Followers

Tuesday, 20 December 2011

பேனை விரட்டும் பேய்த்துளசி!

 
 
நாய்த்துளசி நாம் பரவலாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். பேய்த்துளசி கேள்விப்பட்டிருக்கிறோமா?
நாய்த்துளசி, சங்கரத்துளசி, பேய்த் துளசி மற்றும் கஞ்சாங்கோரை என்பன எல்லாம் ஒரே மூலிகையே. இந்தத் தாவரத்தின் உயிரியல் பெயர்: ளிசிமிவிஹிவி சிகிழிஹிவி. லிகிவிமிகிசிணிகிணி. என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவும் துளசிக் குடும்பத்தைச் சேர்ந்ததே.

இதன் இலை, விதை மற்றும் பூ ஆகிய பாகங்கள் மருத்துவப் பயன்பாடுகள் நிறைந்தவை.

கஞ்சாங்கோரை ஒரு சிறு செடியினம். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய தன்மை உடையது. எதிரடுக்கில் அமைந்த இலைகளை உடையது, இவ்விலைகள் நல்ல மணமுடையது. கதிர் போல மின்னும் அழகிய பூங்கொத்துகளைக் கொண்டது. மழைக் காலங்களில் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே அடர்த்தியாக வள ர்கிறது. விதை மூலம் இனவிருத்தி நடைபெறுகிறது.

மருத்துவம் என்று சொல்லும்போது இதன் இலை கோழையை அகற்றும். எல்லா வகையான இருமலையும் போக்கும், உடலில் வியர்வையைப் பெருக்குதல், குளிர்ச்சியான உடலில் வெப்பத்தை அதிகப் படுத்தும், அதன் மூலம் ஆற்றலை அதிகப் படுத்தும், விதை தாதுவெப்பு அகற்றும் தன்மையை உடையது.

பேய்த்துளசி இலைகளில் 25 அல்லது 30 எடுத்து அரைத்துச் சாறு பிழிந்து அச் சாற்றைப் பாலுடன் கலந்து குழந்தை களுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இரு மல், சளி ஆகியவை குணமாகும்.

பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கலந்து குடித்துவரக் கபம் என்னும் மார்புச் சளி கரைந்து சளி வெளியாகும். காசம், இருமல், ஆரம்ப என்புருக்கி ஆகிய நோய் களும் இம்மருந்தால் குணமாகும்.

இலையை நன்கு மைய அரைத்துச் சுண்டைக்காயளவு எடுத்துத் தயிரில் கலந்து காலை, மாலை இரு வேளையும் குடிக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் எல்லாம் பறந்து போகும்.

இதனை இப்படியும் செய்யலாம். இலையை உலர்த்திப் பொடித்
து டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு 5 கிராம் பேய்த்துளசிப் பொடியை 100 மி.லி. வெந்நீரில் ஒரு ஐந்து நிமிடம் ஊறவைத்து பின் வடிகட்டி, சிறிது பாலும் தேவை யென்றால் சிறிதளவு சர்க்கரையும் கலந்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும். மீண்டும் அருகில் வரவும் அஞ்சும்.

மூல நோய் உள்ளவர்களுக்கு இது வலி, நோய் இரண்டையும் போக்கும் அரு மருந்து. இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் மூலம் காணப் படும் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் வலி, அரிப்பு ஆகியவை நிர்மூலம் ஆகி விடும்.

சொறி, சிரங்கு உள்ள சிலர் பேய் போல எப்போதும் உடலைச் சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இதற்குப் பேய்த் துளசி இலையை அரைத்துத் குளிக்கும் போது உடலில் தடவிக் குளித்தால் இதமாக இருப்பதுடன் சொறி, சிரங்கு முற்றிலும் தீரும்.

கஞ்சாங்கோரை இலைப் பொடி 10 கிராம், மிளகுத்தூள் 1 கிராம் சேர்த்து வெந்நீரில் கலந்து கொடுக்க எலும்புருக்கி நோய் குறையும்.

சிலருக்கு தலையில் மட்டுமல்ல உடலி லும் பேன் தொல்லை காணலாகும். எப் போதும் தலையிலும் உடலிலும் கை களால் பிடில் வாசித்துக் கொண்டே இருப் பார்கள். சிலர் கைகளில் கிடைக்கும் கத்தி உட்பட எல்லா விதக் கருவிகளையும் பயன்படுத்தி உடலில் இசை மீட்டுவார்கள். இவர்கள் பேய்த்துளசிப் பூவுடன் சிறிது வசம்பு சேர்த்து அரைத்துத் தலையிலும் உடலிலும் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் ஒரு வாரத்தில் பேன் தொல்லை ஒழியும்.

இலக்கியச் செய்திகள்

'ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு?' என்னும் எட்டாம் நூற்றாண்டில் தோன்றி மருத்துவ நூலில் இச்செடியின் குறிப்பு காணலாகிறது.

வழக்கம் போல ஒரு சுவையான செய்தி என்னவென்றால், தமிழகத்தில் ஆதிகாலத் தில் தயாரிக்கப்பட்ட மதுவில், அதாவது 'அதியனும் ஔவையும் மாந்தி மகிழ்ந் தார்கள்' என்று வெவ்வேறு குரல்களில் இன்றளவும் ஒலிக்கப்படும் மதுவில் ஒரு மூலக்கூறாக இந்தக் கஞ்சாங்கோரை பயன்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts