Followers

Friday, 30 September 2011

கொத்தமல்லி உயிரைக் காப்பாற்றும்.

 
 

இரவு பன்னிரண்டுமணி இருக்கும்.அத்தை வீட்டில் இருக்கிறேன்(தந்தைக்கு மூத்தவர்).வயிற்றை புரட்டியதுபோல உணர்வு.பேதியாகி விட்ட்து.கொஞ்ச நேரத்தில் வாந்தி.சிறுவயதில் எங்கெங்கோவிற்பதை வாங்கித்தின்பதுதான்.அடிக்கடி பாத்ரூம் போவது தவிர்க்கமுடியாமல்ஆகிவிட்ட்து.

தூக்கத்தில்இருந்து அத்தை எழுந்துவிட்டார்.சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.கையில் ஒருதம்ளரை கொடுத்து குடிக்கச்சொன்னார்.கொத்தமல்லி வாசனை தூக்கலாக இருந்த்து.பிறகுஅவரே விளக்கினார்.அந்த பானத்தில் கொஞ்சம் சுக்கும்,பனை வெல்லமும்சேர்க்கப்பட்டிருக்கிறது.

மிக இனிப்பானபானம் அது.அதிக அளவில் தனியா(காய்ந்த கொத்தமல்லி விதைகள்)சேர்க்கப்பட்டிருந்த்து.வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகப் போய்விடும் என்றார்.அரைமணி நேரத்தில் எல்லாமும் சரியாகப்போய் விட்ட்து.வயிற்றுப்போக்கு என்பது சிலநேரங்களில் அபாயமான விஷயம்.நீரிழப்பு ஏற்பட்டு விட்டால் உயிர்கூட போய்விடும்.

காலையில்மீண்டும் இன்னொரு முறை அதே பானத்தை கொடுத்தார்.அப்புறம் நல்ல பசி.சோர்வோ,இரவின்பாதிப்போ இல்லை.முழுமையாக குணமாகி விட்டிருந்த்து.இதையெல்லாம் பாட்டி வைத்தியம்என்கிறார்கள்.இப்போது அவ்வளவு மதிப்பும் கிடையாது.உடனடியாக மருத்துவமனையை எட்டமுடியாத நள்ளிரவில்,இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க தெரிந்து வைத்திருந்தார்கள்.

நாளிதழ்களில்படித்த செய்தி ஒன்று ஆச்சர்யத்தை தந்த்து.எனக்கு ஏற்பட்ட் ஃபுட் பாய்சனைகொத்தமல்லி விதை குணப்படுத்தும் என்பதை போர்ச்சுக்கல் நாட்டு விஞ்ஞானிகள்கண்டறிந்திருக்கிறார்கள்.தனியா எண்ணெய்யை கொண்டு செய்த பரிசோதனையில் இந்த முடிவைஎட்டியிருக்கிறார்கள்.

ஆண்டிபயாடிக்மருந்துகளுக்கு கட்டுப்படாமல் வளரும் கிருமிகளை(பாக்டீரியாக்கள்) அழிப்பதும் தெரியவந்திருக்கிறது.உலக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம்இது.மாத்திரைகள் சாப்பிடுவீங்களா? உஷார் என்ற பதிவில் இதைப்பற்றிகுறிப்பிட்டிருக்கிறேன்.பாக்டீரியாவுக்கு எதிராக இப்போது இருப்பது ஆண்டிபயாடிக்தான்.இதுவும்வேலை செய்யாவிட்டால் சிக்கல்.ஆனால் தனியா எண்ணெய் உதவும் என்கிறது ஆராய்ச்சி.

பாரம்பரியஉணவு முறையில் ஆரோக்கியத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்த்து.உதாரணமாகமிளகாய்ப்பொடி தயாரித்தால் தனியா உள்பட ஏராளமான பொருட்கள் அதில்சேர்க்கப்பட்டிருக்கும்.இப்போது நாம் நிறைய இழந்து விட்டோம்.ஆனால் நாம் இழந்துவிட்ட்தை வெளிநாட்டினர் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நமக்கே வேறு வடிவில் அதைதரப்போகிறார்கள்.

பலருக்கும்தெரிந்த பாட்டி வைத்தியங்களை பகிர்ந்து கொண்டால் எதிர்காலத்துக்கு உதவும்.நம்மால்முடியாவிட்டால் வெளிநாட்டினரை ஆராய்ச்சி செய்ய கேட்டுக்கொள்ளலாம்.நம்மிடம்இருந்தும் இல்லாமல் இருக்கிறோம்.முயற்சி செய்தால் இந்தியா பல நல்ல விஷயங்களைஉலகிற்கு அளிக்கும் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Popular Posts