குங்குமப்பூவே... கொஞ்சும் அழகே..!
மலரினும் மெல்லிய, செக்கச்செவேல் நிறத்தில் இருக்கும் குங்குமப்பூ, தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அதி அற்புதமானவை. 'குங்குமப்பூவே... கொஞ்சு புறாவே..' என்ற பாட்டை வைத்தே குங்குமப்பூவின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அதன் விலை மிக மிக அதிகமாக இருக்கிறது என்றாலும், அது தரும் அழகுப் பலன்களோ ஏராளம். கவர்ந்திழுக்கும் கலரையும், மயக்கும் அழகையும் ஒருங்கிணைத்துத் தருவதில் குங்குமப்பூவுக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். குதூகல அழகை அள்ளித் தரும் குங்குமப் பூவின் மகிமைகள் இங்கே...
குங்குமப்பூ கீறல்-10 எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, இதனுடன் 2 டீஸ்பூன் மில்க் பவுடர் கலந்து, சின்ன அம்மியில் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 'பளிச்'சென முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
குங்குமப்பூ ஸ்க்ரப்
ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும்.
சந்தனத்தூள், செம்மரத்தூள் தலா அரை டீஸ்பூனுடன், 5 குங்குமப்பூ கீறலை தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் 2 முறை முகம், கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள், கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைந்து முகம் ஒரே மாதிரியான நிறத்தில் மின்னும்.
2 டீஸ்பூன் பாலில், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பைப் போட்டு ஊறவையுங்கள். இதனுடன் 10 குங்குமப்பூ கீறலை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொய்ந்த முகத்தை தூக்கி நிறுத்தி, 'டல்'லான முகமும் டாலடிக்கும்.
10 குங்குமப்பூ கீறலுடன் 4 பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து முகத்தில் பூசி 'பேக்' போட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவர முகம் பளபளப்புடன் இழந்த அழகை மீட்டுத் தரும்.
கால் கப் குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்து போல் போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து, முகம் அன்று மலர்ந்த தாமரையாகப் பூத்துக் குலுங்கும்.
நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன், குங்குமப்பூ கீறல்-15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். வாரம் இருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் வராமல் தடுக்கும்.
பூப்பெய்த வைக்கும் குங்குமப்பூ!
கர்ப்பிணி பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் 2 குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர, இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
பிரசவ வலி வந்தும் குழந்தை வெளியில் வராமல் இருக்கும்போது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும்.
குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து, உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் வெளியேறும்.
உடல் சூட்டினால் சிலருக்கு ஆசனவாய் புண்ணாகியிருக்கும். குங்குமப்பூவை தேன் சேர்த்து அரைத்து தடவினால், குணமாகும்.
சிறிது குங்குமப்பூவில் தாய்ப்பால் விட்டு அரைத்து கண்களில் விட்டால், கண்வலி குணமாகும்.
அல்சரினால் குடல் புண்ணாகி வெந்து போயிருக்கும். காய்ச்சிய பாலில் 4 குங்குமப்பூ கீறலை சேர்த்து ஒரு மண்டலம் குடித்து வர, புண் ஆறிவிடும்.
25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.
No comments:
Post a Comment