Followers

Tuesday, 10 April 2012

கோடைக்கு சருமம் பாதுகாக்கும் மாம்பழ மேக்கப்!

 
 
கோடை வந்து விட்டால்... சருமப் பாதுகாப்புக்கு பெண்கள் ரொம்பவே மெனெக்கெடுவார்கள். நிறைய தண்ணீர், பழங்கள்... இவைதான் கோடைக்குக் கவசம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். குறிப்பாக, பழங்கள் முகப்பொலிவுக்கு சிறந்த உபகரணம்.

கிவி, பப்பாளி, மாம்பழம் என்று சீஸன் பழங்களை வைத்தே சருமப் பாதுகாப்பு பெறலாம். கோடையில் மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டே முகப்பொலிவைப் பெறுவது பற்றி இங்கே பார்ப்போமா!
வைட்டமின் 'ஏ' மற்றும் பவர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், கோடை வெயிலில் இருந்து சருமத்தைக் காத்து, பூரண புதுப்பொலிவு கொடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எண்ணெய்ப் பசையை சமன் செய்வதோடு, முகத்தில் வறட்சியை விரட்டும் வித்தையும் அதனிடம் உண்டு.
இத்தனை அம்சங்கள் கொண்ட மாம்பழத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஸ்டெப் கொண்ட 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்' செய்து கொள்வது... கோடையிலும் உங்களை குதூகலத்துடன் வைத்திருக்கும்.
இதற்கென இருக்கும் ஸ்பெஷல் க்ரீம்களுடன் மாம்பழத்துண்டுகளையும் பயன்படுத்தித்தான் இந்த ஐந்து ஸ்டெப்பையும் மாடல் சந்தனாவுக்கு இங்கே செய்யப் போகிறோம்.
முதல் ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் க்ளென்ஸர்: மாம்பழத்துண்டுகள் மற்றும் மேங்கோ ஃபேஸ் க்ளென்ஸர் க்ரீமைக் கொண்டு, 5 நிமிடங்கள் முகத்தில் ஃபேஷியல் செய்தால், கோடை வெயிலால் கறுப்பாக மாறும் முகம், தன் இயல்பான நிறத்துக்கு மாறும்!
இரண்டாவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் ஸ்க்ரப்: இதற்கென இருக்கும் மேங்கோ ஃபேஸ் ஸ்க்ரப் க்ரீம் மற்றும் மாம்பழத்துண்டுகளைச் சேர்த்து, முகத்தில் ஃபேஷியல் செய்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். இது, முகத்தின் தோலில் இறந்து போயிருக்கும் செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்கும். சருமத்தையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும்!
மூன்றாவது ஸ்டெப், ஸ்டீமிங்: இரண்டாவது ஸ்டெப்பை முடித்ததும், இரண்டு நிமிடங்களுக்கு இதைச் செய்தால்... நீராவி மூலமாக சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேற்றப்படும். இந்த முயற்சியை அடிக்கடி மேற்கொள்ளும்போது... பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
நான்காவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் மசாஜ்: தோல் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வதற்காகவே இந்த ஸ்டெப். மேங்கோ ஃபேஸ் மசாஜ் க்ரீம் கொண்டு மசாஜ் செய்வதால், முகம் மிருதுவாகவே இருக்கும். அதேபோல முகத்தின் ஈரப்பதத்தையும் சம அளவில் இது பராமரிக்கும். சுமார் 15-20 நிமிடங்கள் வரை இதைச் செய்யலாம். பொதுவாக பருக்கள் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்கு முன்பாக செய்த ஸ்டீமிங் காரணமாக திறந்திருக்கும் சருமத் துவாரங்கள் வழியாக மேங்கோ ஃபேஸ் மசாஜ் க்ரீம் உள் இறங்குவதால்... நல்ல ரிசல்ட் கிடைக்கும். மாம்பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலமாக, கண் புருவங்களில் கருவளையங்கள் வராமல் தடுக்கப்படும்.
ஐந்தாவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் பேக்: மாம்பழத் துண்டுகளோடு... மேங்கோ ஃபேஸ் பேக் கிரீமை முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசினால்... பிரமாதமாக முகம் ஜொலிக்கும்! முகத்தின் தோலை ஃப்ரெஷ்ஷாக மாற்றி வைப்பதோடு, பகலில் வெளியில் போகும்போதும்கூட கறுப்பாக மாறாமல் தடுக்க இந்த ஸ்டெப் உதவும். கோடை வெயிலால் ஏற்படுகின்ற வறட்சியை பேலன்ஸ் செய்வதற்காக ஃபைனல் டச்-அப் என்கிற வகையிலும் இந்த ஃபேஸ் பேக் பயன்படும்.
35 வயதைக் கடந்த பெண்கள், தோலின் கடினத்தன்மை மற்றும் முதிர்ச்சி போன்ற காரணங்களுக்காக கூடுதலாக, ஃபேஸ் பேக் ஸ்டெப்பை இரண்டு தடவை செய்துகொள்வது கூடுதல் பலன் கொடுக்கும்!
இதையெல்லாம் மாடல் சந்தனாவுக்கு செய்து முடித்த பிறகு, ''வாவ்... இட்ஸ் ட்ரூ!'' என்று தன் முகத்தைப் பார்த்து தானே ஏக பரவசமானார்!
இந்த ஃபேஷியலை வீட்டிலேயே செய்துகொள்ள நினைப்பவர்கள்... மாம்பழத் துண்டுகளுடன் தேவைக்கேற்ப தேன், பால், சர்க்கரை, ஆல்மண்ட் ஆயில் கலந்து க்ரீமைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஸ்டெப்பை ஸ்டெப்பாக அதைப் பயன் படுத்தலாம்.
இந்த 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்'டை கோடை முடியும் வரை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால்.. கொளுத்தும் வெயிலுக்கு 'டோன்ட் கேர்' சொல்லிவிடலாம். கூடவே, ஜூலை மலர்களைப் போல புத்துணர்வாகவே இருப்பீர்கள்... அக்னி நட்சத்திரத்திலும்!

No comments:

Post a Comment

Popular Posts