உடல்பருமனுக்கு எளிய முறையில் விடைகொடுக்கிறது புரதம் என்கின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள். குண்டுப்பிரச்னையில் சிக்கி தவிப்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஆம் உலகில் பெரும்பாலானவர்களின் தலையாய பிரச்னை இதுதான் என்பதால் இது குறித்த தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று அதிக அளவு புரதம் எடுத்துக் கொள்வது குண்டுப்ரச்னைக்கு தீர்வாகிறது என்று தெரிவித்துள்ளது.
உடல் பருமன் குறைப்பில் ஈடுபடுபவர்கள் பட்டினி கிடப்பதாலும், கலோரி அளவைக் குறைப்பதாலும் மட்டுமே இளைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் வெளியாகி உள்ள தகவல் இது. இது குறித்து வெளியாகி உள்ள தகவல் வருமாறு -உடல்பருமன் குறைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைந்த கலோரி உள்ள அதிகப்புரதம் இதற்கு எளிய தீர்வாவது தெரியவந்துள்ளது. டயட் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படும் குறைந்த கலோரி உணவுகளால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.
வரும் முன் காப்போம் என்பதற்கிணங்க உடல் பருமனாகும் முன்னரே கார்போஹைட்ரேட், அதிக கொழுப்புள்ள உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சைக்காய்கறிகள், அதிகப்புரதம் உள்ள உணவுகள் எப்போதுமே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். உடல்பருமனாவதில் இருந்தும் இத்தகைய உணவுகள் பாதுகாக்கும்.
மேலும் ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு, தொடர் உடற்பயிற்சி, அவ்வப்போதைய மருத்துவ அறிவுரை ஆகியவை உடல் பருமன் பிரச்னையில் இருந்து பாதுகாப்பளிப்பதுடன் ஆரோக்கியமான வாழக்கைக்கும் வகைசெய்யும்.

No comments:
Post a Comment