Followers

Wednesday 1 August 2012

விஷக்கடி... விரட்டி அடி! -





விஷக்கடி... விரட்டி அடி




விமானத்தில் ஒருவரை தேள் கொட்டியதால், அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். பூரான், குளவி, தேனீ, தேள் போன்றவற்றால் கொட்டுப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. குறிப்பாக நாட்டு ஓடு வேய்ந்த கூரைகள் உள்ள கிராமத்து வீடுகளில் இந்த ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். தேள்களின் க ுடியிருப்பே ஓடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகள்தான். அதேபோல் ஈரமும் - இருட்டும் இருக்கும் குளியல் அறைகள் என்றால் பூரான்களுக்குக் கொண்டாட்டம். குளவியும் தேனீயும் நகர்ப்புறங்களில்கூட நாம் பார்க்கக் கூடியன. எதிர்பாராத இடங்க ளில் இவை கூடு கட்டுவதும், அவற்றின் கூடுகளைக் கலைக்க நாம் முயலுவதும் அடிக்கடி நடப்பதுதான். இவை தீண்டினால் செய்ய வேண்டிய முதல் உதவிகள� �ப் பற்றியும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கோயமுத்தூர் பொது மருத்துவர் வி.ஜனார்த்தனன் விவரித்தார்.
தேள்:
 பொதுவாகத் தேள் கொட்டுவதால் மிகவும் சீரியஸான விளைவுகள் இருக்காது என்றாலும், சில சமயங்களில் மிக ஆபத்தாகிவிடுவதும் உண்டு. தேள் கொட்டினால் வலியும் எரிச்சலும் தோன்றும். அந்தப் பகுதி மரத்துப்போவதும் உண்டு. நெறி கட� ��டுவதும் இருக்கும். சில சமயங்களில் உடல் முழுவதும் உணர்வற்ற நிலை, விழுங்குவதில் சிரமம், நாக்கு தடித்துப்போதல், பார்வை மங்குதல், சுழலுதல், எச்சில் ஒழுகுதல், மூச்சுவிடத் திணறுதல் போன்ற பாதிப்புகள் இருக்கும். உச்சக்கட்டமாக மரணம் நேரிடவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது அவசியம். தேள் கொட்டிய இடத்தில் முள் குத் தியதைப் போன்ற அடையாளம் இருக்கும்.
தேள்களில் சுமார் 2,000 வகைகள் இருந்தாலும் 25 முதல் 40 வகையானவைதான் ஆபத்தானவை. விஷத்தன்மையும் தேளுக்கு தேள் மாறுபடும். ஒருவரை தேள் கொட்டிவிட்டால், அந்தப் பகுதியை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் கொட்டுப்பட்ட இடத்துக்கு அருகில் மோதிரம், மெட்டி, வளையல் போன்ற ஆபரணங்கள் ஏதேனும் அணிந்திருந்தால், அவற்றை அகற்றிவிட வேண்டும். க� �ரணம், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் வீங்க முடியாமல் போனால், ரத்த ஓட்டத்தைத் தடை செய்யக்கூடும். ஐஸ் கட்டிகளை 10 நிமிடங்கள் வைத்து லேசாக அழுத்தலாம். பின்னர் ஐஸ் கட்டியை எடுத்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஐஸ் ஒத்தடம் தரலாம். வலி நிவாரணிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. கொட்டுப்பட்ட இடத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் மட்டுமே, ஆன்டிபயாடிக் மர� �ந்துகளைக் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் கீறுவதோ, வாயை வைத்து உறிஞ்சுவதோ கூடாது.
கொட்டிய தேள் என்ன வகை என்று தெரிந்தால், சிகிச்சைக்கு அது உதவியாக இருக்கும். எனவே, கொட்டிய தேளை ஒரு டப்பாவில் போட்டு மருத்துவரிடம் காட்டலாம். தேள் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்பதைத் தெரிந்துகொள்வது எந்த அளவு முக்கியமோ, அதே அளவு தேள் கடியே ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் முக� ��கியம்.
துணிமணிகள், கை உறைகள் மற்றும் கால் உறைகள், ஷூக்கள் போன்றவற்றை அணிவதற்கு முன் நன்கு உதறிவிட்டுப் பயன்படுத்தினால் தேள் கடி ஏற்படாமல் தப்பலாம். தேள்களுக்கு இரையாகும் சிறு பூச்சிகள், கரப்பான், பல்லி போன்றவை வீட்டுக்குள் இல்லாமல் பார்த்துக்கொண்டால், தேளே வீட்டை நெருங்காது.
நம் உடம்பின் மீது தேள் ஊர்ந்துகொண்டு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக உத� �ித் தள்ள வேண்டுமே தவிர, உடம்போடு சேர்த்து தேளை அடிக்கக் கூடாது; ஏனெனில், உடம்பில் இருக்கும் தேளை அடித்தால், அது உடனடியாகக் கொட்டிவிடும். தோட்டங்களில் கற்களுக்கு அடியில் தேள்கள் இருக்கலாம். எனவே, கற்களைப் புரட்டும்போது கவனம் தேவை. இரவு நேரங்களில், காலணி அணியாமல் வெளியில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பூரான்: 
 பெரிய சைஸ் பூரா� �்கள் விஷத்தன்மைகொண்டவை. இவை கடித்தால், தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். கடி வாயில் வீக்கமும் இருக்கும். உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்காவிட்டால், அது சீரியஸான விளைவுகளை ஏற்படுத்தும். ஐஸ் கட்டிகளை வைப்பதுதான் உடனடி முதல் உதவி.
குளவி: 
பொதுவாகக் குளவி கொட்டினால் வலி இருக்குமே தவிர, பெரிய ஆபத்து இல்லை. குள� �ி விஷம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மூச்சுவிடுவதில் சிரமம், வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் வீக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட குளவிகள் கொட்டிவிட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். கண்ணுக்கு அருகில் கொட்டி இருந்தால், கூடுதல் கவனம் தேவை. கொட்டிய இடத்தில் சீழ் வடிதல், நீர் ஒழுகுதல், கடிவாய் சிவந்து காணப்ப டுதல், அதிகமான வலி போன்றவை இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
கொட்டிய குளவியின் கூர்மையான முள் போன்ற உறுப்பு சில சமயம் தோலில் புதைந்திருக்கலாம். மருத்துவரின் உதவியோடு அதனை அகற்றிவிட வேண்டும்.
தேனீ:
 தேனீ கொட்டிய இடத்தை நன்கு கழுவி, கொட்டிய கொடுக்கு இருந்தால் அதை நீக்கி, ஐஸ்ஒத்தடம் கொடுப்பதே முதல் உ� �வி. டெட்டனஸ் ஊசி போட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தால், தேனீ கொட்டிய சில தினங்களுக்கு உள்ளாகவே அந்த ஊசியை மறுபடியும் போட்டுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் கொட்டிய இடத்தில் தொற்று ஏற்பட்டுச் சீழ் பிடிக்கலாம். உடனடியாக மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
குளவிக் கூடுகளையோ, தேன் கூட்டையோ தேவை இல்லாமல் கலைக்கக் கூடாது. பழ மரங்க� ��், பூந்தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் தேனீ மற்றும் குளவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, மேற்படி இடங்களுக்குச் செல்லும்போது அடர் வண்ணத்திலான ஆடைகள் அணிந்து செல்ல வேண்டாம்; வாசனைத் திரவியங்களையும் தவிர்க்க வேண்டும். முழுக்கை மற்றும் முழுக்கால் ஆடைகளுடன், தகுந்த காலணிகளையும் அணிந்து செல்வதே பாதுகாப்பானது.'





No comments:

Post a Comment

Popular Posts