உடலில் எந்த ஒரு பகுதியிலும் புற்று நோய் வரும். ஏன். கண்களில் கூட புற்று நோய் வரும் என்கிறார் சங்கர நேத்திராலயாவின் கண் டாக்டர் மகேஷ் ஷண்முகம். இந்த நோய் குறித்து அவர் விவரிக்கிறார்.
புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கண்களில் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம் பரம்பரை. மற்றொன்று மரபணு மாற்றம் என்று சொல்லலாம். கண்களில் ஏற்படும் புற்றுநோயை 'ரெடினோ பிளாஸ்டோமான்னு சொல்லுவோம்.
இது பெரும்பாலும் சின்ன குழந்தைகளை பாதிக்கும். இவர்களின் கருவிழியில் வெள்ளை படலம் படர்ந்து, இரவில் மிருகங்களின் கண்கள் ஒளிர்வது போல் இருக்கும். மாறுகண் பாதிப்பு இருப்பது போல் தோற்றமளிக்கும்.
சில குழந்தைகளுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். இந்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. கண்களில் வரும் இந்த புற்றுநோய் கவனிக்காமல் இருந்தால், நாள்பட அது மற்ற உறுப்புகளையும் பாதித்து, கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடும்.
இதனை 3 வழி முறைகளில் குணப்படுத்தலாம்.
முதலாவது
அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. இதனால் சில சமயம் கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
இரண்டாவது
இன்ட்ரா எட்ரியல் கிமோதெரபி: கண்பார்வைக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும். இன்ட்ரா கிமோதெரபியில், லேசர் கதிர்களை கண்களுக்கு வெளியே செலுத்துவோம். அது புற்றுநோய் கட்டியில் ஊடுருவி சென்று அதனை அழிக்கும்.
மூன்றாவது
பிராகி தெரபி: கண்களுக்கு மேல் சின்ன வட்டமான பிளேட் வைத்து அதன் வழியாக கண்களுக்கு செலுத்துவோம். இது புற்றுநோய் கட்டியை மட்டும் தாக்கும். முகத்தில் மற்ற பாகங்களை பாதிக்காது. அதே சமயம் கண் பார்வையும் காப்பாற்ற முடியும்.
இந்த நோய் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பாதிக்கும். பெரியவர்களை பொறுத்தவரை, நாற்பது வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படும். மெலனாமா புற்றுநோய்' என்று அழைக்கப்படும் இந்த நோயின் பாதிப்பு கருவிழி முழுதும் வெள்ளை படலம் படர்ந்து இருக்கும்.
பார்வை குறைவது மட்டும் இல்லாமல் பக்காவாட்டில் உள்ள பொருட்களை பார்க்கும் திறனும் குறையும். இவர்களுக்கு பிராகி தெலபி சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்றார்.
No comments:
Post a Comment