Followers

Thursday, 22 December 2011

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

 
பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் '' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
Read more >>

Tuesday, 20 December 2011

பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரினால் விரைவில் பூப்படையும் சிறுமிகள்!

 
 
ள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகு விரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள். இ ன்றைய இளம் அம்மாக்களை வெகு வாகக் கவலை கொள்ளச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
ஏன் இப்படி ஆகிறது?!

குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவை யெல்லாம் தாண்டி இந்த விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண் குழந்தை களைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.அதைப் பற்றியதான விழிப்புணர்வும் எச்சரிக்கையும் பொது மக்களில் எத்தனை பேருக்கு உண்டோ தெரியவில்லை!

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி சிலர் குழந்தை பிறந்த அன்றே கூட தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஃபீடிங் பாட்டில்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

மகப்பேறு மருத்துவர்கள் பலர் இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது. குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந் திருக்கிறது.

பிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில் கள் மட்டும்தான் என்றில்லை. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள் ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள் இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலி கார்பனேட் பிளாஸ் டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்கி எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை அதிக மாக்குகிறது. இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா? ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களது விந்தணுக் களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

வழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான் இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயது
களி லேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை, பேதைமையை தொலைத்து அதிவேகமாக பூப்படைந்து விடுகிறார்கள். அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் மாயபூதம் இந்த பிஸ்ஃபீனால்கி தான் என்பது பொது மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இந்த இதழில் காண்போமா!

குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக் கான உபயோகப் பொருட்களில் இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிக மாகப் பயன்படுத்தப் படுகின்றன, ஏனெனில்;

மிகவும் லேசானது, எடையற்றது. தரமான பிளாஸ்டிக், உறுதியானது; தோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது; ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது மின்சாரமோ, வெப்பமோ தாக்க இயலாதது; போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கை யில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப் பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி தவிர்ப்பார்கள்?

பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் வேறு பொருட்கள்
வீடியோ சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் etc... etc.

இதன் நீடித்த உழைப்பு; உடையாத் தன்மை; வெப்பம் தாங்கும் தன்மை யினால் இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொரு ட்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.

பிஸ்ஃபீனால் (கி) என்றால் என்ன?

பிஸ்ஃபீனால் கி என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டு மானப் பொருள். இது ஒரு வேதிப் பொருள், இதன் பெயர் 22 பிஸ் 4 ஹைட்ராக்சி ஃபினைல் ப்ரோபேன் (22 Bis4 Hydroxy pheyl propae ).

பாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ் பினால்கி மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்து அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர் பானங்களில் ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கை களும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா?

0?.000000005 (5/100000000) மில்லிகிராம் அளவு அதாவது கோடியில் 5 மடங்கு தான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125 மில்லி கிராம் அளவு பிஸ்ஃபீனால்கி நமக்குத் தெரியாமலே நமது உடலுக்குள் சென்று விடுகிறது.

பிஸ்ஃபீனால்கி என்னவெல்லாம் செய்கிறது?

இது மனிதனின் ஹார்மோன்களை நரம்பியல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது, ஜீன்களின் தன்மையை மாற்றி அமைக்கும் குணமுடையது என்று அறிவியல் சொல் கிறது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் இருந்து கரையும் பிஸ்ஃபீனால்கி பெரியவர் களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

முக்கியமாக பிறந்த குழந்தையிலிருந்து 18 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு பிஸ்ஃபீனால் பாதிப்பு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகரிக்கிறது.

ஏனெனில் 3 மாத குழந்தையின் எடை சுமாராக 6 கிலோ தான். அப்படியெனில் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் கோரமுகங்கள்...

பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில். தண்ணீர் பாட்டிலை சூடான நீரில் கழுவும்போது அல்லது சூடான பாலை ஊற்றும்போது பாலிகார்பனேட் பிளஸ்டிக்கில் உள்ள பிஸ்ஃபீனால்கி கரைந்து பாட்டிலுக்குள் உள்ள உணவில் கலந்து ஊடுருவி குழந்தையின் வயிற்றுக் குள்ளும் நுழைகிறது.

இதன் விளைவு என்ன?

வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை யின் மூளையைப் பாதிக்கிறது
இந்தக் குழந்தைகள் சீக்கிரமே பருவ வயதை எட்டுகின்றன.

தற்காப்பு சக்தியின் சமன் தன்மை தடுமாறுகிறது.

இவர்கள் தங்கள் வாழ்நாளின் பிற் பகுதியில் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

பாதிப்பு?!

பிஸ்ஃபீனால்கி எனும் வேதிப்பொருள் 1938இல் கண்டுபிடிக்கப்பட்டது, இது செயற்கை
ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.இதனால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும்.

பிஸ்ஃபீனால்கி குழந்தைகளின் உடலில் ஈஸ்ட்ரோஜென் போலவே செயல்படும்.

நரம்பு மற்றும் நடத்தை தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.

எதிர்காலத்தில் ப்ராஸ்டேட் (PROSTATE) மற்றும் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லாம் சரி தான்... ஆனால் பாட்டிலில் பிஸ்ஃபீனால்கி உள்ளது என எவ்வாறு கண்டுபிடிப்பதாம் ?

அது ரொம்ப ஈசி தாங்க!

பாட்டிலின் அடிப்பகுதியில் '7' என்ற எண் இருக்கும். ஒரு முக்கோணம் காணப் படும், அதற்கு அருகில் 'PC' (Polycarboate) என்ற எழுத்து இருக்கும், இப்படி குறிப்பிட்டிருந்தால் அந்த பிளாஸ்டிக்கில் பிஸ்ஃபீனால் உள்ளது என்று அறியலாம்.

முக்கோணத்திற்குள் காணப்படும் எண் ப்ளாஸ்டிக்கின் தரம் பற்றி குறிப்பிடும், இவற்றில் 1, 2, 23 எண்களிருப்பின் அவை மிகவும் தரம் குறைந்தவை.

3, 5, 7 எண் இருந்தால் பிளாஸ்டிக்கின் தரம் பரவாயில்லை.

சரி குழந்தைகளை பிஸ்ஃபீனால்கி யின் தாக்குதலில் இருந்து எப்படிக்காப்பாற்றுவது?!

கண்ணாடி பாட்டில்களைப் பயன் படுத்தலாம்.

தொடர்ந்து பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் பாட்டில் களை வெறும் சோப்பு நீரில் மட்டும் கழுவ வேண்டும். டிடர்ஜென்ட் அல்லது டிஷ்வாஷ் பார் பயன்படுத்தக் கூடாது.

பாட்டில் சூடாவதைத் தவிர்க்க வேண்டும். பாட்டிலை சூடான நீரில் கழுவுவதோ, வெயிலில் காயவைப்பதோ கூடாது.
Read more >>

பேனை விரட்டும் பேய்த்துளசி!

 
 
நாய்த்துளசி நாம் பரவலாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். பேய்த்துளசி கேள்விப்பட்டிருக்கிறோமா?
நாய்த்துளசி, சங்கரத்துளசி, பேய்த் துளசி மற்றும் கஞ்சாங்கோரை என்பன எல்லாம் ஒரே மூலிகையே. இந்தத் தாவரத்தின் உயிரியல் பெயர்: ளிசிமிவிஹிவி சிகிழிஹிவி. லிகிவிமிகிசிணிகிணி. என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவும் துளசிக் குடும்பத்தைச் சேர்ந்ததே.

இதன் இலை, விதை மற்றும் பூ ஆகிய பாகங்கள் மருத்துவப் பயன்பாடுகள் நிறைந்தவை.

கஞ்சாங்கோரை ஒரு சிறு செடியினம். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய தன்மை உடையது. எதிரடுக்கில் அமைந்த இலைகளை உடையது, இவ்விலைகள் நல்ல மணமுடையது. கதிர் போல மின்னும் அழகிய பூங்கொத்துகளைக் கொண்டது. மழைக் காலங்களில் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே அடர்த்தியாக வள ர்கிறது. விதை மூலம் இனவிருத்தி நடைபெறுகிறது.

மருத்துவம் என்று சொல்லும்போது இதன் இலை கோழையை அகற்றும். எல்லா வகையான இருமலையும் போக்கும், உடலில் வியர்வையைப் பெருக்குதல், குளிர்ச்சியான உடலில் வெப்பத்தை அதிகப் படுத்தும், அதன் மூலம் ஆற்றலை அதிகப் படுத்தும், விதை தாதுவெப்பு அகற்றும் தன்மையை உடையது.

பேய்த்துளசி இலைகளில் 25 அல்லது 30 எடுத்து அரைத்துச் சாறு பிழிந்து அச் சாற்றைப் பாலுடன் கலந்து குழந்தை களுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இரு மல், சளி ஆகியவை குணமாகும்.

பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கலந்து குடித்துவரக் கபம் என்னும் மார்புச் சளி கரைந்து சளி வெளியாகும். காசம், இருமல், ஆரம்ப என்புருக்கி ஆகிய நோய் களும் இம்மருந்தால் குணமாகும்.

இலையை நன்கு மைய அரைத்துச் சுண்டைக்காயளவு எடுத்துத் தயிரில் கலந்து காலை, மாலை இரு வேளையும் குடிக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் எல்லாம் பறந்து போகும்.

இதனை இப்படியும் செய்யலாம். இலையை உலர்த்திப் பொடித்
து டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு 5 கிராம் பேய்த்துளசிப் பொடியை 100 மி.லி. வெந்நீரில் ஒரு ஐந்து நிமிடம் ஊறவைத்து பின் வடிகட்டி, சிறிது பாலும் தேவை யென்றால் சிறிதளவு சர்க்கரையும் கலந்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும். மீண்டும் அருகில் வரவும் அஞ்சும்.

மூல நோய் உள்ளவர்களுக்கு இது வலி, நோய் இரண்டையும் போக்கும் அரு மருந்து. இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் மூலம் காணப் படும் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் வலி, அரிப்பு ஆகியவை நிர்மூலம் ஆகி விடும்.

சொறி, சிரங்கு உள்ள சிலர் பேய் போல எப்போதும் உடலைச் சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இதற்குப் பேய்த் துளசி இலையை அரைத்துத் குளிக்கும் போது உடலில் தடவிக் குளித்தால் இதமாக இருப்பதுடன் சொறி, சிரங்கு முற்றிலும் தீரும்.

கஞ்சாங்கோரை இலைப் பொடி 10 கிராம், மிளகுத்தூள் 1 கிராம் சேர்த்து வெந்நீரில் கலந்து கொடுக்க எலும்புருக்கி நோய் குறையும்.

சிலருக்கு தலையில் மட்டுமல்ல உடலி லும் பேன் தொல்லை காணலாகும். எப் போதும் தலையிலும் உடலிலும் கை களால் பிடில் வாசித்துக் கொண்டே இருப் பார்கள். சிலர் கைகளில் கிடைக்கும் கத்தி உட்பட எல்லா விதக் கருவிகளையும் பயன்படுத்தி உடலில் இசை மீட்டுவார்கள். இவர்கள் பேய்த்துளசிப் பூவுடன் சிறிது வசம்பு சேர்த்து அரைத்துத் தலையிலும் உடலிலும் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் ஒரு வாரத்தில் பேன் தொல்லை ஒழியும்.

இலக்கியச் செய்திகள்

'ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு?' என்னும் எட்டாம் நூற்றாண்டில் தோன்றி மருத்துவ நூலில் இச்செடியின் குறிப்பு காணலாகிறது.

வழக்கம் போல ஒரு சுவையான செய்தி என்னவென்றால், தமிழகத்தில் ஆதிகாலத் தில் தயாரிக்கப்பட்ட மதுவில், அதாவது 'அதியனும் ஔவையும் மாந்தி மகிழ்ந் தார்கள்' என்று வெவ்வேறு குரல்களில் இன்றளவும் ஒலிக்கப்படும் மதுவில் ஒரு மூலக்கூறாக இந்தக் கஞ்சாங்கோரை பயன்பட்டுள்ளது.
Read more >>

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

 
 
http://www.tamilcnn.com/upload-files/dec_2011/medical/sitha.jpgசீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
2. சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் புசி வர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.
9. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
Read more >>

Popular Posts