பூண்டு லேகியம்!
தேவையான பொருள்கள்:
பூண்டு - 1/4 கிலோ, பசும்பால் - 3 தம்ளர், சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி - தலா கொஞ்சம்.
நெய் - 1டேபிள் ஸ்பூன், கல்கண்டு - 500 கிராம்
செய்முறை:
பூண்டைத் தோல் நீக்கி பசும்பாலில் வேகவைத்து மசித்து, அதே பாலில் கலக்கவும். பிறகு சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து பூண்டு பாலில் சேர்க்கவும். மிதமான தீயில் பூண்டு விழுதை வைத்து நெய், கற்கண்டு போட்டு, அடிபிடிக்காமல் கிளறினால் அல்வா லேகியம் போன்று சுருண்டு வரும். இதுவே லேகி யம்.
கர்ப்பக் காலத்தில் தினமும் இரவில் குறிப்பாக எட்டாம் மாதத்திலிருந்து பூண்டு லேகியத்தைச் சாப்பிட்டு வந்தால், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் வாயு தங்காமல் ஆரோக்கியமாக இருக்கும்.
No comments:
Post a Comment