள்
1. தசைகள் வலுவடையும்.
2. முதுகுத் தண்டு, எலும்பு மூட்டுகள் சரிவர இயங்கும்.
3. உடலுக்கு சக்தி கூடும். நரம்பு மண்டலம் இதயம், நுரையீரல் போன்ற எல்லா உடல் அவயங்களும் சரிவர இயங்கும்.
4. மனநிலை அமைதியடையும்.
5. பல வியாதிகள் பீடிக்கப்பட்டவர்களுக்கு என்று குறிப்பாக ஆசனங்கள் உள்ளன. இவற்றால் மருந்துடன் சேர்ந்து பலனளிக்கும்.
இப்போது ஆர்த்தரைடீஸ் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஆசனங்களை பார்ப்போம்
கும்மராசனம் (பூனை)
1. மண்டியிட்டு கால் மூட்டுக்களையும், உள்ளங் கைகளையும் தரையில் ஊன்றி, மண்டியிட்டு தவழும் நிலையில் (பூனை போல்) உடலை நிறுத்தவும்.
2. உள்ளங்கைகள் தரையில் படும் படி (தோளுக்கு நேர் கீழாக இருக்கும் படி) ஊன்றி கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளின் நடுவே உள்ள இடைவெளி உங்கள் இரு தோள்களின் நடுவே உள்ளே இடைவெளி (அகலம்) அளவு இருக்க வேண்டும்.
3. முழங்கால்கள் இடுப்புக்கு கீழே இருக்க வேண்டும். இடுப்பு அகலம் அளவு இரு முடிக்கால்களின் நடுவே இடைவெளி இருக்க வேண்டும்.
4. வெளிமூச்சு விட்டு, முதுகெலும்பை (முதுகை) மேல் நோக்கி வளைக்கவும். இதே நிலை 'கோபமுற்ற' பூனை முதுகை நிமிர்த்தி சிலிர்த்துக் கொள்வது போல் இருக்க வேண்டும். வயிற்றை உள்ளிழுத்து கொண்டு முகத்தாடையை கீழ்நோக்கி தாழ்த்திக் கொள்ளவும்.
5. மூச்சை உள்வாங்கவும். உள்ளிழுத்த வயிற்று தசைகளை விடுவித்து, கீழ் முதுகை குழி விழுவது போது, கீழ்நோக்கி வளைக்கவும். தலையை தூக்கி, மேல் நோக்கி பார்க்கவும். கைகள் நேராக இருக்கட்டும்.
6. இந்த நிலையை, (மூச்சு உள்விடுவது, பிறகு வெளிவிடுவது) திரும்பி சில தடவை செய்யவும்.
பலன்கள்
1. முதுகெலும்புக்கு சுலபமாக வளையும் தன்மையை கொடுக்கும்
2. முதுகையும், கைகளையும் பலப்படுத்தும்.
3. பெண்களின் ஜனனேந்திரியங்களை வலுப்படுத்தும்.
யோகாவின் குரு பதஞ்சலி முனிவர். இவர் எழுதியுள்ள யோக சூத்திரங்கள் யோக கலைகளை விவரிக்கின்றன. யோகா மட்டுமல்ல, பதஞ்சலி சரகஸம்ஹிதைக்கும் ஒரு உரை எழுதியிருக்கிறார். இதிலிருந்தே யோகாவும், ஆயுர்வேதமும் எவ்வளவு ஒன்றிணைந்தவை என்பது புலப்படும். பதஞ்சலி முனிவர் தான் யோகக் கலைகளை தொகுத்து 'யோக சூத்திரங்கள்' என்று வடிவமைத்தார்.
வீர பத்ராசனம்
1. நேராக நிமிர்ந்து நிற்கவும். கால்களை சேர்த்து, உடல் நேர்க்கோடாக, கைகள் பக்கவாட்டில் உடலை தொட்டுக் கொண்டு நிற்கவும்.
2. கால்களை 1.2 மீட்டர் (4 அடி) இடைவெளி இருக்குமாறு தள்ளி வைத்து கொள்ளவும். வலது பாதத்தை 90 டிகிரி கோணத்தில் திருப்பி, இடது காலை 45 டிகிரி கோணத்தில் திருப்பவும். வலது குதிகால் இடது உட் பாதமும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும்.
3. மூச்சை வெளிவிடவும். இடுப்பை, சுழற்றி, உடலை வலது பக்கம் திருப்பவும். உங்கள் உடலின் முன்பாகமும், வலது கட்டைவிரல் ஒரு திசையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
4. வலது காலை மடிக்கவும். வலது குதிகாலும் முழங்காலும் நேர்க்கோட்டில் இருக்கும்.
5. மூச்சை உள்ளே இழுக்கவும். கைகளை மேல் தூக்கவும். இரு கைகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி தோள்களின் அகலத்திற்கு சமமாக இருக்கும். உள்ளங்கை ஒன்றை ஒன்று பார்த்துக கொண்டிருக்கும். விரல் நுனிகள் கூரையை பார்த்திருக்கும்.
6. மூச்சை வெளியே விடவும். தலையை பின்வாங்கி, இரு உள்ளங்கைகளின் இடைவெளி வழியே கூரையை பார்க்கவும். இந்த நிலையில் நின்று வழக்கம் போல் சுவாசிக்கவும். கழுத்தை விறைப்பாக வைத்துக் கொள்ள வேண்டாம்.
7. மூச்சை உள் இழுக்கவும். கழுத்தை (தலையை) நேராக வைத்துக் கொண்டு, வலது காலை சரியான நிலைக்கு திருப்பவும், உடலை நார்மல் நிலைக்கு திருப்பிக் கொள்ளவும். கால் பாதங்களை நேர் நிலையில் திரும்பிக் கொள்ளவும்.
8. காலை விலக்கிக் கொண்டு, இது வரை வலது காலை மடித்து செய்தது போல், இடது காலை மடித்து செய்யவும்.
பலன்கள்
• கணுக்கால், முழங்கால், மூட்டுக்கள் பலமடையும்
• "சியாடிகா" நோயாளிகள் செய்ய வேண்டிய ஆசனம்
• கால் தசைகளை வலிமையாக்கும்.
சுகாசனம்
1. இருபிட்டங்களின் மீது உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கால்களையும் முன்னே நீட்டிக் கொள்ளவும். கால்கள் சேர்ந்திருக்கட்டும். கால்களை தளர்த்தி வைத்துக் கொள்ளவும்.
2. கால்களை மடித்து "சப்பண" மிட்டுக் கொள்ளவும். அதாவது வலது கால் இடது கெண்டைக்காலின் (முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே உள்ள பாகம்) முன் தரையை தொட்டுக் கொண்டும், இடது கால் வலது தொடையின் உள் வைத்து தரையை தொடுமாறு வைத்துக் கொள்ளவும்.
3. இரு முழங்கால்களை சிறிது தூக்கி கிட்டே கொண்டு வரவும். உள்ளங் கைகளை விரித்து முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும். தோள்களைவும், கைகளையும் தளர்த்திக் கொள்ளவும்.
4. மூச்சை உள்வாங்கவும், விரல்களை கோர்த்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் கூரையை பார்க்கும் படி திருப்பி, கைகளை தலைக்கு மேல் தூக்கவும்.
5. இந்த நிலையில், நார்மலாக சுவாசித்து கொண்டு, இருக்கவும்.
6. கால்களை பிரித்து முன் நீட்டிக் கொள்ளவும்.
7. கால்களை மாற்றி மறுபடியும் ஆசனத்தை செய்யவும்.
பலன்கள்
முதுகெலும்பை வலுப்படுத்தும்.
எச்சரிக்கை
முழங்கால்களை கையால் கீழே தள்ள வேண்டாம்.
ஹம்சாசனா (அன்னபட்சி)
1. தவழ்வது போல் கைகளை, கால்களை தரையில் வைத்துக் கொள்ளவும். கால்கள் மண்டியிட்டது போலிருக்கும்.
2. "பூனை" ஆசனத்தைப் போல், இரு கைகளும் உள்ளங் கைகளால் தரையில் ஊன்றி தோள்களுக்கு கீழே இருக்க வேண்டும். விரல்கள் முன்நோக்கி இருக்க வேண்டும். இரு முழங்கைகளும் தரையில் படிந்திருக்க வேண்டும்.
3. மூச்சை உள்வாங்கி, தலையை தூக்கி எதிரில் பார்க்கவும். மார்பை விவரிக்கவும். உள்ளிழுத்து. பின் முதுகில் "குழி" ஏற்படுத்தவும்.
4. வெளிமூச்சு விட்டு, இடுப்பு – பிட்டப் பகுதியை மேலே தூக்கவும். கைகளை தலைக்கு முன் நீட்டி உள்ளங்கைகளால் தரையை தொடவும். தலை தரையை தொடட்டும். கிட்டத்தட்ட ஒரு முக்கோண வடிவில் உடல் தோன்றும்.
5. இதில் நிலை கொண்டு, நார்மலாக சுவாசிக்கவும்.
6. உடலை, இடுப்பை பின் தள்ளி கால்களின் மேல் உட்காரவும். உள்மூச்செடுத்து, தலை, உடலை நேராக வைக்கவும். மூச்சை வெளிவிடவும்.
பயன்கள்
1. முதுகு, கை தசைகள் வலிமை அடையும்
2. முதுகெலும்பு சீராகும்
3. முதுகு வலி குறையும்
4. பிட்ட தசைகள் வலிவுறும்
எச்சரிக்கை
உங்களுக்கு முதுகு மற்றும் முழங்கால் பாதிப்புகள் இருந்தால், ஜாக்கிரதையாக, வைத்தியர் ஆலோசனைப்படி இந்த ஆசனத்தை செய்யவும்.
சலபாசனம்
1. முதலில் தரையில் வயிறு அழுந்தி இருக்குமாறு குப்புற படுத்துக் கொள்ளவும். தலையின் ஒரு பக்கம் தரையை தொடட்டும். கைகளை தளர்த்தி பக்க வாட்டில் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் கூரையை பார்த்திருக்கட்டும்.
2. தலையின் நெற்றி, தாடை தரையில் படுமாறு திருப்பிக் கொள்ளவும். கைகளை வயிற்றுப் பகுதிக்குக் கீழே ஒன்றின் கீழ் ஒன்றாக வைத்துக் கொள்ளவும்.
3. மூச்சிழுக்கவும், உடலையும், தலையையும் தரையிலிருந்து தூக்காமல், கால்களை மட்டும் மேல் நோக்கி தூக்கவும். கைகளை மடக்கி வைத்திருக்கும் அடிவயிற்று பகுதியிலிருந்து, கால்கள் முழுமையாக மேல் எழும்ப வேண்டுமே தவிர அவற்றை மடக்கக் கூடாது.
4. மூச்சை வெளியிட்டு, காலை நீட்டி, பிட்ட தசைகளை சுருக்கி, இடுப்புப் பிரதேசத்தை தரையில் அழுத்திக் கொண்டு கால்களை சேர்த்து முடிந்த வரை உயரே தூக்கவும்.
5. இந்த நிலையில் நார்மலாக சுவாசிக்கவும். 10 – 20 நொடிகள் இருக்கவும்.
6. மூச்சை வெளியிட்டு கால்களை இறக்கவும். கைகளை தளர்த்தவும்.
பயன்கள்
1. கால்களை பலப்படுத்தி, பின் முதுகு தசைகளுக்கு வலிமை சேர்க்கிறது.
2. பிட்ட தசைகள் வலிவுறும்
3. முதுகெலுபின் வளையும் தன்மை மேம்படும்
4. கீழ் முதுகு வலி கட்டுப்படும்.
தனுராசனம் (வில்)
1. இதுவும் குப்புற படுத்து செய்ய வேண்டிய ஆசனம். குப்புற படுத்து கைகளை பக்கவாட்டில் தளர்த்தி வைத்துக் கொள்ளவும்.
2. முகவாய்க்கட்டை தரையில் படட்டும். முழங்கால்களை மடிக்கவும். மடித்து, உட்பாதங்கள் உடலின் பின்புறத்தில், பிட்டத்தில் படும்படி இருகைகளால் பிடித்து கொண்டு வரவும். வலது கையால் வலது கணுக்காலையும், இடது கையால் இடது கணுக்காலையும் பிடித்து கொண்டு வரவும்.
3. மூச்சை உள்ளிழுக்கவும். தலையை தூக்கி நேராக பார்க்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
4. மூச்சை வெளியிடவும், உடலை "வில்" போல் வளைக்கவும். கால்களையும் தூக்க வேண்டும். (கையால் பிடித்து), தலை, மார்பு, தோள் இவற்றையும் தரையை விட்டு மேலே தூக்கவும். அடிவயிறு தான் தரையை தொட்டுக் கொண்டிருக்கும்.
5. இந்த நிலையில், நார்மலாக சுவாசித்துக் கொண்டு இருக்கவும்.
6. கணுக்காலை விடவும். மூச்சை வெளிவிடவும். கால்களை இறக்கவும். உடலையும் இறக்கவும். கைகளை தளர்த்தி பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். உடலையே தளர்த்திக் கொள்ளவும்.
பயன்கள்
1. முதுகெலும்பை சீராக்கும்
2. முதுகெலும்பின் "டிஸ்க்" "நழுவும்" பிரச்சனையை கட்டுப்படுத்தும்
3. முதுகு வலியை குறைக்கும்
4. கை, கால்களுக்கு வலிமை சேர்க்கும்
புஜங்காசனம் (நாக பாம்பு ஆசனம்)
1. இதுவும் குப்புற படுத்துக் கொண்டு செய்யும் ஆசனம் உடல் முழுவதும் தரையில் படும்படி குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கைகளை தளர்த்தி உடல் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் கூரையை பார்த்திருக்க வேண்டும்.
2. நெற்றி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கைகளை தூக்கி தோல்களின் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முழங் கைகள் மடங்கி உடலின் பக்கவாட்டில் தொட்டுக் கொண்டிருக்கும்.
3. மூச்சை உள்ளிழுக்கவும். தலை, தோள்களை தரையிலிருந்து தூக்கவும். இடுப்புப் பகுதி தரையை தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
4. மூச்சை வெளியே விடவும். உள்ளங் கைகளை தரையில் ஊன்றி முன் உடலை எவ்வளவு தரையிலிருந்து மேலே தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கலாம். தலையை நிமிர்த்தி நேராக பார்க்கவும்.
5. தோள்களையும், தலையையும் பின்னால் சாய்த்துக் கொள்ளவும். தலையை சாய்த்து மேல் கூரையை பார்க்க வேண்டும்.
6. இந்த நிலையில் நார்மலாக சுவாசிக்கவும்.
7. மூச்சை வெளி விடவும். உடலை தரைக்கு கொண்டு வரவும். கைகளை தளர்த்தி பழைய படி கூப்புற படுத்துக் கொள்ளவும்.
பயன்கள்
1. முதுகெலும்புக்கு நல்லது
2. முதுகெலும்பின் டிஸ்க் நழுவலுக்கு இந்த ஆசனம் நல்லது.
பரத்வாஜாசனம்
1. கால்களை முன்னே நீட்டிக் கொண்டு, நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும்
2. கால்களை மடக்கி அதன் மேல் உட்காரவும். வலது காலை இடது காலை கீழ் வைக்கவும், கைகளை தளர்த்திக் கொள்ளவும்.
3. இடது கையை வலது முழங்காலில் வைக்கவும். வலது கையை உங்கள் உடலின் பக்கத்தில் முதுகெலும்பின் அருகாமையில் வைக்கவும்.
4. மூச்சை உள்ளே இழுக்கவும். முதுகெலும்பை மேலே நீட்டி கொள்ளவும்.
5. மூச்சை வெளி விடவும். இடுப்புக்கு மேல் உள்ள உடலின் பாகத்தை வலது பக்கம் திருப்பவும். நன்றாக இடது தோள் வலது தோளின் நேர் கோட்டில் இருக்குமாறு திருப்பவும்.
6. இடது கைகளை நேராக வைத்துக் கொண்டு வலது கையால் இடது முழங்கையை பிடித்துக் கொள்ளவும். தலையை திருப்பி வலது தோள் மேல் பார்வை செல்லும் படி வைத்துக் கொள்ளவும்.
7. இந்த நிலையில் நார்மாலாக சுவாசிக்கவும். மூச்சை உள் இழுக்கும் போது உஙகள் உடலை, மார்பை விரித்து மேலே தூக்கவும். மூச்சை வெளியே விடும் போது உடலை (இடுப்புக்கு மேல்) திருப்பவும்.
8. மூச்சை உள் இழுக்கவும். உடலை நார்மல் நிலைக்கு திருப்பவும். கைகளை தளர்த்தி கொள்ளவும். மூச்சை வெளியே விட்டு கால்களை உடலுக்கு முன் நீட்டிக் கொள்ளவும்.
9. இந்த ஆசனத்தை மறுப்பக்கம் திருப்பிச் செய்யவும்.
பயன்கள்
1. முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலுமையூட்டுகிறது.
2. முதுகு வலியை கட்டுப்படுத்துகிறது.
3. முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது.
சவாசனம்
யோகாசனங்களில் முக்கியமானது சவாசனம். ஆசனங்களைப் பற்றிய பல பழைய நூல்களில் விடாமல் குறிப்பிடப்படுவது சவாசனம்.
பெயருக்கேற்றபடி "சவம்" போல் படுதுது செய்யப்படுவது இந்த ஆசனம். கேட்க, பார்க்க சுலபமாக தோன்றினாலும் செய்ய கடுமையானது. மற்ற ஆசனங்கள் படி, இதை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வழிகாட்டியாக இதை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கால்களை நீட்டி நேராக படுத்து கொள்ளவும். கண்களை மூடவும். சமமட்டமாக படுக்க வேண்டும். தலையை வலது புறமோ, இடது புறமோ திருப்பாமல் நேராக வைத்துக் கொள்ளவும். உடல், தசைகளை தளர விடுங்கள். எந்த விதமான அசைவும் கூடாது. கால்களை அகற்றி படுக்கவும்.
அசைவில்லாமல் நன்றாக மூச்சை இழுத்து வெளியே, சீராக விடவும். பிறகு சாதாரணமான வழக்கம் போல் மூச்சை சரியாக இயங்க விடவும்.
இப்பொழுது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நினைவு கூறவும். உதாரணமாக கால் கட்டை விரலிலிருந்து ஆரம்பிக்கவும். கால் கட்டை விரலை மனதில் உருவகமாக்கி, மனதால் "என் கால்கட்டை விரல்கள் ஒய்வு எடுக்கின்றன" என்று சொல்லிக் கொள்ளவும்.
இவ்வாறு ஆரம்பித்து, பாதம், கால் ஆடு தசைகள், முழங்கால்கள், தொடைகள், பிறப்புறுக்கள், பின்பாகம், இடுப்பு, அடிவயிறு, கீழ் முதுகு, மேல் முதுகு, தோல், விரல்கள், உள்ளங்கைகள், முழங்கைகள், கைகள், தோள்கள், கழுத்து, தாடை, கன்னங்கள், உதடுகள், நாக்கு, மூக்கு கண்கள், இமைகள் , நெற்றி இத்யாதி உறுப்புகளை படிப்படியாக தியானித்து ஓய்வு எடுக்கச்செய்யவும்.
பிறகு உடலின் உள்பாகங்களான மூளை, இதயம், நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சுரப்பிகள், நரம்புகள், திசுக்கள் இவைகளையும் ஓய்வெடுக்கச் செய்யவும். பிறகு மனது, உடல் முழுவதையும் ஓய்வெடுக்க வைக்கவும். 'ரிலாக்ஸாக' இன்னும் ஐந்து நிமிடங்கள் அமைதியாக படுத்திருக்கவும். தூங்கிவிடக்கூடாது.
எழுந்திருக்கும்போது உடலை சிறிது அசைத்து இடதுபக்கம் உடலைத் திருப்பி, பக்கவாட்டில் எழுவது நலம்.
மற்ற பயிற்சிகளையெல்லாம் செய்து முடித்தபின் இதை செய்யலாம். புத்துணர்ச்சி திரும்பும்.
மறுபடியும் சொல்கிறோம். குருவிடம் பயின்ற பின்பே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
விரல் நுனிகளில் யோகா முத்திரை யோகம்
முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஓரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக் கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த "பஞ்ச மஹாபூதங்கள்" ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் "ஈதர்" என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்சபூதங்களை குறிக்கின்றன
1. கட்டை விரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிர விரல் – பூமி
5. சுண்டு விரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. "பத்மாசனம்" போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரை தவிர மற்றவைகளை ஒரே சமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
4. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
5. முதலில், ஆரம்பத்தில் 10 – 15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
6. வலது கை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வலபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கணுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டுவலி, ஆர்த்தரைடீஸ், ரூமாடிஸம், ஸ்பாண்டிலோஸிஸ் இவற்றின் வலிகளை குறைக்கும் பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்..
பிராண முத்திரை – மோதிர, மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள்
1. களைத்தை உடலை புதுப்பிக்கும்
2. நரம்புத்தளர்ச்சியை போக்கும். பார்வைத் திறன் அதிகரிக்கும்
3. ஞான முத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும்.
4. பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
Read more >>

Friday, 9 March 2012

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

 

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

——————————————————————————–

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

——————————————————————————–

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

——————————————————————————–

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

——————————————————————————–

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

——————————————————————————–

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

——————————————————————————–

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

——————————————————————————–

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

——————————————————————————–

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

——————————————————————————–

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
——————————————————————————–
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

——————————————————————————–

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

——————————————————————————–

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

——————————————————————————–

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

——————————————————————————–

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

——————————————————————————–

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

——————————————————————————–

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

——————————————————————————–

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

——————————————————————————–

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Read more >>

Wednesday, 7 March 2012

சொத்தை பல் கிருமிகளால் குடல் புற்று நோய் ஏற்படும்”

 
லண்டன், அக் 19-
 
பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது. இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை. எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
 
பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.
 
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
Read more >>

Tuesday, 6 March 2012

வாய் : இயற்கை மருத்துவம்

 
 
 

Print


வாய்

நாக்குப்புண் தீர :-

இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பவும்.

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

உள்நாக்கு வளர்ச்சி

உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

வாய்ப்புண் தீர :-

மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும்.

பற்களின் நோய்கள் :-

1. துத்தி இலை ஒரு கைப்பிடி பறித்துக் கழுவி வாயில் மெல்லவும்.

2. காட்டாமணக்கு குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் :-

அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வரவும்
உடம்பில் இரத்தப்பாதையில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்கு:

எலுமிச்சம்பழம், வெற்றிலைச்சாறு, பாதரசம் இவற்றை உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைப்பொறுத்து மூலிகைச்சாற்றுடன் பாதரசத்தை கரைத்து உட்கொள்ளவேண்டும். இதனால் உடம்பில் இரத்தக்குழாயில் அடைபட்டுள்ள கொழுப்பு மட்டும் உடன் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)

நகம் சொத்தை, இளம் வயது கருக்கா பற்கள், பல் சொத்தை இவற்றிலிருந்து நிவாரணம் பெற:

விஸ்வா இலுப்பை எண்ணை என்று நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி எந்த நேரத்திலாவது நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம், புறங்கால்களிலும் தொடர்ந்து தடவி வர விரைவில் குணமாகும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது

வாய் நாற்றம் அகல:-

1. நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால் பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்

2. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

3. எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.

பித்தம் தணிய

கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

பல்லில் புழுக்கள்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

வலுவான பற்கள்

வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
Read more >>

குங்குமப்பூவே... கொஞ்சும் அழகே..! குங்குமப் பூவின் மகிமைகள் இங்கே!



குங்குமப்பூவே... கொஞ்சும் அழகே..!




மலரினும் மெல்லிய, செக்கச்செவேல் நிறத்தில் இருக்கும் குங்குமப்பூ, தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அதி அற்புதமானவை. 'குங்குமப்பூவே... கொஞ்சு புறாவே..' என்ற பாட்டை வைத்தே குங்குமப்பூவின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அதன் விலை மிக மிக அதிகமாக இருக்கிறது என்றாலும், அது தரும் அழகுப் பலன்களோ ஏராளம். கவர்ந்திழுக்கும் கலரையும், மயக்கும் அழகையும் ஒருங்கிணைத்துத் தருவதில் குங்குமப்பூவுக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். குதூகல அழகை அள்ளித் தரும் குங்குமப் பூவின் மகிமைகள் இங்கே...

குங்குமப்பூ கீறல்-10 எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, இதனுடன் 2 டீஸ்பூன் மில்க் பவுடர் கலந்து, சின்ன அம்மியில் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 'பளிச்'சென முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

குங்குமப்பூ ஸ்க்ரப்

ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும்.

சந்தனத்தூள், செம்மரத்தூள் தலா அரை டீஸ்பூனுடன், 5 குங்குமப்பூ கீறலை தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் 2 முறை முகம், கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள், கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைந்து முகம் ஒரே மாதிரியான நிறத்தில் மின்னும்.

2 டீஸ்பூன் பாலில், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பைப் போட்டு ஊறவையுங்கள். இதனுடன் 10 குங்குமப்பூ கீறலை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொய்ந்த முகத்தை தூக்கி நிறுத்தி, 'டல்'லான முகமும் டாலடிக்கும்.

10 குங்குமப்பூ கீறலுடன் 4 பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து முகத்தில் பூசி 'பேக்' போட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவர முகம் பளபளப்புடன் இழந்த அழகை மீட்டுத் தரும்.

கால் கப் குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்து போல் போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து, முகம் அன்று மலர்ந்த தாமரையாகப் பூத்துக் குலுங்கும்.

நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன், குங்குமப்பூ கீறல்-15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். வாரம் இருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் வராமல் தடுக்கும்.

பூப்பெய்த வைக்கும் குங்குமப்பூ!

கர்ப்பிணி பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் 2 குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர, இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

பிரசவ வலி வந்தும் குழந்தை வெளியில் வராமல் இருக்கும்போது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும்.

குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து, உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் வெளியேறும்.

உடல் சூட்டினால் சிலருக்கு ஆசனவாய் புண்ணாகியிருக்கும். குங்குமப்பூவை தேன் சேர்த்து அரைத்து தடவினால், குணமாகும்.

சிறிது குங்குமப்பூவில் தாய்ப்பால் விட்டு அரைத்து கண்களில் விட்டால், கண்வலி குணமாகும்.

அல்சரினால் குடல் புண்ணாகி வெந்து போயிருக்கும். காய்ச்சிய பாலில் 4 குங்குமப்பூ கீறலை சேர்த்து ஒரு மண்டலம் குடித்து வர, புண் ஆறிவிடும்.

25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.
Read more >>

கீழாநெல்லி மூலிகையை பயன்படுத்தும் முறைகள்

 

கீழாநெல்லி

இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் அமாரஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசியே

கீழாநெல்லியானது ஒவ்வொரு மொழியிலும் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

இந்தி: ஜராமலா, நிரூர், ஜங்லி யாம்பலி
வங்காளம்: புய்யாம்லா, சதாஹஸிர்மனி
குஜராத்தி: போன்யா அன்மலி
கன்னடம்: கிலநெல்லிக்கிடா, நெலநெல்லி
தமிழ்: கீழாநெல்லி, கீழ்க்காய்நெல்லி
மலையாளர்: கீழாநெல்லி, கீர்க்காநெல்லி
தெலுங்கு: நெல உசிரிகா
பீகார்: முய்யாரா, முலிகோஆ, காந்தாரா
ஓரியா: புய் ஆவோலா, பேடியான்லா.

சமஸ்கிருதம்: பூமியாம்லகி, தாமலகீ

இதன் முழுப்பகுதியும் நேரடியாகவே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்கள்:

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், 4-methoxy secyrinine, நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதனை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

உண்ணும் அளவு: சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம். தூள் : 3-6 கிராம்.

பயன்படுத்தும் முறைகள்

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.
Read more >>

Popular Posts