Followers

Tuesday, 8 May 2012

உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி!




மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந் து இவற்றைச் சமைக்க வேண்டும்.
ஆட்டின் தலை:
இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்.
ஆட்டின் கண்:
கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.
ஆட்டின் மார்பு:
கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்.
ஆட்டின் இதயம்:
தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்.
ஆட்டின் நாக்கு:
சூட்டை அகற்ற� �ம். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்.
ஆட்டின் மூளை:
கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.
ஆட்டின் நுரையீரல்:
உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.
ஆட்டுக் கொழுப்பு:
இடுப்புப் பாகத்திற்க� �� நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்.
ஆட்டின் குண்டிக்காய்:
இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.
ஆட்டுக்கால்கள்:
எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.

No comments:

Post a Comment

Popular Posts