Followers

Friday 3 August 2012

கேரட்டின் மருத்துவ குணங்கள்







காய்கறிகளில் மிகவும் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும், அனைவருக்கும் பிடித்ததுமாக இருப்பது கேரட்.
கேரட் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய உணவுப்பொருளாகும். அந்த கேரட்டின் வேர் சற்ற� � மொறுமொறுப்புடனும், சுவையாகவும் இருக்கும்.

சொல்லப்போனால் இது ஒரு சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் கேரட்டில் அந்த அளவு ஊட்டச்சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன.

மேலும் இதனை டயட்டில் இருப்பவர்கள், தங்கள் உணவுப் பொருட்களில் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டால் போதும், உடல் எந்த ஒரு நோயும் வராமல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும்
என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பார்வை குறைபாடு: கேரட்டை சாப்பிடும் போது அதில் உள்ள பீட்டா கரோட்டீன் என்னும் பொருள், வைட்டமின் ஏ-ஆக மாறிவிடுகிறது.

அந்த வைட்டமின் ஏ பார்வை குறைபாட்டை நீக்குவதோடு, கண்களும் நன்கு தெரியும். இந்த வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான், மாலைக்கண் நோயானது வருகிறது.

ஆகவே இதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தே� ��ையான வைட்டமின் ஏ சத்து உடலுக்கு கிடைப்பதோடு, பார்வையும் நன்கு தெரியும்.

புற்றுநோய்: கேரட்டில் அதிகமான அளவு கரோட்டீஸ் இருப்பதால், அதை சாப்பிடும் போது தற்போது அதிகமாக உடலில் வரும் நோயான மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

மேலும் அதன் வேர்களில் ஃபால்கரினால் என்னும் பொருள் இருப்பதால், செடிகள் அழியாமல் தடுக்கிறது. மேலும் அந்த பொருள் கேரட்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையுடையது. ஆகவே இந்த கேரட்டை டயட்டில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

இதய நோய்: மருத்துவர்கள் தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஏனெனில் அதில் பீட்டா கரோட்டீன், ஆல்பா கரோட்டீன் மற்றும் லுட்டீனின் போன்றவை அதிகமாக உள்ளன.

இவை இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன. ம� �லும் உடலில் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். அதிலும் ஒரு ஆய்வில், கேரட்டை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஊட்டச்சத்துக்கள், உடலில் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பற்கள்: நல்ல பளிச்சென்ற அழகான பற்கள் வேண்டுமென்றால், அதற்கு சிறந்தது கேரட் தான். இதை சாப்பிட்டால் பற்கள் மற்றும் ஈறுகள் நன்கு சுத்தமாவ தோடு, நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சொல்லப்போனால் அதை ஒரு இயற்கை  டூத் பிரஷ் என்றும் சொல்லலாம். அதிலும் இதனை உணவு உண்டப் பின் சாப்பிட்டால், பற்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் பிளேக் போன்றவை எளிதில் நீங்கும்.

நீரிழிவு: உடலுக்கு கேரட் ஆரோக்கியத்தை தருவதோடு, நீரிழிவை நோயை எதிர்த்து குணப்படுத்தும் ஒரு சிறந்த உணவுப்பொருள்.

அதில் உள்ள கரோட்ட� �னாய்டு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை குறைக்கும். ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது ஒரு சிறந்த மருத்துவப் பொருள்.

அதிலும் இதனை தினமும் அப்படியே அல்லது ஜூஸ் செய்து குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே கேரட்டை சாப்பிட்டு, உடலை பிட்டாக மட்டும் வைக்காமல், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 < /span>





No comments:

Post a Comment

Popular Posts