Followers

Monday 31 October 2011

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!

 
 

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.

செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.

தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ...

செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.

ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாமுங்கோ, தப்பே இல்லை!) செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.

அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.

அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி என்கிறார்கள் டாக்டர்கள். செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப் பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.

விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி 'பை' வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம். தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.

இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம். தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.

எழுச்சி அல்லது எரக்ஷன் என்பதை டாக்டர்கள் ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே. அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுதவிர தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.

இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

No comments:

Post a Comment

Popular Posts