Followers

Friday, 30 September 2011

குழந்தைகளுக்கு வைட்டமின்கள்

 
http://psy2.ucsd.edu/~kang/child%20pictures/children-jump.jpgகுழந்தைகள் நோய்நொடியின்றி நலமுடன் வளர உணவில் காணப்படும் அல்லது சேர்க்கப்படும் வைட்டமின்கள் பெரிதும் உதவுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளும் தேவைக்கேற்ப உணவில் அடங்கியிறந்தால் அதை நாம் சமநிலை உணவு என அழைக்கின்றோம். நாம் அளிக்கும் உணவில் எல்லா வைட்டமின்களையுமே சேர்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு வைட்டமினாவது குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி அதனால் தடைப்படுகின்றது.

வைட்டமின்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். 1, நீரில் கரைபவை உதாரணம் பி, சி, பி. 2, எண்ணெயில் கரைபவை, உதாரணம் ஏ. டி. இ. கே. இவற்றில் எண்ணெயில் கரைவது தண்ணீரில் களரவது இல்லை. நீரில் களரவது எண்ணெயில் களரவது இல்லை.

இனி குழந்தைகளுக்கு தேவைப்படும் சில வைட்டமின்கள் பற்றி பார்க்கலாம்.


வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைகளுக்கு மாலைக்கண், ஒளியிழந்த கண், கண்ணில் சதை வளருதல், கருவிழி பாதிப்பு மற்றும் உடலில் தோல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எல்லா வகை கீரை வகைகள் முருங்கைக்காய், காரட், பச்சை மிளகாய், பப்பாளி, செவ்வாழை, ஆரஞ்சு, பலாப்பழம், சப்போட்டா பழம், மாம்பழம், தக்காளிப் பழம், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், நண்டு, மீன், தாய்ப்பால், வெண்ணெய், நெய், சிவப்பு பனை எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ உள்ளது.



குழந்தை வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகவும் தேவையானதாகும். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் வைட்டமின் ஏ போதுமான அளவிற்கு கிடைக்கும். முதல் 3 திங்களுக்குப் பின் தாய்ப்பால் கொடுப்பது தடைப்பட்டால் வைட்டமின் ஏ கொண்ட சொட்டு மருந்துகளில் ஏதாவதொன்றை பசும்பாலுடன் கலந்து கொடுக்கலாம்.









வைட்டமின் பி, வைட்டமின் பியில் சில பிரிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஒருந்கிணைந்தே உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. தானிய வகைகள், ஈஸ்ட் பால் முட்டை பன்று இறைச்சி, மீன் வேர்க்கடலை, தீட்டப்படாத அரிசி போன்றவற்றில் இது அதிகம் உள்ளது. இனி வைட்டமின் பியின் வகைகள் பற்றியும் அவை குறைந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பார்க்கலாம்.

வைட்டநின் பி1, இதற்கு "தையமின்" என்று பெயர். இதன் மூலம் உண்ணும் உணவிலுள்ள மாவுச் சத்து செரிக்கப்பட்டு அது குளுக்கோளாசாக மாற்றப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் அளிக்கப்படுகின்றது. இந்த வைட்டமினை உட்கொண்ட ஒரு சில நிமிடங்களிலேயே இதனை மூளை ஈரல் இதயம் போன்ற பகுதிகளில் காணமுடிகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் பி 1 குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் குறை நோய்க்கு பெரிபெரி என்று பெயர். குழந்தைக்கு மூன்று திங்கள் காலத்திலிருந்து தாய்ப்பாலுடன் அல்லது மற்ற பாலுடன் தானிய உணவும் சேர்த்தளிக்க விட்டால் இக்குறை ஏற்படுகின்றது. இந்நோய் கண்டால் குழந்தையின் உடல் முழுதும் வீக்கம் ஏற்படும். தசைகள் வளர்ச்சியின்றி வலுவிழந்து காணப்படும். உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் வலுவின்மையால் காசநோய் போன்ற பல நோய்கள் வரக் கூடும்.

வைட்டமின் பி 2. இதற்கு "ரிபாப்ளேவின்" என்று பெயர். இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது. குழந்தையின் வாயின் இரு ஓரங்களிலும் வெடிப்புகளுடன் கூடிய காயங்கள் உருவாகும். நாக்கு சிவந்து வழுவழுப்புடன் வெடிப்புக்கள் தோன்றும். எனவே உணவுகளை உட்கொள்ள குழந்தை சிரமப்படும். நாக்கில் மட்டுமல்லாது இந்த வைட்டமின் குறைவால் குடலிலும் இவ்வாறான காயம் ஏற்பட்டு உணவு உட்கொள்ள இயலாமையும் வயிற்றுப் போக்கும் ஏற்படக் கூடும்.

வைட்டபின் பி 2 இதில் ரிபாப்பிளேவினுடன் நியாசின் என்ற மற்றொரு சத்தும் சேர்ந்து காணப்படுகின்றது. இதை நிக்கோடினிக் அமிலம் என்றும் எழைப்பதுண்டு. இந்த வைட்டமின் குறைவால் பெலாக்ரா என்ற நோய் உண்டாகின்றது. அதனால் சூரிய ஒளிபடுகின்ற இடங்களில் எல்லாம் தோல் கருமையுற்று உலர்ந்து பளபளப்பு மங்கிவிடும். குழந்தையின் நாக்கு தடித்து வீங்கி சிவந்து காணப்படும்.


http://azhkadalkalangiyam.blogspot.com/2010/08/blog-post_3894.html
Read more >>

இதய நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள



Photo: Angiogram of healthy heart
எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள் என்று தான் மருத்துவர்களும் அறிவுரை கூறுகின்றனர்.
தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் ஈ எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வதேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் ஈ எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடுவயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் ஈ உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள்(நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய்(சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான "ஒமேகா 3" வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல் "ஒமேகா 3" தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில் பாலி பெனோல்ஸ் என்ற இதயத்திற்கு நன்மை செய்யும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருக்கிறதாம்.

டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.

அதிக உப்புத்திறன் கொண்ட அஜினமோட்டோ, சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.

எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.
Read more >>

பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு

 
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQqWmn04aMY8hngAaFQELTMYdPT0IBihmwjIZyOt2BHgCwtwY90ag
மனிதர்களுக்கு உண்டாகும் பல்வேறு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஒன்று.
இதன் தாக்குதல் ஒவ்வொரு மனிதனுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு அல்லாமல் அவர்களின் தலைமுறைகளையும் கடுமையாக பாதிக்கிறது.

இத்தைகைய பாதிப்புகளால் அவர்களின் தலைமுறைகளுக்கு நிறம், பாலினம் ஆகியவற்றில் கூட பல மாறுதல்கள் உண்டாகின்றன.

இவ்வாறு மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வளர்ந்து வரும் அறிவியல் பல எளிமையான தீர்வுகளை மனிதன் காண வழி வகுத்திருக்கின்றது.

அவைகளில் பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை மிக பயனுள்ள ஒரு தீர்வாக அமைகிறது.

ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை முறை, இது தொன்றுதொட்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தி வருகிறுது. பல் நோய்களை கூட மிக எளிமையாக குணப்படுத்த முடியும்.

பல் பிரச்சனைகள் உள்ளவர்கள் "அஸாடிரக்தா இண்டிகா" அதாவது வேம்பு பயன்படுத்தி வந்தால் பல் பிரச்சனைகளிலிருந்து நல்ல ஆறுதல் பெற முடியும்.

வேம்பு சுள்ளி மற்றும் வேம்பு எண்ணெய் இவற்றை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்தால் மூச்சு பிரச்சனைகள் கூட எளிதில் குணமாகும்.

மேலும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட "பபுள்" என்று அழைக்கப்படும் பற்பசையை பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்
Read more >>

அல்சர் நோயைத் தடுக்கும் வழிமுறைகள் ..

 
 
http://www.human-body-facts.com/images/human-body-muscle-diagram.jpg
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தின் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம்.
செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

புண் எதனால் ஏற்படுகிறது: குடல் புண் தோன்றுவதற்குரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண்.

2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
குடல்புண் இருப்பதை அறிவது எப்படி: காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம். இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன.

இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

நெஞ்சு எரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.

இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு.

பிறகு இவ்வலி மறைந்து சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்.

இரைப்பை பாதிக்கும்:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின் அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ் சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்.

வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால் இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது.

அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

கவலையாலும் வரும்:
சாப்பிட வேண்டிய உணவுகளை தவிர்க்க கூடாது. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ வளைவதோ கூடாது. அப்படி செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ் செரிச்சல் ஏற்படும். இரவில் அதிக நேரம் விழித்திருக்க கூடாது. மனநிலையை தடுமாற விடக்கூடாது. அவசரப்படக் கூடாது. கவலைப்படக் கூடாது. கவலையும் அல்சரை கொண்டு வரும். மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்த கூடாது.

செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது.

மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப்பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

புகை வேண்டாம்:
அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.

குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன:
பொரித்த அல்லது தாளித்து செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பன்டைஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயை சாப்பிடக் கூடாது, தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
Read more >>

கொத்தமல்லி உயிரைக் காப்பாற்றும்.

 
 

இரவு பன்னிரண்டுமணி இருக்கும்.அத்தை வீட்டில் இருக்கிறேன்(தந்தைக்கு மூத்தவர்).வயிற்றை புரட்டியதுபோல உணர்வு.பேதியாகி விட்ட்து.கொஞ்ச நேரத்தில் வாந்தி.சிறுவயதில் எங்கெங்கோவிற்பதை வாங்கித்தின்பதுதான்.அடிக்கடி பாத்ரூம் போவது தவிர்க்கமுடியாமல்ஆகிவிட்ட்து.

தூக்கத்தில்இருந்து அத்தை எழுந்துவிட்டார்.சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.கையில் ஒருதம்ளரை கொடுத்து குடிக்கச்சொன்னார்.கொத்தமல்லி வாசனை தூக்கலாக இருந்த்து.பிறகுஅவரே விளக்கினார்.அந்த பானத்தில் கொஞ்சம் சுக்கும்,பனை வெல்லமும்சேர்க்கப்பட்டிருக்கிறது.

மிக இனிப்பானபானம் அது.அதிக அளவில் தனியா(காய்ந்த கொத்தமல்லி விதைகள்)சேர்க்கப்பட்டிருந்த்து.வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகப் போய்விடும் என்றார்.அரைமணி நேரத்தில் எல்லாமும் சரியாகப்போய் விட்ட்து.வயிற்றுப்போக்கு என்பது சிலநேரங்களில் அபாயமான விஷயம்.நீரிழப்பு ஏற்பட்டு விட்டால் உயிர்கூட போய்விடும்.

காலையில்மீண்டும் இன்னொரு முறை அதே பானத்தை கொடுத்தார்.அப்புறம் நல்ல பசி.சோர்வோ,இரவின்பாதிப்போ இல்லை.முழுமையாக குணமாகி விட்டிருந்த்து.இதையெல்லாம் பாட்டி வைத்தியம்என்கிறார்கள்.இப்போது அவ்வளவு மதிப்பும் கிடையாது.உடனடியாக மருத்துவமனையை எட்டமுடியாத நள்ளிரவில்,இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க தெரிந்து வைத்திருந்தார்கள்.

நாளிதழ்களில்படித்த செய்தி ஒன்று ஆச்சர்யத்தை தந்த்து.எனக்கு ஏற்பட்ட் ஃபுட் பாய்சனைகொத்தமல்லி விதை குணப்படுத்தும் என்பதை போர்ச்சுக்கல் நாட்டு விஞ்ஞானிகள்கண்டறிந்திருக்கிறார்கள்.தனியா எண்ணெய்யை கொண்டு செய்த பரிசோதனையில் இந்த முடிவைஎட்டியிருக்கிறார்கள்.

ஆண்டிபயாடிக்மருந்துகளுக்கு கட்டுப்படாமல் வளரும் கிருமிகளை(பாக்டீரியாக்கள்) அழிப்பதும் தெரியவந்திருக்கிறது.உலக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம்இது.மாத்திரைகள் சாப்பிடுவீங்களா? உஷார் என்ற பதிவில் இதைப்பற்றிகுறிப்பிட்டிருக்கிறேன்.பாக்டீரியாவுக்கு எதிராக இப்போது இருப்பது ஆண்டிபயாடிக்தான்.இதுவும்வேலை செய்யாவிட்டால் சிக்கல்.ஆனால் தனியா எண்ணெய் உதவும் என்கிறது ஆராய்ச்சி.

பாரம்பரியஉணவு முறையில் ஆரோக்கியத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்த்து.உதாரணமாகமிளகாய்ப்பொடி தயாரித்தால் தனியா உள்பட ஏராளமான பொருட்கள் அதில்சேர்க்கப்பட்டிருக்கும்.இப்போது நாம் நிறைய இழந்து விட்டோம்.ஆனால் நாம் இழந்துவிட்ட்தை வெளிநாட்டினர் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நமக்கே வேறு வடிவில் அதைதரப்போகிறார்கள்.

பலருக்கும்தெரிந்த பாட்டி வைத்தியங்களை பகிர்ந்து கொண்டால் எதிர்காலத்துக்கு உதவும்.நம்மால்முடியாவிட்டால் வெளிநாட்டினரை ஆராய்ச்சி செய்ய கேட்டுக்கொள்ளலாம்.நம்மிடம்இருந்தும் இல்லாமல் இருக்கிறோம்.முயற்சி செய்தால் இந்தியா பல நல்ல விஷயங்களைஉலகிற்கு அளிக்கும் என்று தோன்றுகிறது.
Read more >>

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்

 
 
http://assets.curbly.com/photos/0000/0010/5837/how-olive-oil-works-3.jpg
ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

ஒன் இந்தியா
Read more >>

வெஜிட்டபிள் சோமாஸ்

 

தேவையானவை

மைதா மாவு – 2 கப்
உருளைக் கிழங்கு – 4
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறு துண்டு
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கறிமசாலா தூள் – 1 டீஸ்பூன்
ரொட்டித் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை

* உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு வெடிக்க விட்டு அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து சிவக்க விடவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* வதங்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கி மேற்சொன்ன அளவு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு பிசைந்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விட வேண்டும்.

* காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் போட்டு கிளறிக் கொள்ளலாம். இதுவே வெஜிடபிள் பூரணம்.

* மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் `நெம்' அல்லது `டால்டா` சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

* மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து வெஜிடபிள் பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும். இதேபோல் நிறைய சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொண்டு வாணலியில் எண்ணையைக் காய வைத்து செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

* தொட்டுக்கொள்ள தக்காளி `கெட்ச்அப்' ஏற்றது.

கீதா தெய்வசிகாமணி


Read more >>

Thursday, 29 September 2011

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்..

 
http://childrenshospital.org/az/Site1318/Images/Kidney.gif
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக்
குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு
உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக
பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள்
சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக்
கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள
ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத்
தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும்.
கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி
இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.
6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக
பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக
இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol)
கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள்,
உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.


21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய்
ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள்,
பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக்
கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த
அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது
அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பது அவசியம்.

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம்
ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ்
செய்து கொள்ளுங்கள்.

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்
கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை
எடுத்துக் கொள்ளுங்கள்.
Read more >>

தாய்பாலின் அதிசயங்கள்.

 
தாய்பாலின் அதிசயங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0gbIQqn-hCjBvaXEUow9GjznncbLRNJoWU4P1zwCYFgPYTSHwApRrQKgN4zwaq2F6kjDySlMd8VAP2ehZ8hdPpS5DhAFRZMXd_seX3drsbWQK3vDB5zd2PFhNeOb10vgeVkkNJ4CNO6w/s1600/breast%20feeding1.jpg

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.


Read more >>

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

 
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை
மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே
உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை
சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர்
நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்
உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல்
அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான
வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான
சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை
போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம்,
மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள்,
திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க
செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க
பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால்
மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்
அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு
காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை
நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்
கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது
குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை
தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின்
கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை
அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம்
கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற
செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to
cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing
of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான,
ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும்
மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும்
அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,
வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த
சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது
(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு
தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal,
Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும்
பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table
Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal)
பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை
எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.


3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.
எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக்
கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,
இது மிகவும் ஆபத்தானது..


4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள்,
பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக
இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15
நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான
செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2
அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40
degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு
மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல்
உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை
தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.
Read more >>

குழந்தைகள் நோய்களுக்கு தீர்வு!

 
 





குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின்
அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க
வேண்டியுள் ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில்
செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார் குழந்தை கள் நல
மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவி யல் நிபுணர் டாக்டர் வினோதினி
கிருபாகரன். குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல்
அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை
இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள் ளது.
இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை
எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க
முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட
இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு
கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு
சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.

அது வரை
வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல்
காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள
வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு
சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு
அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித்
தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.

அதேபோல் சத்தான உணவுகள்
தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள்
தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக
இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும்.
குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று
ஏற்படுவதை தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம்
தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.

இது
போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும்
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு
சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில்
நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக்
கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு
வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள், பழச்சாறுகள்
மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை வழக்கத்துக்கு
மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை
பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை
இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது.
குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில்
கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால்
மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண சளித் தொல்லை
ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது
எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது
அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும்
எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள்
முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

சரியான சத்தான
உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று
ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை
பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது
மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு.
ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக
வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

ரெசிபி

நவதானியக்
கஞ்சி: முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த
திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து
தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவை
யில்லை.
காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க
கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த
உணவை துவங்கலாம்.

வெஜ்ரைஸ்: கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்
கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக்
கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி
ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி
சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய்
சேர்த்து ஊட்டலாம்.

ஸ்வீட் ஆப்பிள்: ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு
ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர்
தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை
சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக்
கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான
சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்

குழந்தை
பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக்
காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில்
தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட
வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு
நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும். கஞ்சி,
சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல்
கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.


கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து
வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து
தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள்
ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு
ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க
வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர்,
வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட்,
பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக்
கொடுக்கவேண்டியதில்லை என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

சுத்தமான
தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால்
விடவும். அது கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி
சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய்
தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும
நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை
ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில்
தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில்
இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம்.

கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.

முற்றிய
தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க
வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு
குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

6
மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு
அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.

கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.

கேழ்வரகை
முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது
தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக்
கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம்.
Read more >>

உடல் பருமன் குறைய வேண்டுமா?

 
http://pratishamin.files.wordpress.com/2011/06/best-exercise-for-weight-loss.jpgகுண்டானவர்களுக்கு ஒரு செய்தி;
உடல் பருமனை குறைக்க மக்கள் படாத பாடுபடுகின்றனர். உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்கின்றனர். சிக்கென இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கின்றனர். அவர்களுக்கு ஒரு எளிமையான வழி உண்டு என்பது தெரியவில்லை.

தினமும் உண்ணும் உணவில் கீரை வகைகள் மற்றும் வெள்ளைப்பூண்டை பயன்படுத்தினால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவை உணவுப் பொருட்களில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் என்னும் மாவுப் பொருட்களை ரசாயன மாற்றங்கள் மூலம் நொதிக்கச் செய்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடலில் போதுமான அளவு இன்சுலின் ஹார்மோன்கள் சுரக்கச் செய்கின்றன.

இதன் மூலம் குளுக்கோஸ் அளவு சீராகி உடல் பருமன் மட்டுமின்றி பல நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Read more >>

இதோ ஓர் மூலிகையை அறிந்து கொள்ளுங்கள்,ஆடாதொடா

 
 
http://www.grannytherapy.com/en/wp-content/uploads/2011/01/aadathoda3.jpeg
இதோ ஓர் மூலிகையை அறிந்து கொள்ளுங்கள்,
ஆரோக்கியமான வாழ்விற்கு சித்தர்கள் பல காயகற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர் என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்ட மூலிகைகளில் ஒன்றான ஆடாதொடா தாவரம் சிறந்த காயகற்ப மூலிகையாகும்.

இந்த தாவரம் அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. மனிதர்கள் வாழ தேவையான அளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனிதனை பாதிக்கும் சுவாசம் தொடர்புடைய நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல இத்தாவரம் சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இந்தியா முழுவதும் குறிப்பாக வெப்ப மண்டலப்பகுதிகளில் இது அதிகம் வளர்கிறது. தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதொடா செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

அனைத்து பாகங்களிலும் வாசிசின், வாசிசினைன், அராக்கிடிக்கிக், பெஹினிக், செரோடிக்,லிக்னோ செரிக், லினோலிக் மற்றும் ஒலியிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. பெட்டைன், வாசிசினோன்,இன்டோல் டீ ஆக்ஸி வாசிசினோன், அனிசோட்டைன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.

நுரையீரல் நோய்களை நீக்கும்

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இது காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதெடா சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் அறைகளில் உள்ள கசடுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ஆடாதெடா தாவரத்தை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

கனிகள், மலர்கள், இலைகள் மற்றும் வேர் போன்றவை பூச்சிகளை அகற்றும். நுண்கிருமிகளை அகற்றும், வலி அகற்றும், கபம் வெளியேற்றும், மயக்க மருந்தாக பயன்படும். பொடி, சாறு, உயிர்சாறு, கஷாயம் மற்றும் ஆல்கஹாலில் தீராத மார்புச்சளி, மூச்சுத்திணறல், இருமல், ஜலதோஷம், கக்குவான் இருமல் ஆகியவற்றிர்க்கு மருந்தாகும்.

கிராமப்புறத்தில் ஆடாதொடா இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

கர்ப்பப்பையை பாதுகாக்கும்

இலைகளின் சாறு வயிற்றுப் போக்கு, சீதபேதி, சுரப்பிக்கட்டி போன்றவற்றிர்க்கு மருந்தாகும். மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. கஷாயம் மூச்சுத்திணறல் நோய்க்கு மருந்தாகவும் பயன்படும். வேர் பட்டையில் இருந்து கிடைக்கும் வாசிசின் என்ற ஆல்கலாய்டு ஆக்ஸிடோனின் மருந்து பிள்ளைப் பேற்றின் போதும், கருச்சிதைவு காரணியாகவும் செயல்படுகிறது.

கிராமப்புறத்தில் ஆடாதொடா இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு இந்த இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதொடா இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

ரத்தத்தை சுத்தமாக்கும்

ஆடாதொடா இலை, தூதுவளை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தொடாவுக்கு உண்டு.

குழந்தைகளுக்கு அருமருந்து

ஆடாதொடா இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். இதனை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதொடா வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்.

வலிகளை நீக்கும்

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதொடா காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால்

கண் நோய்களை தீர்க்கும்

மலர்கள் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. கண் நோய்களை குணமாக்கும். காய்ந்த இலைகளை சுருட்டி புகைப்பது மார்புச்சளியைப் போக்கும். வீக்கம், நரம்புவலி, கட்டிகள், காயங்களுக்கு இலைகளின் பொடி பற்றாக பயன்படுகிறது. அடர்ந்த கஷாயம் சிரங்குகளுக்கு தடவும் மருந்தாக பயன்படும்.
Read more >>

உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்:

 
http://www.daviddarling.info/images/muscles_human_body_front.jpgநம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம்... இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்.. (ஆரோக்கிய உணவு முறைகள் என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்)
முதல் உணவு:
ஓட்ஸ்:
தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனே உடலுக்கு கிடைக்கிறது.
உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் "அவினின்" என்ற இரசாயனப் பொருளும் இருக்கிறது. இதனால் உடலும் உள்ளமும் உடனடியாகச் சக்தி பெருகிறது.
இந்த ஓட்ஸீனை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.

வைட்டமின் "சி" நிறைந்த உணவுகள்:
முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த "சி" உள்ளது.
உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் "சி" சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.
நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது வைட்டமின் "சி"
இதனை நாம் ஆரஞ்சு சாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் "சி" அதிகம் உள்ளது.
இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம்.
காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் "சி" இருக்கிறது.
நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த கொண்டகடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும்.
முட்டைகோஸ் சூப், பாசிப்பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்ச பயிறு சாலட் இதிலும் அதிகமாக வைட்டமின் "சி" அதிகமாக இருக்கு.
தினமும் காலை சூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.

தண்ணீர்:
தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலும் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்..
தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.
தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிவிடும்
ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.
பார்லி தண்ணீர்:
பார்லி அரிசியில் மூளைக்கு புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. நரம்புகளைப் பலப்படுத்தும் "பி" வட்டமினும் உள்ளது. பார்லியைக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை பாட்டிலில் வைத்து உடலில் சோர்வு ஏற்படும் பொழுது ஒரு டம்ளட் பார்லி தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் கலந்தவுடன் உடலின் குளூக்கோஸ் அளவு உயர்ந்து ஞாபகசக்தி அதிகரிக்கும்... மிகவும் புது உற்சாகத்துடன் வேலை செய்வதனை நீங்களே உணர்விகள்
ராகிமாவு:
இதில் கால்சியம் அதிகம். .. இதனை தினமும் ஒரு வேலை சாப்பிட்டுவந்தால் உடலுக்கு தேவையான சக்தியினை இது தருகிறது... கடினமான உழைப்பாளிகள் காலையிலும் மாலையிலும் 2 கப் கேழ்வரகுக் கஞ்சி, அல்லது 2 கேழ்வரகு ரொட்டியோ சாப்பிடுவதால் குறைந்தது 5 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை இதில் உள்ள கால்சியம் புதுப்பித்து விடுகிறது
Read more >>

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

 
http://2.bp.blogspot.com/_yd8Htwe9SNY/Si5kbyTaTZI/AAAAAAAACxE/UxPxOtiSgT0/s320/beer+belly.jpg
கொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது.நாம் உட்கொள்ளும் வெண்ணெய் , பால்,எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்பு சத்து உள்ளது.கொழுப்பில் உள்ள ட்ரைகிளிஸ்ரைட்ஸ் நமது செல்களில் பரவுகின்றன. இந்தப்பரவலை சில ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன .உடம்பில் இந்தக் கொழுப்புச்சத்து அடிபோஸைட்ஸ் என்னும் வகை செல்கள் மூலம் பல பாகங்களில் சேர்த்து வைக்கப்படுகிறது.

இவை நாம் சருமத்தின் அடித்தளங்களில் பாளம் பாளமாக சேர்ந்து விடுகின்றன .தொப்பைக்கு காரணம் இவை தான் . இந்த செல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சின்ன குழந்தையில் இருந்து இந்த செல்களின் எண்ணிக்கை பருவகாலம் வரை அதிகரிக்கிறது.

அதன் பிறகு அவற்றின் உற்பத்தி நின்றுவிடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை ஹார்போஹைட்ரேட் போன்ற பொருட்களும் தொப்பை உருவாக காரணமாகின்றன.
சிலர் பரம்பரை பரம்பரையாகவே தொப்பையுடன் இருப்பார்கள்.ஆனால், அதற்கு மரபுப்பண்புகள் மட்டும் காரணமல்ல. உணவுப்பழக்கம் தான் தொப்பை விழாக் காரணமாகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகளவில் சர்க்கரை போட்டு காபி ,டீ ,குடிப்பது , சாக்லேட் ஐஸ்கிரீம்போன்ற இனிப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நள்ளிரவிலும் தடபுடலான விருந்து போன்ற பழக்கவழக்கங்களும் தொப்பைக்கு காரணமாகின்றன.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும்,அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கபடாமல் அதிகளவில் சேர்ந்து விடுவதால் தொப்பை வந்து விடுகிறது .
Read more >>

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் - நீக்குவதற்கான வழிமுறைகள்

 
குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
http://www.randomthoughtz.com/wp-content/uploads/2009/11/circle-children.gif

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும். இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.
Read more >>

ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.

 
http://www.human-body-facts.com/images/human-body-muscle-diagram.jpg
ஆக்கினை -: நெற்றி தலையில் அடிபட்டால் சிலேத்தும நோய், கண்பார்வை குறைவு, காது கேளாமை, ருசியின்மை நீர் தோஷமாகிய ஆஸ்துமா, சயனஸ், பைத்தியம், மண்டை ஓட்டில் அடிபட்டால் நீர் இறங்கும் தன்மை ஆகிய நோய்கள் உண்டாகும். குண்டலீனி யோக தவறாக செய்தாலும் நோய்கள் ஏற்படும்.(பஞ்சபூதங்களின் ஆகாயம் ஆகும்)

விசுத்தி -; நெஞ்சுக்கு மேல் பகுதி அடிபட்டால் நுரையீரல் தாக்கப்பட்டால் சயரோகம், படபடப்பு, ஆஸ்த்மா, குனிந்தால் மூச்சு முட்டுதல், நடந்தால் மூச்சு வாங்குதல் அதிக கோபம் ஆகியவை தாக்கப்படும்.(காற்று தன்மையாகும்)


அளாதகம் -: மேல் வயிற்றுப் பகுதி, பித்தப்பை, கல்லீரல் வீக்கம், வயிறு உப்பிசம், மஞ்சள் காமாலை, ஜீரணக்குறைவு, குடலுருஞ்சிபாதிப்பு, உடல் வீக்கம் முதலியவை ஏற்படும். (நெருப்பு தன்மையாகும்)

மணிபூரகம் :- வயிற்றின் மத்திய பகுதியில் குடல் கிட்னி, நீரடைப்பு, கல்லடைப்பு வரும். (தண்ணீர் தன்மையாகும்.)

சுவதிஷ்டானம் -: வாத சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்படும். (மண் தன்மை)

மூலாதாரம் -: மூல நோய், சுக்கில நோய்கள் வரும். இதில் குண்டலீனி யோகம் செய்யும் யோகிகள் குரு மூலம் முறையாக இயக்கத் தெரியவில்லை எனில் மேற்குறித்த நோய்களில் மாட்டிக் கொள்வார்கள். மரணம்வரை வந்து விடும். நமது உடலில் தலையும் மூலாதரமும் வட தென் துருவமாகும். மூலத்தில் ஆடும் சப்தமும் உண்டாகும்

குண்டலினி யோகம் செய்பவர்கள் பிராயணாமம் செய்கிறேன் என்று உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் உண்டாகாது என அசட்டையாக இருகக்கூடாது
இதனை முறையாக செய்யவில்லை எனில் சக்தி ஓட்டம் தவறாக ஓடினால் குடலை சுற்றி உள்ள மெல்லிய ஜவ்வு கிழிந்து சிறு குடல் இறங்கி விடும். இதை குடல் இரக்கம் என கூறுவார்கள்.

யோக சக்திக்கேற்ப சாப்பாடு, எண்ணைய் குளியல் வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் குறி வழியாகவும் குதம் மூலம் வழியே கீளே வெப்பத்தை வீசும். விந்து வெளி வரும், மூலவியாதி தாக்கும். அதிக குளிரால் குறியை செயலிழக்க வைக்கும், குடல் சரியாக வேலை செய்யாது.

எனவே ஆறு ஆதாரங்கள் முறையாக வேலை செய்ய வேண்டும் இவைகளில் வர்ம புள்ளி தாக்கப்பட்டால், செயலிழக்கவில்லை என்றாலும் மேற்கண்ட நோய்களால் பீடிக்கப் படும். இந்த நோய்களை குண்டலீனியின் சரியான இயக்கத்திலும், வர்ம மருத்துவரீதியாக குணப்படுத்த முடியும்.
 
http://acuvarmatherphy.blogspot.com/2008/07/blog-post_29.html
Read more >>

ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

 
 
வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
thanks:http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_1329.html
Read more >>

Popular Posts