Followers

Thursday, 29 December 2011

ஹார்மோன்களின் விளையாட்டு

 
 
 
உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவைஹார்மோன்கள்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருபத்தாறு வயது நண்பருடன்சேர்ந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை கொலை செய்து விட்டார்.மாணவர் 14 வயதுகாதலியுடன் பேசிக் கொண்டிருந்த்தை பையன் பார்த்துவிட்டான்.வெளியே சொல்லிவிடுவான்என்ற கலக்கத்தில் கொன்று விட்டார்கள்.
இம்மாதிரிபிரச்சினைகள் இன்று அதிகரித்து வருகிறது.சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த இரண்டுஆசிரியர்கள் சொன்னார்கள்,''இதெல்லாம் ஹார்மோன்களின்விளையாட்டு,அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!".ஹார்மோன்கள் என்றாலேபாலியல் தொடர்பான விஷயம் மட்டும்தானா? உடலில் பல்வேறு ஹார்மோன்கள் பலவித பணிகளைசெய்கின்றன.
 
ஆணும் பெண்ணும்ஒருவரை ஒருவர் ஈர்க்க ஹார்மோன் தான் காரணம்.பாலியல் ஹார்மோன்களின் வேலைஇது.பாலியல் உணர்ச்சி மட்டுமல்லாது பயம்,கலக்கம் போன்ற உணர்ச்சிகளின்போது,சிக்கலான சூழ்நிலைகளில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து உதவுகின்றது.குருதியில்கலந்து செய்தியை எடுத்துச் செல்பவை இவை.
உடல் இயக்கத்தில்ஹார்மோன்கள் முக்கிய செயல்பாட்டை கொண்டிருக்கின்றன.பிட்யூட்டரி சுரப்பியை தலைமைசுரப்பி என்பார்கள்.தலைமை என்று சொல்வதற்கு ஏற்றவாறு மூளையில்அமைந்திருக்கிறது.மற்ற சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது.பலருக்கும் தெரிந்த இன்னொருசுரப்பி தைராய்டு.இதன் மிகுதியும் குறைவும் பிரச்சினையை உண்டாக்கி தொடர்மருத்துவத்துக்கு இட்டுச்செல்கிறது.
 
பெண்ணின்கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன்.பெண் தன்மையை இந்த ஹார்மோன்தான் முடிவு செய்கிறது.கர்ப்ப பை வளர்ச்சி,அழகு போன்றவை இதைச் சார்ந்துஇருக்கின்றன.இளமை இதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.இதெல்லாம் ஹார்மோன்செய்யும் வேலை என்று சொல்வார்கள்.
ஆணுக்கும்பெண்ணுக்கு உற்பத்தி திறன் பாலியல் ஹார்மோன்களை சார்ந்து உள்ளது.இளமை தடுமாற்றத்தைசந்திப்பதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகரிப்பதே காரணம்.ஆணுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரோன் உடல்மாற்றத்தை ஏற்படுத்துகிறது.நிறைய குழப்பங்களையும்,பிரச்சினைகளையும் கூட கொண்டுவருகிறது.ஆணுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு இந்த ஹார்மோனும் காரணமாக இருக்கமுடியும்.
 
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் பெண்ணுக்கு சுரக்கும்ஹார்மோன் என்று பார்த்தோம்.பசுக்களில் இந்த ஹார்மோன்களை ஊசி மூலம் செலுத்துவதாகசொல்லப்படுகிறது.அதிக பால் உற்பத்திக்காக விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்செய்யும் தரக்குறைவான செயல். இவ்வாறு பால் மூலம் உடலுக்கு செல்லும் ஈஸ்ட்ரஜன் ஆண்களிடம்ஆண்மைக்குறைவை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Read more >>

Sunday, 25 December 2011

காளான் சாப்பிட்டால் என்ன நன்மை?

 
 
நல்ல பசியாகஉணர்ந்தேன்.நண்பர் ஒருவருடன் அருகில் உள்ள மெஸ் நோக்கி போய்விட்டோம்..நண்பர்காளான் தோசை சாப்பிடலாம் என்றார்.கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன்,காளான் நான்கையும்தட்டில் வைத்து ஒன்று தேர்வு செய்யச்சொன்னால்,நான் காளானை தேர்ந்தெடுப்பேன்.காளான்தோசை வந்த பிறகு "இதில் காளானே இல்லை'' என்று நண்பன் சண்டைபிடிக்க ஆரம்பித்தான்.தோசையில் காளான் மசால் வைத்துக்கொடுத்தால் அது காளான் தோசை.''சிறுசிறுதுண்டுகளாக இருக்கும் சார்"என்று சமாளித்தவாறே சில துண்டுகளை வைத்தார்கள்.சண்டைபிடித்து கேட்டு வாங்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.அவர்களுக்கு அதிக காளான்துண்டுகள் கிடைக்காது.
 
இருவரும் சாப்பிடஆரம்பித்தோம்.நண்பன் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க நான் பால்யகால நினைவுகளைசாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் மட்டுமில்லாமல் இன்று பலர் அப்ப்டித்தான்.உணவைபொறுமையாக ருசித்து சாப்பிடுபவர்கள் குறைவு.மனசு எங்கோ இருக்க கடனுக்கு விழுங்கிக்கொண்டிருப்போம்.சில நேரங்களில் அதிகமாகவோ,மிக குறைவாகவோ சாப்பிட்டுவிடுவார்கள்.சாப்பிடுவது தியானம் போல இருக்கவேண்டும்.உள்ளம் உணவில் முழுமையாககுவிந்திருக்க வேண்டும்.நான் எப்போதும் அப்படி இல்லை.ஆனால் காளான் தோசைசாப்பிடும்போது மனசு கிராமத்துக்குப் போய்விட்ட்து.
பூமியிலிருந்துகாளானை வெளிக்கொண்டு வருவது வான்மழை.நல்ல மழை பொழிந்து நிலம் குளிர்ந்திருக்கும்.சிலநேரத்து மழை மனசையும் குளிர்வித்து நல்ல மனநிலையைத் தரும்.மழை இரவின் அடுத்த நாள்காலையில் காளானைத் தேடி வயல்வெளிகளில் சுற்றுவோம்.
 
எங்காவதுமறைந்திருக்கும்.மண்ணில் வெள்ளையாக தெரிந்தால் மனம் பரபரக்க ஓடுவோம்.காளான்அப்போதுதான் மலர்ந்திருக்கும்.சில இடங்களில் கொத்தாகவும்,வேறு இட்த்தில்தனியாகவும் இருக்கும்.காளான் இதழ்களின் அடியில் குனிந்து பார்ப்போம்.மிக வெண்மையாகஇருந்தால் அது நல்ல காளான் உண்பதற்கு ஏற்றது.
காளானை சுற்றிமண்ணை பறிக்க ஆரம்பிப்போம். தண்டு வரை முழுமையாக எடுப்பது சவால்.வீட்டுக்கு கொண்டுவந்தவுடன் அன்றைய மெனு மாறிப்போகும்.மிக அதிகமாக கிடைத்தால் பக்கத்துவீட்டுக்கும்உண்டு.கிட்ட்த்தட்ட கறிக்குழம்பு சமையல்தான்.மசாலா தயாராகும்.தயாராகும் வரை மனசுகாளானையே சுற்றிக்கொண்டிருக்கும்.எப்போதும் கிடைக்காத அபூர்வமான விஷயம்.குறிப்பிட்டகாலத்தில் இயற்கை தரும் அற்புதம்.அப்படி ஒரு சுவை.இப்போது செயற்கையாக தயாரித்துபாலிதீன் பாக்கெட்டில் வருகிறது.அரசு வேளாண்மை நிறுவன்ங்களில் பயிற்சிதருகிறார்கள்.உறவினர் ஒருவருடன் நானும் ஒரு நாள் பயிற்சிக்கு போனேன்.
 
காளான்நல்ல உண்வென்று சொன்னார்கள்.உடலுக்குத் தேவையான நல்ல பல சத்துக்கள்அடங்கியிருக்கின்றன.நாம் சாப்பிடும் குளுக்கோஸில் சேர்க்கப்படும் வைட்டமின் டிஇதில் உள்ளது.பி வைட்டமின்களும் இருக்கிறது.உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுஉப்புக்களும் நிறைந்திருக்கிறது.அதிகமாக புகழ்ந்து பேசினார்கள்.ஆனால் உண்மையானவிஷயம்தான்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.அப்படிப்பட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதேநல்லது.எனக்கு கொடுத்த பயிற்சி வீணாக போய்விட்ட்து.நான் குடிசைத்தொழிலாகசெய்யவேயில்லை.நன்மை பயக்கும் உணவுப்பொருளை உணவில் சேர்ப்போம்.குடிசைத்தொழில்வளர்ச்சிக்கு உதவியது போலவும் இருக்கும்.
Read more >>

Saturday, 24 December 2011

யோகா முத்திரைகள்

 
 
 


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த
"பஞ்ச மஹாபூதங்கள்" ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் "ஈதர்" என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. "பத்மாசனம்" போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு "சூன்ய முத்திரை". இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி 'பிராண முத்திரையுடன் செய்தால்' தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
Read more >>

Thursday, 22 December 2011

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

 
பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் '' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
Read more >>

Popular Posts