வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருக்கு மறு ஜென்மம் உண்டா இல்லையா என்பது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
ஜென்ம லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால் இதுவே அவருக்கு கடைசி பிறவியாகும்.
- மேலும் ஜெனன லக்னாதிபதி சூரியன் ஆனால் அவருக்கு மறு ஜென்மம் கிடையாது.
- ஜெனன லக்னாதிபதி சந்திரன் ஆனால் அவருக்கு மறு ஜென்மமும் மானுட பிறப்பாகும்.
- ஜெனன லக்னாதிபதி செவ்வாய் ஆனால் அவர் மறு ஜென்மத்தில் சைவ மதத்தவனாக பிறப்பான்.
- ஜெனன லக்னாதிபதி புதன் ஆனால் அவர் மறு ஜென்மத்தில் வைஷ்ணவ மதத்தவனாக பிறப்பார்.
- ஜெனன லக்னாதிபதி குருவானால் அவர் மறு ஜென்மத்தில் பிராமணனாக பிறப்பான்.
- ஜெனன லக்னாதிபதி சுக்ரன் ஆனால் அவர் மறு ஜென்மத்தில் அரச குலத்தில் பிறப்பான்.
லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால் அவருக்கு இதுவே கடைசி பிறவி என்று சொல்லி இருந்தேன். இந்த பன்னிரெண்டாம் இடத்தின் மூலம் ஒரு ஜாதகருக்கு எதன் மூலம் அவருக்கு செலவு உண்டாகும் என்பதை பற்றி காண்போம்.
லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சூரியன் இருந்தால் அரசாங்கத்தின் மூலமாய் பண செலவும், செவ்வாய் இருந்தால் எதிரிகள் மூலமாகவும் செவ்வாய் வலு அற்று( பகை வீடு , அல்லது நீச்சம்) இருந்தால் சகோதரர் வழி மூலமாக பண செலவும் புதன் இருந்தால் படிப்பின் மூலமாய் பண செலவும். செய்யும் வியாபாரத்தின் மூலமாக பண செலவும் சனி அல்லது கேது இருந்தால் பல வகையிலும் பண செலவும் உண்டாகும். இந்த பன்னிரெண்டாம் இடத்தில் குரு இருந்தால் எப்பொழுதும் பணம் சேர்ப்பான் அப்படி சேர்க்கப்படும் பணத்தை தரும காரியங்களுக்கும் ஆன்மீக வழியிலும் செலவழிப்பான். மேலும் அவர்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இந்த இடத்தில் சுக்ரன் இருந்தால் மனைவி வழியாகவும், மனைவி வழி உறவு வகை மூலமாகவும் பணம் செலவாகும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் +91 8122733328 . இந்தியா. தமிழ் நாடு
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
ஜோதிடர் ஆர். ராவணன் BSC
இந்தியா. தமிழ் நாடு
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
No comments:
Post a Comment