Followers

Thursday 29 December 2011

செயலிழந்த மூளைக்கு பேஸ்மேக்கர் கருவி கருவியை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர்

 
 
இருதய கோளாறு உடையவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக `பேஸ் மேக்கர்' கருவி பொருத்துவது வழக்கம். இதுபோல, மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவியை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


ஜெய்னே என்ற ஒரு பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட சிறிய பாதிப்பால் உடல் தசை முழுவதும் செயல் இழந்தது. இதை எம்.ஆர்.. மூலமாக நரம்பியல் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஜெய்னே மண்டை ஓட்டில் 8 செ.மீ. அளவுக்கு துளையிட்டு மூளையில் எலக்ட்ரோடு எனப்படும் இரண்டு `பேஸ் மேக்கர்' கருவிகளை பொருத்தினார்கள். இந்த அசாத்தியமான அறுவை சிகிச்சை காரணமாக, மீண்டும் பழைய நிலைமைக்கு ஜெய்னே திரும்பி உள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை முழுவதும் எம்.ஆர்.. ஸ்கேன் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மிகக் கவனமாக நடத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின் ஜெய்னே, "பழைய ஆளாக திரும்புவேன் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது, என்னுடைய வாழ்க்கையை திரும்ப பெற்றுள்ளேன்'' என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்

No comments:

Post a Comment

Popular Posts