Followers

Tuesday 17 April 2012

நீரிழிவு நோயா சோதனை செய்வது பாதுகாப்பானது



எனக்கு நீரிழிவு இருக்கிறது. வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வது வழக்கம். கடந்த மாதம் செய்த போது, என் இ.சி.ஜி. ரிப்போர்ட் பார்த்த மருத்துவர், எனக்கு ஏற்கனவே மாரடைப்பு வந்திருப்பதாகச் சொன்னார். ஆனால், நான் எந்த அறிகுறியையும் உணரவில்லை. எனக்கே தெரியாமல் எப்படி மாரடைப்பு வந்திருக்க முடியும்?
பதில் சொல்கிறார் திருச்சி இதய சிகிச்சை நிபு ணர் செந்தில்குமார் நல்லுசாமி
நடுமார்பில் அழுத்துகிற மாதிரி வலி வந்து, அது இடதுகைக்குப் பரவி, வியர்த்து ஊற்றுவதுதான், மாரடைப்புக்கான அடிப்படை அறிகுறி. சிலருக்கு வலியின்றி சுவாசிப்பதில் பிரச்னையுடனோ, படபடப்புடனோ, மயக்கத்துடனோகூட மாரடைப்பு வரலாம். உங்களைப் போன்ற நீரிழிவுக்காரர்களுக்கு வலியை உணரும் சக்தி குறைவு என்பதால், எந்த அறிகுறிகளும் இல்லாமலும் மாரடைப்� ��ு வரலாம். அதை 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்கிறோம்.
மாஸ்டர் செக்கப் செய்கிறவர்கள், அதில் இ.சி.ஜி&யும் தவிர்க்கமுடியாத ஒரு சோதனையாக இருப்பதால், செய்து பார்க்கிறார்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா, புதிதாக வந்ததா, ஏற்கனவே வந்ததா என்று தெரிந்துகொள்ளலாம். அடுத்தகட்டமாக 'எக்கோ கார்டியோகிராம்' எடுக்கலாம். இதயத்துக்கான ஸ்கேன் அது. உங்களுக்கு வந்த மார� �ைப்பின் தன்மை, அதன் விளைவாக இதயத் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா, 'பம்ப்பிங்' திறன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என சகலத்தையும் தெரிந்து கொள்ளலாம். அடுத்து ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதைத் தெரிந்துகொள்ள 'ஆஞ்சியோகிராம்'.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பருமன் உள்ளவர்கள், புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், பெண்களில் கர்ப்பப் பையை அகற்றியவர்கள், மெனோபாஸ் வந்தவர்கள் ஆகியோர் 3 மாதங்களுக்கொரு முறை இதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தமும் மாரடைப்புக்கான முக்கிய காரணம் என்பதால், மேற்சொன்ன பட்டியலில் வராத, 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் வருடம் ஒரு முறை 'டிரெட ்மில்' சோதனை செய்வது பாதுகாப்பானது.

No comments:

Post a Comment

Popular Posts