Followers

Tuesday, 3 January 2012

ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.

 
 
 
இரவு நேரங்களில்தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவுசெரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில்சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம்என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
பசுவின் தயிரைகொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்தநினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிககொழுப்பை உடையது.சில வீடுகளில்குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரேவகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டுவாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பலகுடும்பங்களில் வறுமைக்கு எமன்.
அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசுஎன்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும்பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால்பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரைபூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
விளக்குவைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல்எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும்புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத்தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
தயிர் சேர்க்கும்குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல்இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்றுஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரைதயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களேஅப்படி!
மதிய உணவுக்குதயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன்தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில்அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால்பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும்குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிபயாடிக்மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மைசெய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக்சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும்என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவுஉதவி செய்யும்.

No comments:

Post a Comment

Popular Posts