நமது சருமத்தை மிருதுவாக்கி, முகத்திற்கு அழகு கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப ்போட்டா பழத்தின் அழகு குறிப்புகளை பார்க்கலாம்..
• ஒல்லியாக இருப்பவர்களுக்கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீ ஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப் பூசுங்கள். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம், கைக� ��ை பொலிவாக்குவதுடன் பூசினாற் போலவும் காட்டும்.
• சிலருக்கு கன்னங்கள் ஒட்டிப்போய் இருக்கும். அவர்கள் சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ்பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந� ��த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங்கள்.
தடவிக் கொண்டிருக்கும்போதே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்பட� �� செய்து வந்தால் உங்கள் கன்னம் பளபளவென பூசினார் போல் இருக்கும்.
• எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே. என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப்போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் 'பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் 'ப்ளீச்' செய்ததுபோல பளிச்சென்று இருக்கும்.
No comments:
Post a Comment