Followers

Tuesday, 24 April 2012

மங்குஸ்தான் பழம்




      மங்குஸ்தான் பழம் இது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்தியாவில் தென்னிந்தியாவில் மலைப்பகுதியில் தோட� ��டப்பயிராக இது விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இது விளைகிறது.
   மங்குஸ்தான் பழம் மலைப் பகுதியில் விளையக்கூடியவை, இந்தப்பழத்தின் தோல் தடிப்பாக இருக்கும். பழம் நீலம் கலந்த சிவப்பு கலரில் இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் நுங்கு போன்று நான்கு அல்லது ஐந்து, ஆறு சுளைகள் சுளைகள் இருக்கும். � �ுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
    மங்குஸ்தான் பழம் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.  இருமலை தடுக்கும் சூதக வலியை குணமாக்கும் தலைவலியை போக்கும் நாவறட்சியை தணிக்கும்.
மங்குஸ்தான் பழத்தில்
நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்ப� � - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி
   உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம். இது கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு பயனடையவும். மே, ஏப்ரல், ஜீன், ஜீலை மாதங்களில் கிடைக்� �ும். இது குற்றால சீசன் மாதங்களில் அங்கு அதிகமா விற்பனையாகும்.
இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

Read more >>

தாட்பூட் பழம் (பேசன் ஃபுரூட்)




     தாட்பூட் பழம், காட்டில் உள்ள மரங்களில் இதன் கொடி படர்ந்து இருக்கும் காய்கள் காய்த்து பழம் பழுக்கும். நல்ல சுவையுடன் இருக்கும்.      தாட்பூட் என ்ற பெயரில் அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த  பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாகச் செயல்படுகிறது.     
 
தாட்பூட் என்ற பெயரில் பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் பேசன் ஃபுரூட் என அழைக்கப்படுகிறது.    பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்த இப்பழ� ��்தை ஆங்கிலேயர்கள்தான் பேசன் புரூட் என்ற பெயரில் அழைத்தனர். பேசன் என்றால் ஆசை என்று பொருள். பார்த்தவுடன் இப்பழத்தை ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதாலேயே இப்பழம் பேசன் ஃபுரூட் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு.    
 
பேசி புளோரா தாவரக் குடும்பத்தில் உலகில் 400 வகைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்குமென்பதால் கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழமாக இது அமைந்துள்ளது.    தற்போது கருங்குரங்குகளுக்குத் தேவைப்படும் உணவு வகைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இவ்வகை இனம் அழிவின் விளிம்பிலுள்ளது தனிக்க� ��ை.    அமெரிக்காவில் வெப்ப மண்டல பகுதிகளிலும், பிரேசிலில் அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்காவில் பராகுவே உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வகைப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. அதைத் தவிர இலங்கை, கென்யா, கேமரூன், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பழங்கள் கிடைக்கின்றன.   
 
வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். மேலை நாடுகளில் இப்பழத்திலிருந்து சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ், கார்டியல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.      இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுவதாக மக்கள் நம்புவதால் இதற்கு அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு உள்ளது. இப்பழத்தின் சிறப்பிற்காகவே கோவாவில் பேசியோ என்ற பெயரில் மதுபான மும் தயாரிக்கப்படுகிறது.    வழக்கமாக செடிகளில் மலரும் மலர்களில் சூலகம் மலருக்குள்ளேயே அமைந்திருக்கும். ஆனால், இந்த ரகத்தில் மட்டும் சூலகம் இதழ்களுக்கு வெளியே தனியே வளர்ந்திருக்கும். 
 
நீலகிரி மாவட்டத்தில் பேசி புளோரா கல்கரேட்டா, எடிபிள், போட்டிடா, லென்னாட்டி, மொல்லிசிமா என்ற ரகங்களைக் கொண்டுள்ளது. சில இடங்களில் இ� ��்பழங்கள் உருண்டையாகவும், சில இடங்களில் கூம்பைப் போலவும் வளரும். இவை செடியாக இல்லாமல் கொடியாக வளரும் தன்மை கொண்டவை என்பதால் மரங்களின் மீது படர்ந்திருக்கும். இதன் காரணமாகவே குரங்கு இனங்கள் இப்பழங்களை விரும்பி உண்கின்றன.   இப்பழத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைக் கருதி குன்னூரிலுள்ள அரசு தோட்டக்கலை பழவியல் நிலையத்தில் பேசன் ஃபுரூட் பழச்சாறு விற்� ��னை செய்யப்படுகிறது. இதைத்தவிர பழக்கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
 
நன்றி- தினமணி...

Read more >>

Thursday, 19 April 2012

அப்பெண்டிசைடிஸ் - குடல் வால் நோய்



நண்பர்களே,


இன்னிக்கு நாம பார்க்க போறது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான்.  ஆனா, நாம போன பதிவுல பார்த்த செல்லுலோஸ் மற்றும் செல்லுலேஸ் என்சைமோட தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான தகவல்.

Appendicitis - அப்பெண்டிசைடிஸ் - குடல் வால் நோய்

நாம எல்லாரும் இதை பத்தி கேள்விப்பட்டு இருப்போம். தீராத வயிறு வலின்னு ஹாஸ்பிடல் போயிட்டு அப்பெண்டிசைடிஸ் அப்படின்னு சொல்லி ஆப்பரேசன் பண்ணிக்கிட்டவங்க நெறைய பேரு. அப்பெண்டிசைடிஸ் பிரச்சனையினால உயிரையே விட்டவங்களும் இருக்காங்க.  

ஸோ.... அதென்ன அப்பெண்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் நோய்...? உயிரே போகற அள வுக்கு அது என்ன அப்படி ஒரு முக்கியமான விஷயம்? தெரிஞ்சிக்க மேல போகலாம்.


நம்ம வயித்துல சிறு குடலும் பேரு குடலும் இணையிற இடத்தில ஒரு சின்ன வால் மாதிரி நீட்டிக்கிட்டு இருக்கறது தான் குடல் வால் ஆங்கிலத்துல அப்பெண்டிக்ஸ் (appendix).





குடல்ல இருந்து வால் மாதிரி வெளியே நீட்டிக்கிட்டு இருக்கறதால அதுக்கு இந்த பேரு வந்திருக்கலாம்ன்னு அனுமானிப்போம். இது நம்ம உடல்ல இருக்கிற ஆனா நாம பயன்படுத்தாம  இருக்கிற ஒரு உறுப்பு. இதை பத்தி ஒரு சுவாரஸ்யமா� � தகவல்கள்  தான் இன்னிக்கி நாம பாக்க போறது. 

நாம எல்லாரும் அடிக்கடி சொல்ற அல்லது நம்மக்கிட்ட சொல்லப்படற ஒரு விஷயம், எந்த ஒரு பொருளையும் நாம ரொம்ப நாள் பயன்படுத்தாம வெச்சிருந்தா, அது கெட்டு போயிடும் இல்லை ரிப்பேர் ஆயிடும். அது பொருளுக்கும் மெசினுக்கும் மட்டும் இல்லை, நம்ம உடலுக்கும் பொருந்தும். எந்த ஒரு உறுப்பு நாம முழுதுமா பயன்படுத்தாம இருக்கிறோமோ, அந்த உறுப்பு நம்மளோட அடுத்த பரிணாம வளர்ச்சியின்போது சின்னதாவோ, இல்ல காணாமலோ போயிட வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி, எந்த உறுப்பை நாம தொடர்ந்து பயன்படுத்தரமோ அது நம்மளோட அடுத்த பரிணாம வளர்ச்சியில பெருசா வளரலாம். இப்போ இருக்கிற வாழ்க்கை சூழலை வெச்சி பார்க்கும்போது அப்படி நம்மளோட அடுத்த பரிணாம வளர்ச்சியில பெருசா வளரும்ன்னு எதிர்ப� ��பார்க்கிற ஒன்னு நம்மளோட மூளை. காணாம போயிடும்ன்னு எதிர்ப்பார்க்கிற ஒன்னு நம்மளோட தலைமுடி.


அப்படி காலம் காலமா மனிதன் பயன்படுத்தாம விட்டு சைஸ்ல சின்னதா போயிட்ட ஒரு உறுப்பு தான் இந்த குடல் வால் எனப்படும் அப்பெண்டிக்ஸ். ஆனா, இப்பவும் இது விலங்குகள்ல பயன்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு. மனிதன் ஒரு முழு மனிதனாக பரிணாம வளைச்சி அடையாம விலங்காகவே இருந்தப்பவும், பி� �்னாடி விலங்குகள் மாதிரி காடுகள்ள வாழ்ந்தப்பவும் இந்த உறுப்பு முழுமையா பயன்பாட்டில தான் இருந்தது. 

அதாவது, அப்போ இருந்த விலங்குகளும், விலங்குகள் மாதிரி இருந்த மனிதனும் எந்த ஒரு உணவையும் சைவம், அசைவம் ரெண்டையும் சமைக்காம அப்படியே சாப்பிட்டு இருந்தாங்க. இதில அசைவ உணவில  எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா சைவ சாப்பாட்டுல ஒரு பிர� ��்சனை இருந்தது. அசைவம் எனப்படும் இறைச்சி என்பது விலங்கு செல்களால் ஆனது. சைவம் என்பது தாவரங்கள். இந்த தாவர செல்கள்ள, விலங்கு செல்களில் இல்லாத ஒன்னு எக்ஸ்ட்ராவா இருக்கு. அதுதான் பிரச்னைக்கு காரணம். அது.... செல் சுவர்.

இந்த செல் சுவர் அப்படிங்கற மேட்டர் விலங்கு செல்கள்ள இல்லாததால, நம்ம ஜீரண மண்டலம் அதுகிட்ட இருக்கிற என்சைம்களை வெச்சே ஈசி� ��ா ஜீரணம் பண்ணிடும். ஆனா, இந்த செல்சுவர் கிட்ட நம்ம ஜீரண மண்டலத்தோட ஜம்பம் பலிக்காது. ஏன்னா, செல் சுவர் செல்லுலோஸ் அப்படிங்கிற பாலி- சாக்ரைடால (போன பதிவுல தான் பார்த்தோம்)  ஆனது.

இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண செல்லுலேஸ் அப்படிங்கற ஸ்பெசல் என்சைம் வேணும். இந்த ஸ்பெசல் என்சைமை உற்பத்தி செய்யக்கூடிய உறுப்பு தான் இந்த குடல் வால்.  மத்த எ� ��்சைம்கள் இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண முடியாததற்கு காரணம் செல்லுலோஸின் குளுகோஸ் மூலக்கூறுகள் ஒன்னுக்கொன்னு பிணைக்கப்பட்டு இருக்கிற பிணைப்பு வேறுவிதமானதா இருக்கிறது தான். (போன பதிவுல போட்டிருக்கிற படத்தை எடுத்து பார்த்திங்கன்னா ஸ்டார்ச்லயும் செல்லுலோஸ்லயும் இருக்கிற பிணைப்பு வேறுபடறது தெரியும். இந்தமாதிரி ஒவ்வொரு பிணைப்பும் அதுக்கான தனிப்பட்ட என்சைமால � �ட்டும் தான் உடைக்க முடியும்.

ஓகே...மேட்டருக்கு வருவோம். அப்படி மனிதன் தன்னோட சாப்பாட்டை சமைக்காம சாப்பிட்டு இருந்த அந்த காலத்துல இந்த குடல் வால் தாவர உணவுல இருக்கும் செல்லுலோசை ஜீரணம் பண்ணக்கூடிய செல்லுலேஸ் அப்படிங்கிற என்சைமை உற்பத்தி பண்ணும் வேலையை செய்துட்டு இருந்தது. காலப்போக்குல, நெருப்பை கண்டுபிடிச்ச மனிதன் தன்னோட உணவை சம� ��க்க ஆரம்பிச்சதும் இந்த என்சைமுக்கு வேலை இல்லாம போயிடுச்சி. சமைக்கும்போது அந்த வெப்பத்துல, செல்லுலோஸ் தானாவே உடைந்து விடும்.

பல ஆயிரகணக்கான வருசங்கள் போனபிறகு, என்ன ஆச்சின்னா, இந்த குடல் வால் படிப்படியா வேலையிழந்து, தன்னோட உருவம் இழந்து கடைசியா தான் ஒரு காலத்துல இருந்ததுக்கு அடையாளமா, இன்னமும் சின்ன வால் மாதிரி அந்த இடத்துலேயே ஒட ்டிக்கிட்டு இருக்கு. இப்போ நாம சமைக்காம சாப்பிடற சில தாவர உணவுகள்ள இருக்கிற செல்லுலோஸ் ஜீரணம் ஆகாம வெளியேற்றப்படுது. ஆனா, விலங்குகள் இன்னமும் தாவர உணவை அப்படியே சாப்பிடறதால இன்னமும் இந்த குடல் வால் அப்படியேதான் இருக்கு. (மேட்டர் சூப்பரா இருக்கா....? )

அப்பண்டிசைடிஸ் அப்படிங்கறது என்னன்னா,  இந்த குடல் வால் சிறு குடலும் பெரும் குடலும� � இணையிற இடத்துல இருக்கறதால, நம்ம குடலுக்குள்ள இருக்கிற கழிவு பொருள்கள்ல இருந்து சில சமயம் நோய் கிருமிகள் குடல் வாலுக்குள்ள போய் தொற்று நோயை உண்டாக்கி வீக்கம், வலியை குடுக்கும். ஒரு கண்டிசனுக்கு அப்புறம் இந்த குடல் வால் பெருசா வீங்கி வெடிக்கிற நிலைமைக்கு வந்திடும்.

நாம கண்டிப்பா அறுவை சிகிச்சை மூலமா இந்த நோய் தொற்றின பகுதியை நீக்க� ��யே ஆகணும். இல்லன்னா, அது உடைஞ்சி, குடலுக்குள்ள இருக்கிற அத்தனை நோய் கிருமிகளும் ரத்தத்துல கலந்து, நம்ம மொத்த சிஸ்டமே ஸ்தம்பிச்சி உயிரே போயிடும். இது தான் அப்பண்டிசைடிஸ்.
thanks:http://uyirnutpam.blogspot.
Read more >>

Tuesday, 17 April 2012

நீரிழிவு நோயா சோதனை செய்வது பாதுகாப்பானது



எனக்கு நீரிழிவு இருக்கிறது. வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வது வழக்கம். கடந்த மாதம் செய்த போது, என் இ.சி.ஜி. ரிப்போர்ட் பார்த்த மருத்துவர், எனக்கு ஏற்கனவே மாரடைப்பு வந்திருப்பதாகச் சொன்னார். ஆனால், நான் எந்த அறிகுறியையும் உணரவில்லை. எனக்கே தெரியாமல் எப்படி மாரடைப்பு வந்திருக்க முடியும்?
பதில் சொல்கிறார் திருச்சி இதய சிகிச்சை நிபு ணர் செந்தில்குமார் நல்லுசாமி
நடுமார்பில் அழுத்துகிற மாதிரி வலி வந்து, அது இடதுகைக்குப் பரவி, வியர்த்து ஊற்றுவதுதான், மாரடைப்புக்கான அடிப்படை அறிகுறி. சிலருக்கு வலியின்றி சுவாசிப்பதில் பிரச்னையுடனோ, படபடப்புடனோ, மயக்கத்துடனோகூட மாரடைப்பு வரலாம். உங்களைப் போன்ற நீரிழிவுக்காரர்களுக்கு வலியை உணரும் சக்தி குறைவு என்பதால், எந்த அறிகுறிகளும் இல்லாமலும் மாரடைப்� ��ு வரலாம். அதை 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்கிறோம்.
மாஸ்டர் செக்கப் செய்கிறவர்கள், அதில் இ.சி.ஜி&யும் தவிர்க்கமுடியாத ஒரு சோதனையாக இருப்பதால், செய்து பார்க்கிறார்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா, புதிதாக வந்ததா, ஏற்கனவே வந்ததா என்று தெரிந்துகொள்ளலாம். அடுத்தகட்டமாக 'எக்கோ கார்டியோகிராம்' எடுக்கலாம். இதயத்துக்கான ஸ்கேன் அது. உங்களுக்கு வந்த மார� �ைப்பின் தன்மை, அதன் விளைவாக இதயத் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா, 'பம்ப்பிங்' திறன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என சகலத்தையும் தெரிந்து கொள்ளலாம். அடுத்து ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதைத் தெரிந்துகொள்ள 'ஆஞ்சியோகிராம்'.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பருமன் உள்ளவர்கள், புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், பெண்களில் கர்ப்பப் பையை அகற்றியவர்கள், மெனோபாஸ் வந்தவர்கள் ஆகியோர் 3 மாதங்களுக்கொரு முறை இதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தமும் மாரடைப்புக்கான முக்கிய காரணம் என்பதால், மேற்சொன்ன பட்டியலில் வராத, 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் வருடம் ஒரு முறை 'டிரெட ்மில்' சோதனை செய்வது பாதுகாப்பானது.

Read more >>

Popular Posts