Followers

Thursday, 29 September 2011

உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்:

 
http://www.daviddarling.info/images/muscles_human_body_front.jpgநம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம்... இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்.. (ஆரோக்கிய உணவு முறைகள் என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்)
முதல் உணவு:
ஓட்ஸ்:
தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனே உடலுக்கு கிடைக்கிறது.
உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் "அவினின்" என்ற இரசாயனப் பொருளும் இருக்கிறது. இதனால் உடலும் உள்ளமும் உடனடியாகச் சக்தி பெருகிறது.
இந்த ஓட்ஸீனை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.

வைட்டமின் "சி" நிறைந்த உணவுகள்:
முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த "சி" உள்ளது.
உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் "சி" சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.
நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது வைட்டமின் "சி"
இதனை நாம் ஆரஞ்சு சாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் "சி" அதிகம் உள்ளது.
இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம்.
காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் "சி" இருக்கிறது.
நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த கொண்டகடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும்.
முட்டைகோஸ் சூப், பாசிப்பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்ச பயிறு சாலட் இதிலும் அதிகமாக வைட்டமின் "சி" அதிகமாக இருக்கு.
தினமும் காலை சூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.

தண்ணீர்:
தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலும் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்..
தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.
தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிவிடும்
ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.
பார்லி தண்ணீர்:
பார்லி அரிசியில் மூளைக்கு புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. நரம்புகளைப் பலப்படுத்தும் "பி" வட்டமினும் உள்ளது. பார்லியைக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை பாட்டிலில் வைத்து உடலில் சோர்வு ஏற்படும் பொழுது ஒரு டம்ளட் பார்லி தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் கலந்தவுடன் உடலின் குளூக்கோஸ் அளவு உயர்ந்து ஞாபகசக்தி அதிகரிக்கும்... மிகவும் புது உற்சாகத்துடன் வேலை செய்வதனை நீங்களே உணர்விகள்
ராகிமாவு:
இதில் கால்சியம் அதிகம். .. இதனை தினமும் ஒரு வேலை சாப்பிட்டுவந்தால் உடலுக்கு தேவையான சக்தியினை இது தருகிறது... கடினமான உழைப்பாளிகள் காலையிலும் மாலையிலும் 2 கப் கேழ்வரகுக் கஞ்சி, அல்லது 2 கேழ்வரகு ரொட்டியோ சாப்பிடுவதால் குறைந்தது 5 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை இதில் உள்ள கால்சியம் புதுப்பித்து விடுகிறது

No comments:

Post a Comment

Popular Posts