சில சமயங்களில் நமக்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பழைய உணவுகளால் நமது உடம்பில் விஷத்தன்மை சேருகிறது. அதனால் எலும்புகளில் வலி, கண்களில் எரிச்சல், தலைவலி, மூச்சு பாதிப்பு, மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவைகளை உடனே கவனிக்காமல் விட்டால் நீண்ட நாள் தொடர்ந்து இன்னும் மோசமான விளைவுகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. அப்படியே மேலும் தீவிரம் அடைந்து உயிரிழப்பும் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
என்ன செய்யலாம்:
அழுகிய இறைச்சி, பழைய உணவுப் பொருட்கள் போன்றவைகளால் விஷம் உண்டாகிறது. நாம் உண்ட உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள். சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள். தாகம் எடுத்தால் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாற்றை ஒரு தம்ளர் பருக வேண்டும். பின்னர் ஓய்வெடுக்க கொஞ்ச நேரம் படுக்கையில் படுக்கலாம். இனிமா எடுத்துக் கொண்டாலும் நல்லது தான்...
மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. விஷத்தன்மை இருந்தால் அதிக நாட்கள் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம். இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.
thanks:http://tamilvaasi.blogspot.com/2011/10/blog-post_12.html
No comments:
Post a Comment